க‌ண்ணீரால் ஒரு க‌டித‌ம்
My Community
February 22, 2018, 05:56:01 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: க‌ண்ணீரால் ஒரு க‌டித‌ம்  (Read 670 times)
thamilan_sl
Guest
« on: December 21, 2010, 04:23:20 AM »

என் ம‌ன‌ம் உன்னால்
உடைந்த‌ வ‌ளைய‌ல்க‌ள் ஆகிவிட்ட‌ன‌
அத‌ற்காக‌ நான் வ‌ருந்த‌வில்லை
என் க‌விதை என்ற‌
க‌லைடாஸ்கோப்பில் அது
ஆயிர‌ம் வ‌ர்ண‌க் கோல‌மாய்
அவ‌த‌ரித்துக் கொண்டேயிருக்கிற‌து

தினமும் பேசும் நீ
பலநாள் வரவில்லை
ஏன் என்று கேட்டதற்கு
எனக்கு நீ தரும்
அதிர்ச்சி வைத்தியம்( shock treatment )என்றாய்
உனக்குத் தெரியாதா
மரக்கட்டையை மின்சாரம் ஒன்றும் செய்யாது
உன்னால் என்றோ நான்
உணர்வுகளை இழ‌ந்த மரக்கட்டை
ஆனவன் நான்

இப்போது நான்
உன்னை அல்ல‌
பிரிவைக் காதலிக்கிறேன்
அது உன்னைப் போல‌
பிரியாதல்லவா
« Last Edit: December 21, 2010, 09:05:57 AM by thamilan » Logged
H4ppY
Golden Member
*******
Posts: 3045


« Reply #1 on: December 21, 2010, 05:11:27 AM »

அண்ணா கவிதை நல்ல இருக்கு.
ரொம்ப சோகமாவும் உருக்கமா இருக்கு அண்ணா..
அண்ணா இது அதிர்ச்சி வைத்தியம்னு எனக்கு தெரில்ல அண்ணா...
நிரந்தர பிரிவுக்கு இப்போவே ஒத்திகைய இருக்குமோ??
 உன்னால்  நான் உணர்வுகளை இழ‌ந்த மரக்கட்டை
சொல்லி இருக்க... உணர்வை இழந்த பின்பும் இப்படி கவிதை வடிவில்
உன் உணர்ச்சியை காண்பிக்கிறாய்...உன் அன்பின் வெளிப்பாடு இது தான் போல...
மறந்து விட்டாய் சொல்லி உன் உணர்சிகளை மறைக்க முயற்சிக்கிறாய்...

இப்போது நான்
உன்னை அல்ல‌
பிரிவைக் காதலிக்கிறேன்
அது உன்னைப் போல‌
பிரியாதல்லவா...
உருக்கமான வரிகள் அண்ணா....முற்றில்லும் உண்மை அடங்கி இருக்கிறது....
 
Logged
thamilan_sl
Guest
« Reply #2 on: December 21, 2010, 09:10:00 AM »

happyma
nee marupadi forum vanthathai manasuku santhosama eruku.
natpum kathalum silaruku poluthu pooku. enaku suvaasa muchi. matavangala namala matha mudiyathu. naam marama erupom
Logged
H4ppY
Golden Member
*******
Posts: 3045


« Reply #3 on: December 21, 2010, 12:54:52 PM »

அண்ணா அதுவும் சரிதான்....என்ன அண்ணா செய்வது?
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே அண்ணா...
எதாவது ஒரு வடிவில் அது கண்டிப்பா உன்னை வந்து அடையும் அண்ணா...
அது போல தான் அண்ணா...செலுத்தும் அன்புக்கு அவர்கள் சரியனர்வர்கள் தான
என்பதையும் சிந்திக்கவேண்டி இருக்கு அண்ணா...மத்தவங்க அப்படி இருக்காங்க என்பதை பார்ப்பதை விட....நாம் சரியாக இருக்க வேண்டும் எந்த காலகட்டத்திலும் நாம் நாமாகத்தான்
இருக்கவேண்டும்...உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இருக்ககூடாது அண்ணா...
உன்னை  நினைக்கும் பொது பெருமையா இருக்கு அண்ணா எனக்கு....
Logged
பிரியமானவள்
NTC Team
Super Hero Member
******
Posts: 1858


இதயம் ரோஜா போல் இருந்தால்,பேச்சில் வாசனை 


« Reply #4 on: December 22, 2010, 08:21:49 AM »

அழகான அமைதியான அழுவாச்ச்சி கவிதை
Logged

kannamma
Full Member
***
Posts: 235« Reply #5 on: December 23, 2010, 12:44:17 PM »

nee evvaru iruppinum, naan naanaakave irukkiren.iruppen....enru solkira varikal superb thamil.
Logged

கண்ணம்மா
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!