கவிதையும் கானமும் 7.2.12
My Community
June 19, 2013, 05:04:59 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: கவிதையும் கானமும் 7.2.12  (Read 282 times)
ooviya
Hero Member
*****
Posts: 935


கண்களே ஆண்களை நம்பாதே


« on: February 01, 2012, 03:11:00 PM »

என் கனவுகள்

நான் சாய்ந்து கொள்ள
உன் தோல் வேண்டும்

என் தலை வைத்து படுத்து கொள்ள
உன் மடி வேண்டும்

என் முடி கலைத்து விட
உன் விரல்கள் வேண்டும்

என் கன்னங்கள் நனைத்திட
உன் முத்தங்கள் வேண்டும்

என் காது மடல்கள் சூடு ஏற
உன் மூச்சு காற்று பட வேண்டும்

என் இதயம் பட படக்க
உனது உதடுகள் எனது பெயரையே கொஞ்ச வேண்டும்

என் கனவுகள் நினைவாகிட
நீ என்னருகில் வேண்டும்

என் ஆயுள் நீடிக்க உன் அன்பு மொத்தமும் வேண்டும்
கிடைக்குமா.......

« Last Edit: February 08, 2012, 04:45:35 PM by இலக்கியன் » Logged
மயில்
Forum Moderator
Platinum member
*******
Posts: 18110

எதையம் வெல்லும் நட்பு ஒன்றே


WWW
« Reply #1 on: February 01, 2012, 04:50:09 PM »


நீ தான் என் முகவரி

என்   முகவரி  தெரியாமல்
இத்தனை நாட்களும்   
அலைந்து  திரிந்தேனே ?
எங்கெங்கோ   webil  நுழைந்தேனே ?

அடடா   என்  முகவரி 
இப்போது  தெரிந்தேனே
அது  தான்  என்   NTC

எனக்கு  முகவரி
கொடுத்த  இனிய
NTC தளமே
நீ வாழ்க   பல்லாண்டு
இன்னும்  வளர்க
பல  நூற்றாண்டு

என்போன்ற  எத்தனையோ
முகவரி    கிடைக்காத
இதயங்கள்  நிறைய  உண்டு .
அவை  உன்னால்  விலாசம்  பெறட்டும்
உனக்கும்   நிறைய  விண்ணப்பங்கள்
வரட்டும் .
« Last Edit: February 02, 2012, 07:17:55 AM by மயில் » Logged

சத்தியம்
Chat Team
Super Hero Member
*****
Posts: 1488


தீமைக்கும் நன்மையே செய்


« Reply #2 on: February 02, 2012, 04:13:11 AM »

என்னவவளே......

உன் கவலைகளுக்காக

என்னை உன் இதய சிறையில்

அடைத்து விட்டாயே?....

இது நியாயமா?

என்று குமுறுகிறது என் புன்னகை.......

ஒரு சின்ன புன்னகை சிந்திவிடு.......

அது போதும் எனக்கு ......

ஏனென்றால்

உன் புன்னகை ஒன்று தான்

எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.....

அதுதான் விலை மதிக்கமுடியாதது எனக்கு......

இப்படிக்கு

பூ சோலையாகிய உன்னிடம்!!

அதை வருடும் தென்றலாகிய

என் மனம்!!


உங்கள் நண்பன்
 சத்தியம்
« Last Edit: February 02, 2012, 04:20:08 AM by sathiyam » Logged

அடங்காதவர்களை எச்சரியுங்கள்!! பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள்!! எளியவர்களை
ஆதரியுங்கள்!! எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்!!-------- உங்கள் நண்பன் சத்தியம்
Akshi
Guest
« Reply #3 on: February 02, 2012, 04:26:00 AM »

kaal udaintha paravaiyaai

நான் அறிமுகம் ஆனா
நாட்களில் உன்முகத்தை
நானும் என் முகத்தை நீயும்
பார்த்து இல்லை..
ஆனால் விடுமுறை நாட்களில்
மணிக்கணக்கில் பேசுவோம்..

மாதங்கள் ஆகிவிட்ட போதிலும்
உன்முகத்தை பார்க்க ஆசை இல்லை
உன்குரல் கேட்டல் போதும் என்று மனம்
நேசிக்கும்.. அன்று தொடங்கியது
எனது காதல்..!

என்றாவது ஒரு நாள்
உன்னை சந்திப்பேன்
என்கின்ற நம்பிக்கையில்
என் நேசிப்பின் பயணம்
தொடர்ந்தது....!

முதன் முதல்லில் நான்
உன்னை பார்த்ததும்
நீ என்னைப்பார்த்ததும்
புகைப்படத்தில் தான்,

என்றாவது உன்னை பார்ப்பேன்
என்ற பரவசத்தில் என் மனம்..
அது போல‌ சந்தித்தேன்...
சந்தோஷத்தில்....மிதந்தேன்...

என்னோட பேச காத்திருந்த நாட்கள்
நடுஜாமம் என்றும் பாராமல்
நாலு வார்த்தை அன்பாய்
பேசிவிட்டு நீ உறங்க செல்வாய்!
அன்று முழுக்க சந்தோஷத்தில்
உறக்கத்தை மறந்து.. கிடப்பேன்..

உன்னிடம் பேச
காரணகளை சேகரிப்பேன்
என் வாழ்க்கையின்
வெளிச்சம் என்றேன் உன்னை
என் தன்னம்பிக்கையின்
மறு உருவம் என்றேன்
உன்னிடம்..
எல்லாம் கேட்டுவிட்டு
இன்று பதில் ஏதும் கூறாமல்
மௌனத்தின் குவியலாய் நீ
இருக்கிறாய்!
நானோ மறக்க முடியாமல்
தவிக்கிறேன் ....

நான் வாங்கி அனுப்பின‌ புது ஆடையை
நீ அணிந்திருக்கும் அழகை ரசிப்பதர்காக‌
மணிக்கணக்கில் காத்திருப்பேன்
நீ புகைபடமாய் அதை
அனுப்பும் வரை....

நான் வெளியூர் சென்ற நாட்களில்
நீ கேட்பாய் எனக்கு
என்ன வாங்கி வருவாய்
என்று!
உனக்காக ஒன்று வாங்கி வருவேன்
என்று நான் கூற
அதையே எதிர் பார்த்து காத்திருப்பாய்
நான் பொதியாய் அதை அனுப்பும்  வரை..

நான் உன்னை சந்திப்பது
குறைவே என்றாலும்!
குறையாத அன்போடு
கொண்டு வருவேன்
எந்தன் அன்பை!

யாரிடமும் வசபடதா
எந்தன் நெஞ்சம்
உன்னை பார்த்த
நாள் முதலாய்
கேட்குதே தஞ்சம்!

சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியில்
பட்டெரியும் சருகுகளாய்
உன் நினைவுகள்
என் இதயத்தில்!

ஈரம் தோய்ந்த கண்கள்
உன் இதயத்தை ஈரமாக்க
தினம் தினம் என் நேசிப்பில்
ஊறும் வற்றாத காதல் சுனை!

உதிரத்தோடு கலந்துவிட்ட
என் நேசிப்பை உதறிவிட
சொல்கிறாய் நீ..
எப்படி முடியும்
என்னால்?
நான் மண்ணோடு
உறையும் வரை
உடலோடு உடன் இருக்கும்..!

சிறகுகள் இன்றி உன்னை சுற்றிய
என் காதல் வார்த்தைகள்
எல்லாம் இன்று
கால் ஒடிந்த பறவையாய்
தனிமை சிறையில்!
« Last Edit: February 06, 2012, 05:40:09 AM by இலக்கியா » Logged
அஸ்வி
Forum Moderator
Platinum member
*******
Posts: 27705

நல்லதை நினை மனமே!


« Reply #4 on: February 02, 2012, 09:38:05 AM »

பெண்

பெண் என்பவள் ஒரு அற்புதம்


அவள் அசைந்தாடும் ஒரு அதிசயம்...


பெண் புகழ் பாடா கவிகன் இல்லை


பெண் இன்றி தலைமுறை இல்லை...


அடுககளையிலும் உறைந்திடுவாள் -அவளுக்கு


அணு உலையும் ஒரு சாதனை கூடம் தான்....


மணிக் கொன்றாய் புகழை ஏற்றி விடு


மகுடம் தன்னை முன்னில் சூடி விடு...


பெண்ணே.... நீ


மலரென்றாலும்


மலையின் வலிமை


உன்னுள் !!!
Logged
பிரியமானவள்
Chat Team
Super Hero Member
*****
Posts: 1584


இதயம் ரோஜா போல் இருந்தால்,பேச்சில் வாசனை 


« Reply #5 on: February 02, 2012, 01:04:10 PM »

உன்னால் மட்டுமே

மழை துழி மண்ணில்  விழும் நொடி
மொட்டு ஒன்று மலராகும் தருணம்

குழந்தையின் சிரிப்பு
சிலிர்க்க வைக்கும்
அற்புத நிமிடம்

பாசான மாணவனின்
பளீர் சந்தோசம்

யன்னல் ஓர இருக்கையில்
மெல்லிய தென்றல் வருடல்

அத்தனை சந்தோசத்தையும்
கலவையாக்கி

ஒற்றை சொல்லில்
என்னை உறைய வைக்க
உன்னால் மட்டுமே முடிகிறது
அது எப்படி?
« Last Edit: February 02, 2012, 02:15:48 PM by PriyamanavaL » Logged

பகீரதன்
VIP
Golden Member
******
Posts: 3383


உன்னை விரும்பு உனக்கு நீயே நேர்மையாக இரு...


WWW
« Reply #6 on: February 02, 2012, 02:03:28 PM »

ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்திருக்க ஆசை
ஓயாது கதை பேசி
உன்னுடன் விழித்திருக்க ஆசை.
 
செல்லமாக சீண்டி உன்னைச்
சிணுங்க வைக்க ஆசை
நீ சிரிக்கும் அழகினிலே
சித்தம் பறிகொடுக்க ஆசை..
 
உறங்கும் போது
உன்னைத் தாலாட்ட ஆசை..
ஊரெல்லாம் உன் பேரை
சொல்லி வர ஆசை-
 
உன் கோபப் பார்வையிலே
குளிர் காய ஆசை.
கொஞ்சும் குரல் இசையில்
தினம் கூத்தாட ஆசை..
 
உன்னோடு கை கோர்த்து
உலகம் சுற்றி வர ஆசை..
உயிர் பிரியும் போதும்
உன் மடி சாய ஆசை...
Logged


என்னைப் புரிந்து கொள்ள முயலாதீர்கள்
அனுதினம் நானே முயன்று தோற்றுப்போகிறேன்...♥

http://www.pakeecreation.blogspot.com
நான்சிராஜ்
VIP
Platinum member
******
Posts: 5053


நான் உயிர் வாழ்வதே உன் நினைவுகளால் தான்


« Reply #7 on: February 03, 2012, 10:03:31 AM »

மனதோரம்  

வெள்ளை முகில் பஞ்செடுத்து
வெள்ளையாடை நான் நெய்து
வெண்பனிபோல் உன் அழகில்
வெள்ளிரதம் நானேறி
வெள்ளையாடை எடுத்து வந்தேன்
வெள்ளை முத்துப்பல்வரிசை
வெட்கமாய் சிந்தியகோர் புன்னகை

நீ சிந்தும் புன்னகை
நித்தம் நித்தம் பார்த்திருந்து
நீண்டதோர் காலம்
நீரோடையில் காத்திருந்தேன்
நீ வரும் திசையினை
நீ அணிந்த கால் கொலுசு
நின் வரவை சொல்லுமென்று
நீண்ட விழி (வழி) பார்த்திருந்தேன்

பாவி என் மனம்
பட்டபாடு நீயறியாய்
பாதி வழி பார்த்திருந்தேன்
பாவாடைத் தாவணியைக் காணவில்லை
பார்த்திருந்து பார்த்திருந்து
பாதிவிழி பூர்த்ததெடி
பத்திரமாய் நீ வருவாயா?
« Last Edit: February 03, 2012, 10:10:06 AM by நான்சி » Logged

உன் சுவாசத்தை கொண்டு உயிர் வாழ்கிறது என் ஜீவன்   
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.6 | SMF © 2006-2008, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!