"அவன், அவள், இவன், இவள்" பாடல்கள்
My Community
May 26, 2013, 11:28:46 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: "அவன், அவள், இவன், இவள்" பாடல்கள்  (Read 172 times)
அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« on: May 08, 2012, 12:19:14 PM »

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா



அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
« Last Edit: May 08, 2012, 12:26:49 PM by அஷ்வி » Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #1 on: May 08, 2012, 12:21:00 PM »

Movie name: Nerukku Ner (1997)
Music: Deva
Singer(s): Hariharan, Shagul Hameed
Lyrics: Vairamuthu


 

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #2 on: May 08, 2012, 12:22:36 PM »

Movie name: Vinnaithaandi Varuvaayaa (2010)
Music: A.R.Rahman
Singer(s): Devan Ekambaram, Chinmayi
Lyrics: Thamarai

   

 
அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #3 on: May 08, 2012, 12:23:44 PM »

Movie name: Unnudan (1998)
Music: Deva
Singer(s): S. P. Balasubrahmanyam, Harini
 

   

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்

மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
தடையம் ஏதும் இன்றி என் இதயம் திருடியவள்

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை

யோசனை செய்வதர்க்கும் அந்த பூ முகம் நினைவில்லை
வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை

திருடி சென்றதை திருப்பி தந்தால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடி சென்றவள் திரும்பி வந்தால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

நீ என்னை தழுவிகொண்டாள் என் நெற்றிக்கும் இனிக்கும் அடி
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே தங்கம் தண்ணீரில் விளையும் அடி
மாறாப்பை சரியாவிட்டு உந்தன் மார்போடு படரும் கோடி
பேரின்ப கவி எழுத கம்பன் பிறக்காட்டும் பழய படி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீள இரவை நீள செய்து பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #4 on: May 08, 2012, 12:27:33 PM »

Movie name: Deiva Thirumagan (2011)
Music: G. V. Prakash Kumar
Singer(s): Haricharan
Lyrics: Na. Muthukumar

   

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
ஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்

இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
முன்னம் ஒரு சொந்தம் வந்து மலை ஆனதே

மலை நின்று போனால் என்ன மரம் தூவுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே ............
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு விம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதை இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ...............
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே......
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தொற்குதே.......
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #5 on: May 08, 2012, 12:28:33 PM »

Movie name: Kizhakku Karai (1991)
Music: Ilaiyaraja
Singer(s): S. P. Balasubrahmanyam, Chithra
Lyrics: Vaali
   

ஆண் : ம்கும்..ஐ லவ் யூ..லவ்யூ
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஓ..


பெண் : ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

(இசை) சரணம் - 1

பெண்குழு : லாலாலா லா லா
லாலாலா லா லா லா

ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

பெண் : ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அனல் மூச்சு வாங்கினாள்

ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு

பெண் : உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெப்பம் உண்டாச்சு

ஆண் : மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு

பெண் : உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

(இசை) சரணம் - 2

பெண்குழு : லாலா லாலலா
லாலா லாலலா

பெண் : நீ சூட்டும் பூவுக்காக
நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக
நடுநெத்தி வாடுது

ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே
உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலோடு கூடுது

பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

பெண் : அடங்காது ஆசைக்கொண்டு
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்

ஆண் : ஆ ஆ ஆஹா

பெண் : என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஆண் : ஆ ஆ ஆஹா

பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஒ..

ஆண் : ஆஆ..ஆஆ..ஆஆ.
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #6 on: May 08, 2012, 12:29:49 PM »

யாரோ இவள் இவள் யாரோ பாடல் வரிகள் - கனிமொழி
படம்: கனிமொழி
இசை: சதீஷ் சக்கரவர்த்தி
பாடியவர்: முகேஷ், பெல்லா செண்டே, பார்த்தீவ் கோகில்
வரிகள்: நா. முத்துக்குமார்



யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ
(யாரோ..)

என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ
உன் காதல் நீ சொல்லடா ஏன் இந்தக் கூச்சம்
தன் காதில் நான் சொன்னதை பூங்காற்றுமே போய் சொல்லுமோ
வேண்டாம் உன் தூண்டாடுதே ஓர்ப்பார்வை போதும்
உன் பார்வை கல்லாகுதே என் கால்கள் தள்ளாடுதே
கொண்டாடு கொண்டாடு அன்பே
தேணுண்ட வண்டாகிறேன்
நீ தூண்ட தேன் ஆகிறேன்
கொண்டாடு திண்டாடு அன்பே ஹே ஹே ஹே
(யாரோ..)

காற்றோடு நான் கேட்கிறேன் உன் வாசனை மூச்சாகுமோ
உன் சுவாசக்காற்றோடுதான் என் வாசம் விடும்
கனவோடு நான் கேட்கிறேன் உன் காலடி தினம் கேட்குமோ
கனவென்னை நிஜமாகவே என் கைகள் தீண்டும்
ஹே ஹே உன் பாதி நானாகவே என் பாதி நீயாகவே
கொண்டாடு கொண்டாடு அன்பே
ஒருப்பிள்ளை அணைப்போடுதே மறுப்பிள்ளை எனைக்கூறுதே
கொண்டாடி திண்டாடு அன்பே ஹே ஹே ஹே
(யாரோ..)
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #7 on: May 08, 2012, 12:33:19 PM »

படம் : அலை
பாடல் : என் ரகசிய கனவுகள்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி



என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?
மழை போலே வருவானா?
மடி மேலே விழுவானா?
மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?

ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா…
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவளா?
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?—

தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா?
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா?

வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்

கன்ன குழிகள் தான் காதல் தேசமா?
ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா?
இவள் தானா? இவள் தானா?
இவளோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவளா?
மழை போலே வருவாளா?
மடி மேலே விழுவாளா?

மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா?இவள் தானா?

இவனோடு இணைவேனா?இவன் தானா?
இவள் தானா?
இவனோடு இணைவேனா?
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #8 on: May 08, 2012, 12:35:05 PM »

படம்      :   ஆச்சார்யா   (Aacharya)
பாடல்     :   ஒரு துளி இரு துளி  (Oru Thuli Iru Thuli  )
பாடியவர்  :   திரு.S.P.பாலசுப்ரமணியம்.
இசை      :   ஸ்ரீ காந்தேவா



ஒரு துளி இரு துளி மழைத்துளி விழுந்தது
இவனது பாலைவனம் பூ பூக்க
இதுவரை இதுவரை விலகிய வாழ்க்கை
வாசலில் வந்து வரவேற்க்க
ஒரு துளி இரு துளி மழைத்துளி விழுந்தது
இவனது பாலைவனம் பூ பூக்க
இதுவரை இதுவரை விலகிய வாழ்க்கை
வாசலில் வந்து வரவேற்க்க
மனிதர்கள் இவனை நேசிக்க
முதல் முறை உதடுகள் புன்னகைக்க
மனிதர்கள் இவனை நேசிக்க
முதல் முறை உதடுகள் புன்னகைக்க
ஊருக்குள் அன்று இவன் வந்த போது
உறவென்று சொல்ல யாரும் இல்லை
ஊரே இன்று உறவாய் போனது
இவன் துணை இன்றி எதுவும் இல்லை
போர்களத்தில் தேரை ஆள்கிறான்
புரிந்து கொள்ள கீதை சொல்கிறான்
போர்களத்தில் தேரை ஆள்கிறான்
புரிந்து கொள்ள கீதை சொல்கிறான்


இரண்டாம் கருவறை இங்கே பார்க்கிறான் இவளும்
இன்னொரு தாய் அல்லவா
இது என்ன உறவு தோழி மட்டும் இல்லை
அதையும் தாண்டி வேறல்லவா
இரண்டாம் கருவரை இங்கே பார்க்கிறான் இவளும்
இன்னொரு தாய் அல்லவா
இது என்ன உறவு தோழி மட்டும் இல்லை
அதையும் தாண்டி வேறல்லவா
தாயுக்கு மகன் செய்யும் ஈமச்சடங்கினை
தாயே பார்ப்பது வியப்பல்லவா
தீண்டிய பொருளில் ரேகைகள் தேடி
தொலைவதும் ஒரு வித சுகமல்லவா
கரடு முரடு நெஞ்சில் நுழைகிறான்
கற்றுக் கொடுத்து ஆசான் ஆகிறான்
கரடு முரடு நெஞ்சில் நுழைகிறான்
கற்றுக் கொடுத்து ஆசான் ஆகிறான்




தெருவினில் தொலைத்ததை தெய்வத்தின் மடியில் பார்த்ததும்
ஒரு வகை சந்தோஷம்
கரைகள் உடைந்து காட்டாற்றைப் போல் அன்பால்
நிறையுது இவன் தேசம்
தெருவினில் தொலைத்ததை தெய்வத்தின் மடியில் பார்த்ததும்
ஒரு வகை சந்தோஷம்
கரைகள் உடைந்து காட்டாற்றைப் போல் அன்பால்
நிறையுது இவன் தேசம்
இருவர் மட்டும் வாழும் உலகிற்க்கு
கூட்டிச் செல்லுது இவள் நேசம்
இவனது வழியும்
இவனது மொழியும்
யுத்தக்களத்தில் இதிகாசம்
இந்த நொடிகள் நீண்டால் நல்லது
இறைவன் வந்து வாழும் இடம் இது
இந்த நொடிகள் நீண்டால் நல்லது
இறைவன் வந்து வாழும் இடம் இது

 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #9 on: May 08, 2012, 12:36:29 PM »

Movie name : 7aam Arivu (2011)
Music : Harris Jayaraj
Singer(s) : Vijay Prakash, Karthik, Shalini, Shruti Hassan
Lyrics : Na. Muthukumar


எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா...
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா...
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க...
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க...

எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா..
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா..
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க...
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க..
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி!
இன்று நானும் உன்னில் விழ , விழி ஈர்ப்பை கண்டேனடி!
ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே , எனை காதல் செய் நண்பனே

உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே

எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா?
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷமா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே...
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க..

சிறு நேரம் இல்லாமலே..
துளி நீரும் இல்லாமலே...
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்..
தோளில் விழாமலே..
கை சிறிதும் படாமலே..
உன் நிழலும் தொடாமலே..
நீ என்னை கொள்ளை இட்டாய்..
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா?
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா..

எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா?
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க....
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #10 on: May 08, 2012, 12:39:44 PM »

படம் : மின்னலே(2000)
பாடியவர்:உன்னிகிருஷ்ணன்,ஹரிணி
பாடலாசிரியர்:
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்



வேறென்ன வேறென்ன வேண்டும்?
ஒரு முறை சொன்னால் போதும்!
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே!
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே!..

ஓ.. மெளனம் மெளனம் மெளனம் மெளனம் ஏன் மெளனம் ஏன்?
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்..

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது? என்ன இது? இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்?

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது? என்ன இது? இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்?


தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு?
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்...

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது? என்ன இது? இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்?
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்?

கால்களின் கொலுசே! கால்களின் கொலுசே! கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிட துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே..

ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா?

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்..

நான் தானே நான் தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியலையே
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலயா?

ஒரு முறை சொல்லி விடு..
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு.....
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #11 on: May 08, 2012, 12:43:20 PM »

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா ஆ
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஆ ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

தென்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக்கரும் கூந்தலும்
தொட்டாடும் மேடைபார்த்து வாங்கிப்போகும் வான் திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் சேர்க்கும் தாமரை
வன்னப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமள் நாணுவாள்
புது பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆ ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஹ ஹஹ ஹ..

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானைச்சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப்பாடி ஒடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாஆஆஆள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாம் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாணம் என்னென்று சொல்வேனோ அதை எப்ப்ப்ப்படி சொல்வேனோ

(என்னவென்று…)
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #12 on: May 09, 2012, 06:53:18 AM »

படம்: போராளி
இசை: சுந்தர் சி. பாபு
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன்



—-
யார் இவன்… யார் இவன்…
யார் இவனோ…

யார் இவன்… யார் இவன்…
யார் இவனோ…

யார் இவன்… யார் இவனோ…
அன்புக்கு முகவரி… தருபவனோ…

மனதை யாருமே சாவிய போட்டு
பூட்டிட முடியாதே…
ஒற்றை பார்வையில் உள்ளம் திறக்குமே
தடுத்திட முடியாதே…
காதல் என்பது விதையை போன்றது
புதைத்திட முடியாதே..
மனதை மோதியே மெள்ள முளைக்குமே
உனக்கது தெரியாதே…

யார் இவனோ……
—-
உன் விழி ஈரம்
உன் மன பாரம்
எல்லாம் அறிந்தானா…
இதற்கென தானோ பூமியில் அவனை
இறைவன் படைத்தானா…
புயலுக்கு நடுவில் பூக்கள் பூப்பதை
உணர்ந்திட சொன்னானா…
உனக்கொரு உண்மை
சொல்வேன் கண்ணே
நீயே அவன்தானா…
சதா… ஹெய்….

யார் இவன் யார் இவன் யார் இவனோ…
உனை வென்று உன்னை மீட்கும்
போர் இவனோ…
பெண்ணே உன் வாழ்க்கையின் வேர் இவனோ..
உன் பேரில் பின்னால் வரும் பேர் இவனோ…
—–
உடைத்திடு இனி விதியெனும் சொல்லை…
உனக்கு இனி அந்த வானம் எல்லை..
உலகினில் உனை வெல்ல யாரும் இல்லை
வாடா வாடா…
உழைப்பவன் விழி உறங்குவதில்லை
துணிந்தவன் வழி இறங்குவதில்லை
வேர்வையில் வரும் வெற்றிக்கு
இங்கே அளவில்லை
வாடா…
பருந்தை போல தினம் மேலேறு..
புலியை போல தினம் நீ சீறு…
உனது பேரை சொல்லும் வரலாறு…
முன்னேறு…

தடையை பார்ப்பதில்லை காட்டாறு
இடையில் எங்கும் அது நிற்காது…
முடிவு உனக்கு இனி கிடையாது
நடை போடு….
—-
(யார் இவன் யார் இவன் யார் இவனோ)
அணை தாண்டி தாவி வரும் நீர் இவனோ….
(யார் இவன் யார் இவன் யார் இவனோ..)
யாரோடும் மோதி பார்க்கும் வேல் இவனோ…
(யார் இவன் யார் இவன் யார் இவனோ..)
தீமைக்கும் நன்மை செய்யும் நல்லவனோ…

உன் திசை வீசும் காற்றினை
யாரும் திருப்பிட முடியாதே..
(முடியாதே…)
விசை உள்ள பந்து மேலே எழுமே
அழுத்திட முடியாதே..
(முடியாதே…)
தசையினில் உனக்கு தேடல் இருந்தால்
தோல்விகள் கிடையாதே…
(கிடையாதே…)
தக தக தகவென எரிவாய் நண்பா
அனைத்திட முடியாதே…
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #13 on: May 09, 2012, 06:55:47 AM »

Movie name: Vengai (2011)
Music: Devi Sri Prasad
Singer(s): Devi Sri Prasad, Karthikeyan
Lyrics: Viveka


 
 

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... ஓ ஒ ஒ ஓ கொல்லாதே.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்... ஓ ஒ

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

காத்திருப்பேன் காத்திருப்பேன், ஆறு மாசம் தான்...,
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்...,
என்னமோ நடக்குது,
இதயம் வலிக்குது,
மனசு தவிக்குது...
உன்னோடய வார்த்தைக்காக.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...  கொல்லாதே.....

சின்னபுள்ள நேசம் இது, பச்சபுள்ள பாசம் இது,
என் மனசை தாக்கியது முன்னால.... முன்னால...
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே... தன்னாலே....

நெசமா... நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன் உன்னோடய வார்த்தைக்காக....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...

வெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே...
கட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்..
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே...

புதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னேடய பார்வையாலே....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...


 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #14 on: May 09, 2012, 06:59:22 AM »

Movie name : Enthiran (2010)
Music : A. R. Rahman
Singer(s) : Hariharan, Sadhana Sargam
Lyrics : Vairamuthu


இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

ராஜாத்தி பூலோகத்தில்
ஆசை தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!
உன் பச்சை தேனை ஊற்றி
என் இச்சை தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே

ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!

நான் மனிதன் அல்ல
அஃற்றினையின் அரசன் நான்
காமமுற்ற கணினி னான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கன் சிங்கம் நான்

எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்

மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று
ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே!

வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவென்னாதே

ஏ ஏழாம் அறிவே!
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் – நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #15 on: May 09, 2012, 07:00:25 AM »

பாடல்:வேறென்ன வேறென்ன வேண்டும்
குரல்:உன்னிகிருஷ்ணன், ஹரிணி



வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓஓ..
ஓ மௌளனம் மௌளனம் மௌளனம் மௌளனமேன் மௌளனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா யாரிடம் கேட்டு சொல்வேன்

(இவன் யாரோ)

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்

(இவன் யாரோ)
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதர்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
முறை ஒரு முறை சொல்லி விடு...ஒரு முறை சொல்லி விடு...
ஒரு முறை சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #16 on: May 09, 2012, 07:02:51 AM »

Movie name: Billa 2 (2012)
Music: Yuvan Shankar Raja
Singer(s): Yuvan Shankar Raja, Stefny
Lyrics: Na. Muthukumar


 
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

தன்னை தானே செதுக்கியவன் இவன்
விதி இருட்டினில் கிருகியவன் இவன்
வாழ்வில் எல்லாம் ஒதுகியவன் இவன்
வலியில் இன்பம் தேடியவன்

Don don don, மிரளும் don don
don-கு கெல்லாம் don, இந்த பில்லா தான்
Don don don..அதிரும் don don
சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான்

Give your way, your way to this gangster
Give your way..your way to this monster
Give your way, your way to this gangster

எரிமலை மேலேறி கோடி காட்டுவான்
இவன் எழுந்ததும் எல்லோரும் கை காட்டுவான்
என்கேகெங்கோ முகம் காட்டுவான்
இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான்

Don don don, மிரளும் don don
don-கு கெல்லாம் don, இந்த பில்லா தான்
Don don don..அதிரும் don don
சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான்

Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

டேவிட் பில்லா பில்லா பில்லா
here டேவிட் பில்லா is the மொன்ஸ்டர்
drop drop drop drop the beat..

Don don don..Fear so strong
if you stand in his way
you will not live for long
Don don don..his power so strong
So of his game..he is never wrong

Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #17 on: May 09, 2012, 07:06:51 AM »

Movie name: Baatsha (1995)
Music: Deva
Singer(s): S. P. Balasubrahmanyam
   
 

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டும் ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
காற்றில் எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விசியைப் பாரு
நாற்றம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாச்சா என்னைக்கும் பலிக்கும் பாரு
பாட்ஷா திட்டம் ஜெயிக்கும் பாரு
பம்பாயில் இவன் பேர சொன்னா
அரபிக் கடலும் அலறும் பாரு
கள்ளிப் பயல்கள் சதியை எல்லாம்
சொல்லி அடிக்கும் சூரன் பாரு
நூறு முகங்கள் மாறி வந்தும்
ஏறு முகத்தில் இருக்கும் வீரந்தான்
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #18 on: October 24, 2012, 07:12:01 AM »

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : கார்த்திக்
வரிகள் : நா. முத்துக்குமார்

 


ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான் இனத்தை
காப்பவன் அரவான்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான் இனத்தை
காப்பவன் அரவான்

பலவான் பலவான்
பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள்
வெற்றியை குடிப்பான் அரவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுண்டலங்கள் தருவான்
கடையெழு வள்ளல்கள் எல்லாம்
கொடை மட்டும் தருவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுண்டலங்கள் தருவான்
கடையெழு வள்ளல்கள் எல்லாம்
கொடை மட்டும் தருவான்
படை தருவான் கோட்டை கொத்தளங்கள் தருவான்
பெருகும் பட்டணங்கள் தருவான்
உருகும் ஊனை
உருகும் ஊனை
உருகும் ஊனை அவன் தருவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

பாம்பாகி வந்தவன் அரவான்
மாயன் பெண்ணாகி வந்தவன் அரவான்
போராளி இனத்தவன் அரவான்
தன் பங்காளி மதித்தவன் அரவான்
தன் வில்லை தனக்கே
விடுத்தவன் தன் பெண்ணை தானே கெடுத்தவன்
பொல்லாத பூவாய் பூத்தவன் அரவான்
கல்லாகி கடவுளானவன் அரவான்

ஒரு நாள் அவன் வெற்றியை குடிப்பான் அரவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான்

பலவான் பலவான்
பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள்
வெற்றியை குடிப்பான் அரவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

 
Logged

அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27644

நல்லதை நினை மனமே!


« Reply #19 on: October 24, 2012, 07:14:23 AM »

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர் : கோபால், சீர்காழி G. சிவசிதம்பரம், சுபிக்ஷா
வரிகள்: நா. முத்துக்குமார்



நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே
வாழும் விதி பாய்ஞ்சுடுச்சே
ஒத்த கல்லு சொன்ன சொல்லு
உன் உசுரை வாங்கிடுச்சே
விதியே உன் விதியே

என் சூரியன் சூரியன் சட்டுனு சட்டுனு இருட்டாய் போனது ஏனோ
என் சந்திரன் சந்திரன் பட்டுனு பட்டுனு உடைஞ்சே போனது ஏனோ
விதி கண்ணீரு சிந்தாம அணையாத ஜோதி
இந்த கதைய எழுதிய விதியை பார்த்து கேட்டானொரு கேள்வி
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஏய் வானம் கேட்கல பூமி கேட்கல வெயிலும் கேட்கல மழையும் கேட்கல
காத்தும் கேட்கல கடவுள் கேட்கல மனுஷன் கேட்குறானே
மனுஷன் கேட்குறானே

அந்த பறவை கேட்கல மிருகம் கேட்கல
பாம்பு கேட்கல பல்லி கேட்கல
நாயும் கேட்கல பேயும் கேட்கல மனுஷன் கேட்குறானே

அவன் நாக வம்ச புள்ள  இங்க யாரும் ஈடு இல்லை
தன் தலையைப் பார்த்துத் தானே அவன் திருப்புறானே வில்லை

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

இந்த மரணப்பாதையின் தூரம் ரொம்ப தூரமோ
வரும் மரணம் பார்த்து வரும் வலிகள் ரொம்ப பாரமோ

இந்த உயிரும் பறந்து ஒரு புகையை போல போகுமோ
இந்த உயிரும் போன பின்பு மூளும் பகையும் போகுமோ
அன்பில்லாத உலகம் பண்பில்லாத நரகம்
இந்த தேகம் தாகம் எல்லாம் இனிமேல் தீயில் வேகும் விறகு
அந்த நோகும் கேட்கல தீயும் கேட்கல
மாடன் கேட்கல காடன் கேட்கல
ஈசன் கேட்கல எமனும் கேட்கல
மனுஷன் கேட்குறானே
உசுர கேட்குறானே என் உசுர கேட்குறானே

அவன் மரணம் சொல்லும் கதை மண்ணில் வீழ்ந்த விதை
என்றும் வாழ்பவனை என்ன செய்யும் சிதை
வெயிலாய் நிலவாய் காற்றாய் வாழ்வானே
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அவன் தான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அரவான் அரவான் அரவான் அரவான்
அரவான்  அரவான்  அரவான்

நந்தகுமாரா
நவநீத கண்ணா மாயன் முகுந்தா

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

குளிர் கூதல் வரும் போது அனல்தானவன்
தளிர் கைகள் தொடும் போது தனப்பானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
மிருதங்கம் இடை சேரும் குரல்தானவன்

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ
Logged

Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.6 | SMF © 2006-2008, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!