கவிதையும் கானமும் 18 10 11
My Community
July 29, 2014, 02:32:56 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: கவிதையும் கானமும் 18 10 11  (Read 538 times)
Goodboy
Guest
« on: October 04, 2011, 09:08:55 PM »அன்னைக்கு என் அஞ்சலி!

அம்மா!
பத்து திங்கள் என்னை
கருவறை சுமந்தவளே

இனி
அந்த கல்லறை
உன்னை
சுமக்கபோகிறதா!

மண்மீது நான் வீழ்ந்தால்
மகனே என மார்போடு அணைத்தவளே
இன்று உன்மீது
மண் விழ
நான் யாரோடு
சொல்லி அழுவேன்?

அம்மா!
என
தூக்கத்தில்
நான்
விசும்ப
துடித்து எழுவாயே!

இன்று
அம்மா என்று
கதறி அழுகிறேன்
நீ மௌனமாய் உறங்குகிறாயே?

பசியை நீ தின்று
எனக்கு பாலூட்டியவளே
கடைசியாய் உனக்கு
பாலூற்றும்
பாக்கியம் எனக்கு கிட்டவில்லையே!

ஊருக்கு நான்
வருகிறேன் என
தபால் போட்டால்
என் மகன் வருகிறான்
என ஊரெல்லாம்
சொல்லிவருவாய்
என அடுத்த வீட்டு
கிழவி சொல்ல
மௌனமாய் புன்னகை பூப்பாயே

உன் மகன்
ஊருக்கு வந்திருக்கிறேன்
ஊரெல்லாம்
சொல்லுதம்மா
ஊமையாய்
உறங்குகிறாயே!

நடை வண்டி
இல்லையென்று
நான் அழுக
கை பிடித்து
நடை பழக வைத்தவளே

உன் சவ
வண்டி நான் இழுக்க
சுகமாய் வா தாயே!

பல்லக்கு தூக்கி
என்னை பாராட்டி
வளர்த்தவளே

அந்த பள்ளத்தில்
உனைவிட்டு
பரிதவித்து கிடக்கின்றேன்

சுகமெல்லாம் எனை சேர
சோகமெல்லாம் நீ சுமந்தாய்!
இனி சுகமாய்
உறங்கு தாயே!

அம்மா!
அடுத்த பிறவி
இருந்தால்
நீயே என் தாயாக வேண்டும்............

சொர்க்கத்தில் நிச்சயமாய்
உனக்கொரு இடமுண்டு
இனியாவது
சுகமாய் இரு தாயே!
« Last Edit: October 18, 2011, 11:49:47 PM by ILaKKiYaN » Logged
jaskutty
Guest
« Reply #1 on: October 04, 2011, 09:31:55 PM »

என் உயிர் நீ


அன்பே,

என்னை உயிரோடு புதைத்து விடு
என் உடல் தயங்குவதில்லை !

என்னை தீயில் தள்ளி விடு
என் மேனி அஞ்சுவதில்லை !

அனால் என்னை விட்டு செல்லாதே
என் உயிர் தாங்குவதில்லை
நீண்ட நாள் உன்னை பிரிந்து
வாழ்வதில்லை !

பிரிவு கூட பெரிது அல்ல
உன் நினைவுகள் இருக்கும் வரை..

மரணம் கூட  நீங்குவதில்லை
என் உயிர் நீ வாழும் வரை!!
« Last Edit: October 05, 2011, 07:42:14 PM by jaskutty » Logged
ooviya
Hero Member
*****
Posts: 931


கண்களே ஆண்களை நம்பாதே


« Reply #2 on: October 04, 2011, 09:40:12 PM »

கற்பனை கணவன்

நெற்றி பொட்டில்
செல்லமாக முத்தமிட்டு...
கையில் காபி யுடன்
என்ன வந்து எழுப்புவார்..
சின்ன சினுக்களுடன்
அத்தான் என்றேன் !!
கண்ணமா என்றார் !!

காலை பொழுது நான்றாக விடிந்தது
ஆயிரம் பட்டம்பூசிகள்
என் மனதில் குடி கொண்ட
சந்தோஷத்தில்...
மான் போல் துள்ளி துள்ளி
வீட்டு வேலைகளே முடித்தேன்.

மாலையும் வந்தது
கண்களில் காதலுடன்
என் கணவருக்காக
வழி மீது விழி வைத்து
காத்திருந்தேன்...

அதோ அத்தான் வந்துவிட்டார் !!
மெல்ல அனைத்து முத்தம் இட்டு
என் கூந்தலில் மல்லிகை பூ சுட்டினார்.
 
அந்தி சாயும் அந்த மாலை பொழுதில்
இருவரும் கைகோர்த்து
நிலா வெளிச்சத்தில்
தென்றல் காற்று வீச
மெல்ல நடந்து செல்கிறோம்
மௌனங்களே மொழி பெயர்த்து கொண்டு !!!
« Last Edit: October 06, 2011, 01:03:09 AM by ooviya » Logged
பிரியமானவள்
NTC Team
Super Hero Member
******
Posts: 1865


இதயம் ரோஜா போல் இருந்தால்,பேச்சில் வாசனை 


« Reply #3 on: October 05, 2011, 08:58:33 AM »

முடிந்தால்

என் பேனாவுக்கு
உன் காதல் மைகளை
ஊற்றினாய்

வந்து விழுந்தது
கவிதை சிற்பங்கள்
கண்ணீரை சுமந்து கொண்டு

என்
சிரிப்பை தொலைத்தது
உன் நினைவுச்
சுவடுகளில்

முடிந்தால்
சேதி அனுப்பு
உனக்குள்
நான்
இன்னும்
இறந்து கொண்டிருகிறேனா  என்று!!!!
« Last Edit: October 05, 2011, 11:40:31 AM by PriyamanavaL » Logged

srikanthsri
Guest
« Reply #4 on: October 05, 2011, 09:38:58 AM »

தோல்வியை கண்டு துவழாதே - என்
அன்புத் தோழா
தோல்வியை நீ எங்கெல்லாம் காண்கிறாயோ - நீ
அங்கெல்லாம் வெற்றி காண்பாய்
தோல்வி என்பது வெற்றியின்
முதற்படி என்பதை புரிந்துகொள்....- நீ
என்றுமே வெற்றி காண்பாய்
சோர்ந்து போகாதே
ஆனால்
முயற்சிசெய்ய தாமதியாதே
இலட்சியத்தை மனதிட்கொள் - நீ
என்றுமே வெற்றியெனும் முடிவைக்கான்பாய்
சோகமா...?
இதனை இன்பமாய் ஏற்றுக்கொள்.......
இன்பங்கள் உன்னை தேடிவரும்....
வாழ்க்கையின் சிகரத்தை நீ அடைவாய்.....
இத்தனை அம்சங்களும் உன்னிடத்தில்
கொண்டாயானால்....
வாழ்க்கையின் சிகரத்தையே நீ அடைவாய்...!!

மனம் தான் மிருகம் 
குணம் தான் அதன் உருவம் 

இரண்டும் மிளிர்கையில்
இதயம் திறந்து இமையின் 

விழிகளில் வழியும் கண்ணீர் 
தான் நினைவுகளை மறக்கும்

நித்திரை கடல் இதில் 
நீந்ததவர்கள் யாருமில்லை ...!
« Last Edit: October 08, 2011, 06:10:59 AM by SonymaX » Logged
Bavani
Junior Member
**
Posts: 66


« Reply #5 on: October 05, 2011, 10:43:34 AM »

நினைவுகள் நினைவுகளை மட்டும் நிஜங்களாய்

நிறுத்தி விட்டு நீ மட்டும் தொலைதூரம்

சென்றுவிட்டாய் நான் மட்டும்

இங்கே நினைவுகளை அணைத்து

கொண்டு உயிர் விட துடிக்கிறேன்................


ஏமாற்றம் தான் என்

வாழ்வு என்று புரிந்தும்

ஏமாறுகிறேன் உன்மேல்
 
அன்பு வைத்து
[/color]


உன் உருவத்தை என் இதயத்தில் செதுக்கி வைத்தேன்.

அதே போல் என் உருவத்தை,,,

உன் இதயத்தில் செதுக்கி வைப்பாய்

 என்று நினைத்தேன்.........

பின்புதான் தெரிந்தது உனக்கு

 இதயமே இல்லையென்று......


« Last Edit: October 06, 2011, 08:42:47 PM by Bavani » Logged
Idiot
Anonymous
Senior Member
*
Posts: 449


அன்னையின் அன்பில் சொர்க்கத்தை காண்கிறேன


« Reply #6 on: October 05, 2011, 11:48:04 AM »

<a href="http://www.youtube.com/v/1oj2tcT3e6A" target="_blank">http://www.youtube.com/v/1oj2tcT3e6A</a>


விவசாயி

அதிகாலைப்   பொழுது

பசுமையான   வயல்வெழி

பனித்    துளிகள்  முத்துக்களாய்  இலையின் மேல்

இருளை  மெல்ல  மெல்ல  வெளுச்சம்மாக்கி  கொண்டிருந்தது  சூரியன்

 

அருகில்

கருத  உடலில்ன்  மேல்  முத்துகளாய் நீர்த்    துளி

இலைகளில்  இருப்பது  போலவே !

 ஆனால்  சிறிது  வித்தியாசம்

இலைகளில்  பனித்    துளி

அவனது  உடலில்  வியர்வைத்  துளி

ஆம்

அந்த  குளுமையான  அதிகாலைப்   பொழுதிலும்

அவனது  கடின  உழைப்பினால்  வெளிவந்த  வியர்வைத்    துளி !!!

இன்றாவது   மழை  பெய்திடும்மா  என்று

 இன்றும்  மனம்  உருகிய  படியே  வயல்வெளியில்..

 

அந்தி  மாலை  நேரம்

மெல்ல  மெல்ல  ஓய்வெடுக்கும்    சூரியன்

தொடர்ந்து  உழைத்துக்  கொண்டிருக்கும்  ஓய்வற்ற  விவசாயி

மழைத்  துளியை  எதிபார்த்து  ஏமார்ந்து  சிந்தும்  கண்ணீர்த்   துளியுடன்...

 

இந்த  வருடமும்  ஒருவேளை   உணவு  மட்டுமே  உண்ண  முடியும்  என்று  புலம்பும்

நம்  மூன்றுவேளை   சிலருக்கு  ஆறுவேளை

அரு   சுவை   உணவிற்க்கு சொந்தக்காரன்!!!
« Last Edit: October 05, 2011, 03:27:09 PM by Idiot » Logged


யாரையும் அதிகமாக நேசித்தும் விடாதே; வெறுத்தும் விடாதே
!!Napster!!
Guest
« Reply #7 on: October 05, 2011, 11:53:41 AM »

நீ...

எனக்கு நீ கிடைக்கும் வரை
நான் ஒரு மிருகம்
இன்று நான் ஒரு மனிதன்........

காதலின் அர்த்தம் சொன்னாவள்-நீ
காமத்தின் எல்லைகள் கற்பித்தவள்-நீ
கண்களில் கவிதை எழுதுபவள் நீ......

சத்தங்கள் யாவும் சங்கீதமாக எனக்கு
உணரவைத்தவள் -நீ
சதங்களை விட வாழ்வை புரியவைப்பவள் நீ....

அழகு இல்லை வாழ்க்கை அது
அறிவு என்று சொல்வபள் நீ
மறைப்பதில்லை வாழ்க்கை -மனதை
திறப்பதுதான் வாழ்க்கை என்று புரியவைத்தாய் நீ....

நீ குருவுமில்லை என் கருவுமில்லை-ஆனால்
என் வாழ்வின் ஓளிவிளக்கு நீ
பிரிதல் இல்லை வாழ்க்கை -அது
புரிதல் என்று புரியவைத்தாய் நீ.......

கவிதை என்ற என் தேடலுக்கு -எனக்கு
விளக்கம் தந்தாய்- காதல்
இல்லை கவிதை -கவிதைதான்
காதல் என்று.....................
« Last Edit: October 08, 2011, 02:26:51 PM by AGaThiYaN » Logged
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.6 | SMF © 2006-2008, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!