தமிழ், தமிழர்...
My Community
September 21, 2017, 01:45:59 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 ... 509 510 [511]   Go Down
  Print  
Author Topic: தமிழ், தமிழர்...  (Read 360639 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10200 on: August 03, 2017, 01:57:19 PM »

ஒருமுறை ஜமீன்தாரின் பல்வேறு மேதமைகளைத் தமிழுலகுக்குப் பறைசாற்ற விருப்பமுற்ற மீனாட்சிசுந்தரக் கவிராயர் மாறுபட்ட கோணத்தில் அவர்மீது பா ஒன்றினைப் புனைந்தார்.

எப்புலவரும் இதுகாறும் கையாளாத புதுமை மிகு பல்வேறு பலகாரங்களின் பெயர்கள் அடுக்கடுக்காய் அமையுமாறு ஜமீன்தாரின் பெருமையினை இப்பாடல் வழி அற்புதமாக அலங்கரித்துள்ளார்.

இப்பாடலைச் செவிமடுத்த அவைக்களப் புலவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இவ்வரிய பாடலின் பொருள் நுட்பத்தினையும் சிருங்கார ரசத்தினையும் நன்கு ருசித்து, ரசித்த ஜமீன்தார் வியப்பில் மூழ்கினார். அப்புலவர் பெருமகனாருக்கு வேண்டிய பரிசில் தந்து மனம் நிறைவுற்றார்.

அதிசய "மா' விதை!

தைத்தவுடன் முளைத்து வளரும் கீரை விதை உண்டு. ஆனால், எல்லா விதைகளுக்குமே ஒரே மாதிரியான விதை நேர்த்தி பயன்தராது. மண்ணில் நட்டவுடன் முளைத்து, பூத்துக் காய்த்துப் பழுக்கும் மாவிதையின் விதை நேர்த்தி பற்றிய குறிப்பை புலிப்பாணி சித்தர் மூன்று பாடல்களில் பாடியுள்ளார்.
""நன்கு முற்றிப் பழுத்த மாம்பழம் ஒன்றினை எடுத்து, சாறு பிழிந்து, தோலை நீக்கிவிட்டு கொட்டையை வைத்துக்கொள்ள வேண்டும். அழிஞ்சில் மரத்தில் "ஏறு அழிஞ்சில்' என்ற ஒரு வகை மரம் உண்டு. அம்மரத்தின் விதைகளைச் சேகரித்து, ஆட்டி, பூத்தைலமாக இறக்கிக்கொள்ள வேண்டும். அத்தைலத்தில் ஐங்கோலக்கரு சேர்த்து (ஐங்கோலம் என்பது கருஞ்சீரகம், கடுகு, ஓமம், வேப்பம் விதை, இலுப்பை விதைகள் சேர்ந்தது) அதில் நாம் வைத்துள்ள மாங்கொட்டையை ஒருநாள் (24 மணிநேரம்) ஊர வைக்க வேண்டும். பின் மாவிதையை எடுத்து நிழலில் உலர வைத்து பத்திரப்படுத்த வேண்டும்.

தேவைப்படும்போது மண்ணில் குழி தோண்டி விதை முளைக்கும் ஆழத்தில் ஊன்றி, நான்கு முறை இடைவெளி விட்டு, நீர் ஊற்ற வேண்டும். நீர் வார்க்கும்போது, நான்கு முறையும், ஒரு கூடையால் திறந்து, திறந்து மூடவேண்டும். ஒவ்வொரு முறையும் திறந்து மூடும் போதும், மாவிதை ஒவ்வொரு பருவமாக வளர்ந்து, பூத்து, காய்த்துப் பழுக்கும். இதற்குக் கால அளவு 3 நாழிகை அதாவது 1 மணி நேரம். அதற்கு மேல் செடி பட்டுப்போகும். இந்த மாம்பழத்தை யாவரும் தின்னலாம், நஞ்சோ என அஞ்சத்தக்கப் பொருள் ஏதும் இல்லை'' இவ்வாறு தமிழ்ச் சித்தர் போகரின் மாணாக்கராகிய புலிப்பாணி சித்தரால் அவரது ஜால நூலில் சொல்லப்பட்டுள்ளது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10201 on: August 03, 2017, 01:59:00 PM »

அப்பாடல்கள் (மாம்பழ ஜாலம்) வருமாறு:

"பாடினே னின்னமொரு வித்தை கேளு
பரிவானரயோ ழிஞ்சி வித்தைதானும்
ஆடியே பூத்தயிலமாக வாங்கி
அன்பான மாங்கனிதான் கொம்பிலப்பா
சூடியே கனிந்தபழம் கொண்டுவந்து
சுகமாகப் பிழிந்ததனைத் தோலை நீக்கி
கூடியே யைங்கோலக் கருவுங்கூட்டிக்
குணமாகத் தயிலத்திலூரப்போடே' (பா.66)

"போடப்பா ஒருநாள்தான் கடந்து வாங்கிப்
பொங்க முடனிழலுலர்த்தி வைத்துக் கொண்டு
நாடப்பா சபைதனிலே யிருந்து கொட்டை
நலமாக யாவரு க்குங் கண்ணிற்காட்டி
சாடப்பா குழிதோண்டி வித்தை நட்டுச்
சார்பாக சலம்வார்த்து கூடைமூடு
சூடப்பா நாலுதரந் தண்ணீர் வாகு
சுகமாக நாலு தரந் திறந்து மூடே' (பா. 67)
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10202 on: August 03, 2017, 02:00:14 PM »

"மூடவே யிலையாகிக் கொழுந்துமாகி
முக்கியமாய்த் தழையாகிப் பூவுமாகித்
தேடவே பிஞ்சாகிக் காயுமாகி
தெளிவான கனியாகி யுதிரும்பாரு
ஆடவே அனைவர்க்குங் கொடுக்கச் செய்நீ
அப்பனே நாழிகைதான் மூணேமுக்கால்
கூடவே யிதற்குள்ளே மரமுமாகிக்
குணமான கனியாகி யுதிரும்பாரே'
(பா. 68)

இயற்கையாக, சில ஆண்டுகள் வளர்ந்து பூத்துக் காய்க்கும் மாமரத்தையே ஒரு மணி நேரத்தில் முளைத்து, வளர்ந்து, பூத்துக், காய்த்துப் பழுக்கும் இப்படிப்பட்ட விதை நேர்த்தி முறை, 5100 ஆண்டுகளுக்கு முன்பே நமது அரும்பெரும், ஈடு இணையில்லா, விஞ்ஞான, மெய்ஞ்ஞான ஆராய்ச்சி அறிஞர்களான தமிழ்ச் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது! அதுவும், பெரும்பொருட் செலவில் ஆராய்ச்சிக் கூடங்கள், அறிவியல் கருவிகள், சிக்கலான செய்முறைகள் இல்லாமல், எளிய முறையில் மக்களே சிறிது முயன்றாலும் செய்து கொள்ளக்கூடிய அறிவியலை எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இனியும் கண்டுபிடிக்க இயலாது என்பதை நோக்கும் போது, இத்தகைய தமிழ்ச் சித்தர்களைப் பெற்றதனால் தமிழர்களாகிய நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

By -துரை வேலுசாமி
dinamani: 30th July 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10203 on: September 10, 2017, 12:24:39 PM »

அளபெடை ஆக்கமும் நீக்கமும்

யாப்பிலக்கணத்தில் அளபெடைப் பயன்பாடு ஒரு விவேகமான பொருளோடு கூடிய ஒலி விளையாட்டு. குறில் நெடிலான எழுத்தொலிக்குக் கூடுதலாக அமையும் கூடுதல் ஒலியையே "அளபெடை' என்பர். இது இயல்பான பொருள் தருவதோடு கூடுதல் சிறப்புப் பொருள் உணர்த்தவும் பயன்படும்.

"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்' (653)

என்ற குறளில் கருத்துக்காக அல்லாமல் வெண்பாவுக்கான யாப்பு பிழையாமைக்காக ஓஒதல், ஆஅதும் என ஈரிடத்தும் இசை நிறையாய் அளபெடை வந்தது.

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை' (15)

என்ற குறளில் கெடுப்பதும் எடுப்பதும் எனக் குறிலாக நிற்பினும் அவை வருமொழிகளோடு பிழையின்றிச் சேரும். ஆயினும், குறிலை நெடிலாக்கி நெடிலை அளபெடையாக்கியதால் கெடுத்தாலும் வாழ வைத்தாலும் அளவுக்கு மீறிய அழிவையும் ஆக்கத்தையும் கொடுக்கும் என்பதைக் குறிப்பதற்காகவே குறிலை நெடிலாக்கியதோடு நெடிலை அளபெடையாக்கிக் கூறப்பட்டது. இது, கூடுதல் பொருட்பயன் பற்றியதற்காகக் கூறப்பட்டதொரு யாப்பு உத்தி.
இங்ஙனம் இசை நிறையாக, சொல்லிசையாகத் தனித்தனிப் பாடலில் அளபெடை அமைதலை மாற்றி, அளபெடைக் கூறியதால் பயனின்றி அவ்வளபெடையை நீக்கி உணரும் விதத்தால் பொருளை உணர வைக்கும் புலமை வித்தகத்தைச் செய்யும் அளபெடைப் புதுமையையும் புலவர்கள் செய்து காட்டியதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் ஒன்றைக் காணலாம்.

பண்டொரு நாள் இராவணன் கயிலையைப் பெயர்த்தான். சிவபெருமான் தன் கால் பெருவிரலால் அழுத்த, அவன் மலையின் கீழே அகப்பட்டுத் திண்டாடினான். தப்பிக்க வழியறியாதபோது கயிலையை வலம் வந்த வாகீச முனிவர் என்பார், இராவணன்பால் இரக்கமுற்று, ""இறைவன் மேல் சாமகானம் பாடினால் அவர் மகிழ்ந்து விடுவிப்பார்'' என உபாயம் கூறினார்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10204 on: September 10, 2017, 12:25:56 PM »

இராவணனும் அவ்வாறே செய்தபோது, கீழ்வரும் சாமகானப் பாடலைப் பாடியதாகக் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் அதன் ஆசிரியர் க.ரா. சிவசிதம்பரர் கூறுகிறார். பாடல் முழுவதும் உள்ள நெட்டெழுத்துகள் அளபெடையால் ஆனவை.

"ஓஒமாஅ தேஎவாஅ ஊஉமாஅ தேஎசாஅ
சீஇமாஅ தாஅவாஅர் தேஎகாஅ வேஎகாஅ
ஆஅமாஅ நாஅயேஎ னாஅவீஇ போஒமாஅ
காஅமாஅ ரீஇநீஇ காஅவாஅ சாஅமீஇ'

இப்பாடலில் 32 நெட்டெழுத்துகள் உள்ளன. அவை தத்தமக்குரிய குறில் எழுத்துகளுடன்
அளபெடைகளாக உள்ளன. இந்நிலையில் இதற்குரிய பொருள் விளக்கத்தை அளபெடைகளை நீக்கிக் கீழ்வருமாறு பாடலை அமைத்துக் கொள்ளும் போதுதான் பொருளை உணர முடிகிறது.

"ஓமா தேவா ஊமா தேசா
சீமா தாவார் தேகா வேகா
ஆமா நாயே னாவீ போமா
காமா ரீநீ காவா சாமீ'

ஓ மகாதேவனே! ஊர் உலகைக் காப்பவனே! திருமகள் போன்ற பெண்ணைத் தேகத்தில் உடையவனே! என் மீது வேகப்படாதே! இழிந்த நாயேனின் ஆவியைப் போமாறு செய்துவிடாமல் மழைபோல் கருணையால் நீ என்னைக் காப்பாய்! தலைவனே! என்பது பாடலின் கருத்தாகும். இப் பொருளை உணர ஒவ்வோர் எழுத்தாகப் பிரித்தும், சிலவற்றைச் சேர்த்தும் அறிய வேண்டும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10205 on: September 10, 2017, 12:26:15 PM »

1. ஓ - வியப்புக்குரியவனே! மா தேவா - மகா தேவனே! ஊ - ஊரையும், மா - பெரிய, தேசா - தேசத்தையும் காப்பவனே!

2. சீ - திருமகள் போன்ற, மாது - பெண்ணை, ஆவார் - இணைத்துக் கொண்ட, தேகா - தேகத்தை உடையனே! வேகா - என் மீது வேகப்படாதே!

3. ஆ - இழிந்த, மா - மிகவும் இழிந்த, நாயேன் - நாய் போன்ற எனது, ஆ - உயிரை, வீ - அழிந்து, போமா - போகாமல்!

4. கா - காப்பாயாக! மாரீ - கருணை மழையானவனே! நீ - நீயல்லவா! கா - உன்னையன்றி யார் காப்பார்? வா - ஆதலால் வந்தருள் செய், சாமீ - தலைவனே!
இந்த அளபெடை விளையாட்டை என்னென்பது! அளபெடை சேர்த்துப் பொருள் காணுதற்கு நேர்மாறாக அளபெடையைச் சேர்த்துப் பிறகு நீக்கிப் பொருளை உணரச் செய்யும் சித்து விளையாட்டன்றோ! இது!

இதனைக் கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த கரையேறவிட்ட நகர்ப்புராணத்தில் க.ரா. சிவசிதம்பரர் பதிவு செய்துள்ளார். 1892-ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்.
அப்பர், பல்லவ மன்னனால் கல்லில் கட்டிக் கடலில் கிடத்தியபோது ""கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே'' எனப் பதிகம் பாடிக் கடலினின்றும் கரையேறிய ஊர்தான் - கரையேறவிட்ட நகராகும்.
யாப்பிலக்கண மரபில் அளபெடை நீக்கத்தாலாகும் ஆக்கப்பாடலை புது வரவாகவும் காலத்தில் மலர்ந்த கவிக் கொடையாகவும் கருதலாம்.

By -தமிழாகரர் தெ. முருகசாமி
dinamani : 06th August 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10206 on: September 10, 2017, 12:28:59 PM »

அகநானூற்றில் "அல்பினிசம்'

உறையூர் மருத்துவன் தாமோதரனார் எழுதிய அகநானூற்றுப் பாலைத்திணையைச் சார்ந்த பாடல் ஒன்று தலைமகனைப் பிரிந்த தலைமகள் தோழிக்குத் தலைவன் செல்லும் காட்டுவழியானது எத்தகையது என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது.

குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே' (133)
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10207 on: September 10, 2017, 12:29:16 PM »

இப்பாடலானது அறிவியல் ஆய்விற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. குன்றிமணியினைப் போன்ற கண்களையும், குறுகுறுத்த மயிர்கள் மற்றும் குறுகிய கால்களையும் உடைய வெள்ளெலி, மேகம் தவழும் குறும்பாறைகள், யானைக்கூட்டம் போன்ற காயாம் பூக்கள் மற்றும் எரியும் தீயைப்போன்ற இலவம் பூக்கள், காடைப்பறவையின் சிறகுமுள் போன்ற வெட்சிப்பூக்கள், கொல்லையில் பூக்கும் குருந்தம் பூக்கள், கொட்டிக்கிடக்கும் காடு அது.
நீர் ஒட்டா, அந்நிலத்தில் மரல்-நீரைப் பருக ஓடும் பெண்மானைத் தொடர்ந்து ஆண்மான் ஓடும் அக்காட்டின் வழியே தலைவன் செல்வதாகத் தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

உயிரிகளை உவமமாகவும் உருவகமாகவும் மிகுதியாகக் கொண்ட இப்பாடலின் முதல் உயிரியாகக் கூறப்பட்ட வெள்ளெலி செய்தியானது இங்கு சிறப்பிடம் பெறுவதாக அமைந்துள்ளது. இன்றைய தினம் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் சுண்டெலியான
"மஸ்' (ஙன்ள்) பேரினத்தினைச் சார்ந்த எலிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. வீடுகளில் காணப்படும் எலிகளும் ஆய்வகத்தில் ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் எலிகளும் ஒரே சிற்றினத்தைச் சார்ந்தவை என்றபோதிலும், அக மற்றும் புறக்கலப்பின் மூலம் பல்வேறுவகையான சுண்டெலிகள் ஆய்விற்காகத் தோற்றுவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய எலிகளின் ஆய்வகப் பயன்பாடு 16ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது. ஆனால், இப்பாடலோ காலத்தினால் முற்பட்டது. எனவே பாடலில் கூறப்பட்ட வெள்ளெலியானது "அல்பினோ' (ஹப்க்ஷண்ய்ர்) வகையினைக் குறிப்பதாகும். வெள்ளை மயில், வெள்ளை காகம், வெள்ளைப் புலி வகையைச் சார்ந்த வெள்ளெலியானது மரபணுவுடன் தொடர்புடைய பிறவிக்குறைபாட்டினால் தோன்றியதாகும். இதுபோன்ற அல்பினோ உயிரிகளில் நிறமிகள் இல்லாததால் அவை வெண்மையாகக் காணப்படும்.

By -முனைவர் பி. மாரியப்பன்
dinamani : 06th August 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10208 on: September 10, 2017, 12:32:07 PM »

பிறந்த ஆண்டைக் கணக்கிட உதவும் திருக்குறளும் ஏழும்!

திருக்குறள் ஓர் அற்புதமான படைப்பு. குறிப்பாக 7 என்ற எண்ணுக்கும் குறளுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. உலகிலுள்ள அனைவரின் பிறந்த ஆண்டு எது என்று திருக்குறளில் கணக்கிட்டு அறியக்கூடிய கணக்கீடு மிகச் சிறப்பாக உள்ளடங்கி இருக்கிறது. உலகிலுள்ள எந்த இலக்கியப் படைப்பிலும் இதுபோன்று கணக்குக்கும் மொழிக்கும் இம்மாதிரியான வியத்தகு தொடர்பு இருந்ததில்லை. இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு, திருக்குறளுக்கும் கணிதத்திற்கும் உள்ள வியத்தகு தொடர்பைக் கண்டறிந்திருக்கிறேன்.

கணிதமும் மொழியும் மனிதர்களின் இருகண்கள் என்று 392 ஆவது குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். 7 என்ற எண்ணுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. திருவள்ளுவர் என்ற பெயரில் 7 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு குறளிலும் 7 சீர்கள் உள்ளன. 1330 குறள்கள் உள்ளன. அந்த இலக்கங்களின் கூட்டுத் தொகை 7 ஆக இருப்பது ஒரு சிறப்பு. 133 அதிகாரங்கள் உள்ளன. அந்த இலக்கங்களின் கூட்டுத் தொகையும் 7.

திருவள்ளுவர் என்ற சொல்லில் வரக்கூடிய எழுத்துகள் 7. அது 7ஆல் வகுபடும் எண்ணாக இருக்கிறது. ஒவ்வொரு குறளிலும் வரக்கூடிய சீர்களின் எண்ணிக்கை 7. அதுவும் 7ஆல் வகுபடக் கூடிய எண்ணாக இருக்கிறது. திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. இந்த எண் 7ஆல் வகுபடக் கூடிய எண்ணாக உள்ளது. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. இந்த எண்ணும் 7 ஆல் வகுபடக்கூடிய எண்ணாக உள்ளது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு' என்ற குறள் (392) கணிதத்துக்கும் மொழிக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது. இது 392 ஆவது குறளாக அமைகிறது. இதுவும் 7 ஆல் வகுபடும் எண்ணாக அமைந்துள்ளது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10209 on: September 10, 2017, 12:32:35 PM »

7ஆல் வகுபடக் கூடிய எண்களில் உள்ள 190 குறள்கள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நியதிகளை உயர்த்திப் பிடிப்பவைகளாக உள்ளன. இவ்வாறு 7ஆல் வகுப்படக்கூடிய 190 குறள்களின் எண்கள் 7,14,21...1330 ஆகிய அனைத்தையும் கூட்டினால் வரக்கூடிய 127015 என்ற எண்ணும் 7ஆல் வகுபடக்கூடியது என்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்று.

உலகத்தாரின் பிறந்த ஆண்டு

எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்திலுள்ள ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டையும் மிகச் சரியாகக் கூறக்கூடிய கணக்கீடும் திருக்குறளில் உள்ளது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். அதுமட்டுமல்ல, இது பல ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாகவும் அமைகிறது.

கணக்கீடு

ஒருவர் பிறந்த ஆண்டை, பள்ளிச் சான்றிதழில் அல்லது ஜாதகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமே என்று சிலர் எண்ணுவர். ஆனால், அதைவிட சுலபமான வழி திருக்குறளில் இருக்கிறது என்பதையும், அந்த வியத்தகு எண்ணையும் ஆராய்ந்து கண்டறிந்துள்ளேன்.

ஒருவர் ஜனவரி முதல் நாளில் எத்தனை வயதைப் பூர்த்தி செய்திருக்கிறாரோ, அந்த எண்ணை குறள்களின் எண்ணிக்கையான 1330லிருந்து கழித்துவிட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் எண்ணோடு 686 என்ற வியத்தகு எண்ணைக் கூட்ட வேண்டும். கூட்டினால் கிடைக்கும் எண்தான் அவருடைய பிறந்த ஆண்டு என்று அறிந்து கொள்ளலாம்.

குறள்கள் 1330

ஜனவரி 1இல் நிறைவடைந்த வயது - 76
1254
வியத்தகு எண் + 686
பிறந்த ஆண்டு 1940
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10210 on: September 10, 2017, 12:32:53 PM »

எடுத்துக்காட்டாக ஒருவருடைய வயது ஜனவரி முதல் தேதியில் 76 பூர்த்தியாகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ணை 1330 லிருந்து கழித்தால் கிடைப்பது 1254 ஆகும். இத்துடன் 686 என்ற எண்ணைக் கூட்டினால் 1940 என்ற எண் கிடைக்கிறது. இதுதான் அவருடைய பிறந்த ஆண்டு ஆகும். இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டையும் திருக்குறளிலிருந்து கணக்கிட்டு அறிய உலகப் பொதுமறையான திருக்குறள் உதவுகிறது. எனது கணித ஆய்வின் மூலம், இந்த 686 என்ற எண்ணை வியத்தகு எண்ணாகத் தெரிவு செய்தேன்.

ஓர் எண் 2,3, 4, 5, 6, 8, 9,11 என்ற எண்களால் வகுபடுமா என்று கண்டறியும் முறைகள் கணிதப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பது போல் 7 ஆல் வகுபடுமா என்று கண்டறியும் இந்த எளிமையான முறையும் கணிதப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.

அண்மையில் ஓர் எண் 7 ஆல் வகுபடுவதைக் கண்டிபிடிப்பதற்கான சோதனையை மாணவர் நலன் கருதி எளிமைப்படுத்தி வெளியிட்டுள்ளேன். அதுபோன்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துதான் இந்த 686 என்ற வியத்தகு எண். இந்த 686 ஆம் எண்ணும் 7ஆல் வகுபடக்
கூடிய எண்ணாக இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

"கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது'

என்பதுதான் 686ஆவது குறள்.

திருக்குறளில் இப்படிப்பட்ட கணக்கீடு உள்ளடங்கி இருப்பதும், கணிதத்திற்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பும் பிணைப்பும் உலகிலுள்ள வேறு எந்த இலக்கியத்திலும் இவ்வளவு சிறப்பாக இதுநாள் வரை இடம் பெறவில்லை என்பதே நான் கண்ட ஆய்வு முடிவு.

- என். உமாதாணு கணித வல்லுநர், இயக்குநர், கணிதம் இனிக்கும் ஆய்வு மையம், கோவை.
dinamani : 07th August 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 ... 509 510 [511]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!