தமிழ், தமிழர்...
My Community
May 27, 2018, 09:28:04 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 ... 512 513 [514] 515   Go Down
  Print  
Author Topic: தமிழ், தமிழர்...  (Read 405037 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10260 on: April 04, 2018, 02:36:42 PM »

நாலு சீரை உடைய அடி அளவடி; அதற்கு மேல் வருபவை நெடிலடிகள். அந்த நெடிலடிகளிலும் இரண்டு வகை உண்டு. நாலுக்கு ஐந்தாக வருவது நெடிலடி. அதற்கு மேல் எத்தனை சீர் வந்தாலும் அவை யாவுமே கழிநெடிலடிகள். கழி என்பது மிகுதியைக் குறிக்கும். நெடிலுக்கும் மிக்கது என்று பொருள். ஆறு சீர் அடி, கழிநெடிலடி வகையைச் சார்ந்தது. நாலு சீரடியை அளவடி என்று சொன்னால் போதும்; அளவடி என்றாலே நாலு சீரடி என்று தெரிந்து கொள்ளலாம். அப்படியே நெடிலடி என்றாலே ஐந்து சீர் என்று தெரிந்து கொள்ளலாம். நாற்சீர் அளவடி ஐஞ்சீர் அளவடி என்று குறிக்க வேண்டாம்.

ஆனால், கழிநெடிலடிகளை அப்படியே சொன்னால் போதாது. ஆறு முதல் எத்தனை சீர் வந்தாலும் கழிநெடிலடி யாகையால், கழிநெடிலடி என்று சொன்ன அளவில் அஞ்சுக்கு மேற்பட்ட சீர் இருக்கும் என்று விளங்குமேயன்றி, இத்தனை சீர் என்று திட்டவட்டமாகத் தெரியாது. ஆகையால் கழிநெடிலடி என்று குறிக்கும்போது இத்தனை சீர் என்ற கணக்கையும் சொல்வது வழக்கம். ஆகவே ஆறு சீர் விருத்தத்தை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற நீண்ட பெயரால் குறிப்பார்கள்.

இந்தப் பாட்டு விருத்தம்; ஆசிரியப்பாவுக்கு இனமாதலால் ஆசிரிய விருத்தம்; சீர் அளவினால் கழிநெடிலடி விருத்தம் கணக்காகப் பார்த்தால் ஆறு சீர் விருத்தம்; இத்தனையையும் சேர்த்து அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். இப்படியே, "எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்று விருத்தங்களுக்குப் பெயர் வழங்குவதை அச்சுப் புத்தகங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாலு சீருக்குக் குறைவான சீர்களைக் கொண்ட இரண்டு சீரடி, மூன்று சீரடி என்ற இரண்டு அடி வகை உண்டு, இரண்டு சீரடி குட்டையானது; மூன்று சீரடி அதைவிடச் சிறிது நீண்டது. நாற்சீரடியை நோக்க அதுவும் சிறிய அடிதான். மிகவும் குட்டையான உருவத்தைக் "குறள்' என்றும், சற்றே உயர்ந்து, ஆனால் சராசரி அளவுக்குக் கீழே இருந்தால் "சிந்து' என்றும் சொல்வது வழக்கம். குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்ற ஐந்தும் உயரத்தின் கூடுதல் குறைவினால் வந்த பெயர்கள். அந்தப் பெயர்களையே அடிகளுக்கும் வைத்திருக்கிறார்கள். இரண்டு சீரடிக்குக் குறளடி என்று பெயர்; மூன்று சீரடிக்குச் சிந்தடி என்று பெயர். ஆகவே, ஐந்து வகையான அடிகளைச் சீரின் கணக்கினால் வரையறை செய்திருக்கிறார்கள்.
 2 சீர் அடி - குறள் அடி; 3 சீர் அடி - சிந்தடி; 4 சீர் அடி - அளவடி; 5 சீர் அடி - நெடிலடி; 6 சீர் அடி முதலான அடிகள் - கழிநெடிலடிகள்.

 ஆசிரிய விருத்தங்களில் ஆறு சீர் முதலியவைகளே வரும்; அதாவது, கழிநெடிலடியே வரும். முன்னாலே காட்டிய பாட்டில் உள்ள நான்கு அடிகளும் ஆறு சீர் அடிகளாகவே இருக்கும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10261 on: April 04, 2018, 02:38:23 PM »

"இதந்தரு மனையி னீங்கி
 இடர்மிகு சிறைப்பட் டாலும்'


என்பது முதல் அடி. இதில் ஆறு சீர்கள் இருப்பதை இடம் விட்டிருப்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கு நாமாக ஒரு மெட்டைப் போட்டுக் கொள்ளலாம்.

"தனதன தனன தான
 தனதன தனன தான'


என்பது இதற்கு ஓசை வாய்பாடு என்று வைத்துக் கொள்ளலாம். இது யாப்பிலக்கணத்தில் இராது. எளிதலே விளங்குவதற்காக இப்படி வைத்துக் கொள்வதால் தவறு இல்லை. பாட்டின் அடியையும் இந்த வாய்பாட்டையும் அடுத்தடுத்துச் சொல்லிப் பாருங்கள். இந்த அடியில் முதல் மூன்று சீர்களும், பின் மூன்று சீர்களும் ஓசையில் ஒரே மாதிரி இருக்கும். தயை செய்து இங்கே பொருளைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாதீர்கள்.

(தொடர்ந்து பாடுவோம்...)

"வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன்
By Dinamani  : 24th December 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10262 on: April 04, 2018, 02:41:24 PM »

ஊன் துவை அடிசில்

இன்று அசைவ விரும்பிகளாலும் சைவ விரும்பிகளாலும் விரும்பி உண்ணும் உணவாகப் பிரியாணி விளங்குகிறது. அசைவ பிரியாணியில் கறிவகைகள், மீன் வகைகள், முட்டை வகைகள் இடம்பெறுகின்றன. சைவ பிரியாணியில் காய்கறி வகைகள் இடம் பெறுகின்றன.

 சைவம், அசைவம் என்னும் இரண்டு நிலைகளில் தற்காலத்தில் இருக்கும் பிரியாணியானது சங்க காலத்தில் அசைவ உணவாக மட்டும் இருந்துள்ளது. அதனை "ஊன் துவை அடிசில்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். "ஊன்' என்பது இறைச்சியையும் "துவை' என்பது கலந்த தன்மையையும் "அடிசில்' என்பது சமைக்கப்பட்ட உணவினையும் குறிக்கிறது. ஊன் துவை அடிசில் என்பதற்கு இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று பொருள்.

 பிரியாணி என்னும் சொல் பிற்காலத்தில் வந்துள்ளது. ஆனால் பிரியாணி என்னும் உணவு சங்க காலத்திலேயே தமிழ் மக்களாலும் பிறராலும் உண்ணப்பட்டுள்ளது.

 "பிரியாணி' என்னும் சொல் பாரசீகச் சொல். "பிரியன்' என்னும் சொல்லிலிருந்து "பிரியாணி' என்னும் சொல் உருவாகியுள்ளது. பிரியன் என்றால் சமைப்பதற்கு முன்பாகப் பொரிக்கப்பட்டது என்று பொருள். அவர்கள் பிரியாணியை இறைச்சி, அரிசி, நெய், மஞ்சள், மிளகு ஆகிவற்றைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

 1398இல் தைமூர் இந்தியாவுக்கு வரும்போது பிரியாணி என்னும் உணவு வகையும் இந்தியாவிற்கு வந்தது என்று குறிப்பிடுகிறார்கள். பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசை ஆட்சி புரிந்த ஜகாங்கீரின் மனைவியான நூர்ஜகான் இந்தியாவில் பிரியாணியை அறிமுகம் செய்தார் என்றும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஷாஜகானின் மனைவியான மும்தாஜ் அறிமுகப்படுத்தினார் என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ பிரியாணி இந்தியாவிற்குப் பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனது என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊன் துவை அடிசில் என்னும் பெயரில் அது பயன்பாட்டில் இருந்ததை சங்க இலக்கியம் நமக்குத் தெரிவிக்கிறது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10263 on: April 04, 2018, 02:46:49 PM »

பதிற்றுப்பத்தில்,

சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்
 ஓடாப் பீடர் உள்வழி இறுத்து (45: 13-14)


ஊன் துவை அடிசில் தற்காலப் பிரியாணியைக் குறிக்கிறது. சேரன் செங்குட்டுவன் போர்க்களத்தில் வெற்றி பெற்றபின், தனது வீரர்களுக்கு விருந்தளித்தான். அந்த விருந்தில் அவன் வழங்கிய ஊன் துவை அடிசிலானது சோறு வேறாகவும் இறைச்சி வேறாகவும் பிரித்து அறிய முடியாத அளவிற்கு ஒன்றி இருந்தது என உணர்த்தியுள்ளார் புலவர் பரணர்.

 செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாடலிலும் ஊன் துவை கறிசோறு இடம்பெற்றுள்ளது. செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் வில் பிடித்துப் போர் செய்வதாலும் பாணருக்கும் புலவருக்கும் தொடர்ந்து வழங்குவதாலும் வன்மையாகவும் வண்மையாகவும் உள்ளன. ஆனால் எனது கைகள் பிரியாணி என்னும் ஊன் துவை கறி சோறு உண்ணும் தொழிலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனவே எனது கைகள் மென்மையாக இருக்கின்றன என்று பாடியுள்ளார்.


 புலவு நாற்றத்த பைந்தடி
 பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
 கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
 பிறிது தொழில் அறியா ஆகலின் (14: 12-15)


என்று தனது கையின் மென்மைத் தன்மைக்குக் காரணம் தெரிவித்துள்ளார் கபிலர். புதிய இறைச்சித் துண்டங்களில் மாமிச வாடை இருக்கும். அந்த வாடை போவதற்காக அதனை நன்கு வேக வைத்து அரிசிச் சோற்றுடன் கலந்து தாளித்துள்ளார்கள். அதனால் அந்தப் புலவு நாற்றம் அடிக்கும் பிரியாணி இனிய மணத்தைப் பெற்றுள்ளது என்று பிரியாணி என்னும் ஊன் துவை அடிசில் எவ்வாறு விரும்பத்தக்க உணவாக சமைக்கப்படுகிறது என்பதையும் கபிலர் விளக்கியுள்ளார்.

 சோழன் நலங்கிள்ளியைப் போற்றி கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் ஊன் சோறு என்னும் சொல் அமைந்துள்ளது. நலங்கிள்ளி எப்போதும் போர் முனையிலேயே இருப்பவன். அவனது பாசறையில் பாணர்களுக்கு எப்போதும் ஊன் சோறு வழங்குவதால் அந்தப் பாசறை ஆரவாரம் மிக்கதாக இருக்கும் என்கிறார்.


ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
 செம்மற்று அம்ம நின் வெம்முனை இருக்கை (33:14-15)
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10264 on: April 04, 2018, 02:49:00 PM »

 இந்த ஊன் சோறு என்பது துவை என்னும் சொல் இல்லாமல் வந்துள்ளது. ஆனால் ஊன் சோறு என்னும் சொல்லே பிரியாணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

 தேன் நிறைந்த குவளைகளைத் திறந்து அளவற்ற தேனை வழங்குவான். கரிய நிறம் கொண்ட ஆட்டுக்கடாவைக் கொன்று அதன் பெரிய துண்டங்கள் கலந்து சமைக்கப்பட்ட ஊன் துவை சோற்றினை மிகவும் அன்புடன் உண்ணத் தருவான். அந்தப் பாரி இப்போது இல்லை. அவ்வளவு வளம் நிறைந்த பறம்பு மலையை விட்டும் போகின்றேன் என்று வருந்துகிறார் கபிலர்.


  மட்டு வாய் திறப்பவும் மையிடை வீழ்ப்பவும்
 அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
 பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
 நட்டனை மன்னோ முன்னே (113:1-4)


  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஊன் துவை அடிசிலுடன் தேனையும் கலந்து உண்டிருக்கிறார்கள். தற்காலத்திலும் பிரியாணி பரிமாறும்போது தேன் போன்று இனிப்பாகவும் சற்றுத் திடமாகவும் இருக்கக் கூடிய இனிப்பு உணவினைப் பரிமாறுகிறார்கள். ஊன் துவை அடிசில் என்னும் அழகு தமிழ்ப் பெயரை நீக்கி விட்டு, பிரியாணி என்னும் பெயரை வழங்கிவிட்டு அது பாரசீகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
 
 - முனைவர் முகிலை இராசபாண்டியன்
 By Dinamani : 24th December
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10265 on: April 04, 2018, 02:52:17 PM »

கவி பாடலாம் வாங்க - 5 அடியும் ஓசையும் -2

இப்போது முதல் மூன்று சீர்களை மட்டும் சிறிது மாற்றிப் பாருங்கள். காதுக்கு ஓசை சரியாக வருகிறதா என்று கவனியுங்கள்.

 "தனன தனதன தான' என்பதற்கும், "தனதன தனன தான' என்பதற்கும் ஓசை வேறுபாடு தெளிவாக இருக்கிறது. இந்த வாய்ப்பாட்டை மறந்துவிட்டு வார்த்தைகளின் பொருளையும் மறந்துவிட்டுப் பாட்டில் உள்ள சீர்களை மாற்றினாலும் ஓசை வேறாகவே தோன்றும்.

 
"மனையி னிதந்தரு நீங்கிச்
 சிறைப்பட் டிடர்தரு டாலும்'

 
ஓசை எவ்வளவு வேறுபடுகிறது பாருங்கள். ஆனால் இந்த அடியின் முன் பகுதியைப் பின்னாகவும் பின் பகுதியை முன்னாகவும் வைத்துப் பாருங்கள்.
 
"இடர்மிகு சிறைப்பட் டாலும்
 இதந்தரு மனையி நீங்கி'

 
 இப்போது ஓசை மாறுவதாகத் தெரியவில்லை. ஆகவே முன்ன உள்ள பாதி அடியும், பின்னுள்ள பாதி அடியும் ஒரே மாதிரி ஓசை உள்ளவை என்றும், இந்த அரையடியில் உள்ள மூன்று சீர்களும் வெவ்வேறு ஓசை உடையவை என்றும் அறிந்து கொள்ளலாம். சீர்களின் இடம் மாறினால் அடியின் ஓசையே மாறி விடுகிறது. இனி இரண்டாவது அடியைப் பார்க்கலாம்.
 
 "பதந்திரு விரண்டு மாறிப்
 பழிமிகுந் திடருற் றாலும்'

 
இதற்கும் முன்பு போல ஓசைக்கு ஒரு வாய்ப்பாட்டைச் சொல்லிப் பார்த்தால் முதலடியின் வாய்ப்பாடாகவே இருப்பதைக் காணலாம்.
 
  தனதன தனன தான
 தனதன தனன தான
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10266 on: April 04, 2018, 02:55:35 PM »

திருப்புகழ்ப் பாட்டுக்களில் வரும் சந்தக்குறிப்பிலும் தனதன, தான என்றெல்லாம் இருக்கும்; அங்கே ஓசையை அளக்கும் முறை வேறு; இங்கே நாம் சொல்வது வேறு. அதையும் இதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். "தனதன தனன தான' என்ற அரையடியில் சிறிது மாற்றம் உண்டு பண்ணிப் பார்க்கலாம். "தனதன தான தான' இதில் இரண்டாவது சீரில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. அதனால் ஓசை மாறுகிறதா என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாருங்கள்.
 
"சுதந்தர தேவி நின்னைத்
 தொழுதிடல் மறக்கிலேனே'

 
என்ற நாலாவது அடியைப் பாருங்கள். அதற்கு ஓசை வாய்ப்பாட்டை ஊட்டினால்,
 
"தனதன தான தான
 தனதன தனன தான'

 
 என்று வரும். முதல் பகுதியில் இரண்டாவது சீராகிய தேவி என்பதற்குத் தான என்று வாய்ப்பாடு அமைக்க வேண்டும். தனன வேறு, தான வேறு; ஆனாலும் இந்த இரண்டாவது சீரில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஓசை மாறவில்லை. திருப்பித் திருப்பி இந்தப் பாட்டைப் படியுங்கள். பிறகு பாட்டை மறந்து விடுங்கள்.

 அடியில் முன் கண்ட வாய்ப்பாட்டோடு சில சீர்களில் மாறுபட்ட ஓசைகளைக் கொண்ட ஓர் அமைப்பைக் காணலாம்.

 
தனதன தான தான
 தனதன தனன தான
 தனதன தனன தான
 தனதன தான தான
 தனதன தனன தான
 தானன தான தான
 தனதன தான தான
 தானன தான தான

 
இதைச் சொல்லிச் சொல்லி ஓசையைக் கவனியுங்கள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10267 on: April 04, 2018, 02:58:00 PM »

தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை, கம்பன் பாட்டில் உள்ள அறுசீர் விருத்தப் பகுதிகள் முதலியவற்றை அடுத்தடுத்துப் படியுங்கள். ஓசை ஒரு விதமாகக் காதுக்குப் பழக்கமான பிறகு பின்னே வரும் பயிற்சியைச் செய்து பாருங்கள்.
 
  "செய்யுளை எழுத வேண்டி
 ----- முயற்சி செய்தால்
 பையவே ஓசை ------
 பாங்கினைப் பார்த்தல் வேண்டும்
 செய்வது திருந்தச் செய்தால்
 ----- வெற்றி எய்தும்;
 மையறு கவிதை பாடும்
 ----- ---- சேரும்'

 
  இந்தப் பாட்டு ஆறு சீர் விருத்தம். "இதந்தரு' என்று ஆரம்பித்த பாட்டில் முதலில் தன தன என்று வாய்ப்பாடு போட்டோம். இது "செய்யுளை' என்று தொடங்குவதனால் "தானன' என்று போட்டுக் கொள்ள வேண்டும்.

 இந்தப் பாட்டில் சில சீர்களை விட்டு வைத்திருக்கிறேன். அவற்றை நிரப்ப முயன்று பாருங்கள். முதலில் வார்த்தைகளைப் போடுவதற்குப் பதிலாகத் தக்கையைப் போல வாய்ப் பாட்டைப் போட்டுப் பாடுங்கள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10268 on: April 04, 2018, 02:58:39 PM »

அர்த்தத்தைப் பற்றிச் சிறிதும் இப்போது கவலைப்பட வேண்டாம். விடுபட்ட சீர்களை வாய்ப்பாட்டால் நிரப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டு, பிறகு அந்த ஓசைக்கு ஏற்ற வார்த்தைகளை ஒவ்வொன்றாக அமைத்துப் பாருங்கள். அப்படி அமைக்கும்போது மோனை வர வேண்டிய சீராக இருந்தால் மோனை வைக்க மறந்துவிடக் கூடாது.

 முதலடிக்கு மாத்திரம் சில விடைகளைக் குறிக்கிறேன். நான்காவது சீரில் தானன என்ற ஓசையாவது
 தனதன என்ற ஓசையாவது அமையலாம். ஆனால் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்ற எட்டு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றை முதலாக உடைய சொல்லே வர வேண்டும்; அப்போதுதான் மோனை அமையும்.

 அந்தச் சீரில் பின்வரும் வார்த்தைகள் வந்தால் பொருளும் ஒட்டும்; மோனையும் அமையும்.
 (1) சிறப்பினின், (2) சிறப்புற, (3) திருந்த, (4) திருத்தமாய், (5) சீரிய, (6) செம்மையாய், (7) சீர்பெற, (8) திருவுற, (9) திகழ, (10) திகழ்தர.

 இன்னும் பலவற்றை இணைக்கலாம்; இவை போதும். இவற்றில் திருந்த, திகழ என்னும் இரண்டையும் இணைத்துப் பார்த்தால் ஓசை சரியாக வராது. மற்றவை சரியாக வரும். மற்ற அடிகளையும் நிறைவுறுத்திப் பாருங்கள்.

 
  (தொடர்ந்து பாடுவோம்...)

By  "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன்
dinamani : 31st December 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10269 on: April 04, 2018, 03:01:13 PM »

அம்மணியம்மாளின் "சோபன மாலை!'[/color

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி ஜைன அறிஞர் திருத்தக்கதேவரால் எழுதப்பெற்றது. "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. சீவக சிந்தாமணி பதிப்பை செய்யும்போது, ஜைன சமய ஐயங்களை கும்பகோணத்திலிருந்த ஜைனப் பெண்மணி ஒருவர் தீர்த்து வைத்ததாக "என் சரித்திரம்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 ஜைனப் பெண்கள் சீவக சிந்தாமணி உள்ளிட்ட ஜைன நூல்களை நன்றாகக் கற்றவராக இருப்பர். அவருள் அம்மணியம்மாள் என்பவரும் ஒருவர். இவர், "சோபன மாலை' என்ற நூலை ஏட்டுப் பிரதிகளில் இருந்து பதிப்பித்த செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.

 இவர், நரியம்புத்தூர் பாஹூபலி நயினார் குமாரத்தி ஆவார். "சோபன மாலை' என்ற மங்கள வாழ்த்துப் பாமாலையை, ஜைன மார்க்கத்திலுள்ள "சமஸ்த சிராவக சிராவகி'யை (இல்லறத்தார்) மகா ஜனங்கள் எளிதில் அறிவதற்காக ஏட்டிலிருந்து அச்சாக்கியுள்ளார். 225 வரிகளை உடையது இந்த சோபன மாலை.
 பிண்டியாம் அசோக மர நிழலில் அமர்ந்த கடவுளாம் நேமிநாதர் பாதத்தைத் தலைமேல் கொண்ட சர்வாணயக்ஷரையும் அவரின் தேவியான தரும தேவியையும் போற்றி வாழ்த்திப் பாடும் நூல் சோபன மாலை.

 ஒரு பெண் பல பெண்களை அழைத்து, "பாருங்கடி' என்று அழைக்கும் அழகியல் பாடலாக இது அமைந்துள்ளது. திருமணங்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமரச் செய்து, தரும தேவியை வணங்கி இந்த மாலையைப் பாடுவராம். இதைக் கலியாண வாழ்த்து என்றும் அழைப்பராம். திண்டிவனம் அருகிலுள்ள பெருமாண்டூர் என்ற பெருமாண்டை ஊரில் கோயில்கொண்ட நேமிநாதரின் பாதங்களைத் தலைமேல் கொண்டவர் தருமதேவி. இத்தேவி மேல் பெண்கள் சோபனம் பாடுகிறார்கள்.

 
"அனகனை மாமுடி வைத்தவள்
 அருகர் திருவறங் காத்தவள்
 மனமகி ழுஞ்சருவா ணயக்ஷர்
 மருவும்பூ மாதுக்குச் சோபனம்'
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10270 on: April 04, 2018, 03:02:53 PM »

 இந்நூல் ஆங்காங்கே சில வரலாற்றுக் கருத்துகளையும் விளக்கிச் சொல்கிறது. பரராச சிங்க பராக்கிரமனாம் மகாராச ராசேந்திரன் முன்னிலையில் புத்தர்கள் வாது செய்ய வர, மன்னவன் வினாவைத் தொடுக்க, அதற்குப் புத்தர்கள் மறுமொழி உரைக்கின்றனர். இவ்வாறு ஏழு நாள்கள் தர்கத்திலேயே புத்தர் தம்மை தரும தேவி அருளால் வென்றவர் ஜைனர் என்று பாடல் அமைகிறது. சோபனம் பாடுவார் பெறும் நன்மைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

  "சோபனம் பாடின பெண்களெல்லாம்
 சுந்தர ரூபம் நிறைந்திடுவீர்!
 சோபனம் பாடின பெண்களெல்லாம்
 சுபமா யெந்நாளும் வாழ்ந்திருப்பீர்!'
 "சோபனம் பாடின பெண்க ளெல்லாம்
 சுமங்கலி யாயென்றும் வாழ்ந்திருப்பீர்
 அம்மைமேல் சோபனம் பாடின பேர்
 அருந்ததியைப் போல வாழ்ந் திடுவீர்
 அகில சம்பத்து மே பெறுவீர்! '

 
  1886-இல் ஏடுகளைப் படித்துப் பார்த்து, புரட்டி, ஒழுங்காக்கி, அச்சாக்கிப் பதிப்பித்த பெண்மணி அம்மணி அம்மாள். பதிப்பு வரலாற்றில் இவர் பெயரும் பதிவு செய்யப்படவேண்டிய - போற்றப்பட வேண்டிய ஒன்று.
 
  -முனைவர் தாயம்மாள் அறவாணன்
 By dinamani: 31st December 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10271 on: April 04, 2018, 03:04:52 PM »

மேல் வைப்பு

"மேல் வைப்பு' என்னும் யாப்பு வகை, பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய ஒரு புதுவடிவாகும். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி ஆறாம் பத்து-முதல் திருமொழி முழுவதும் இவ்வகையில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர் தேவாரத்திலும் (262, 263, 366) இவ் அமைப்பு உள்ளது. ஈரடி மேல் வைப்பு, நாலடி மேல் வைப்பு - என இதில் இரு வகைகள் அமைந்திருப்பதை இந்நூல்கள் காட்டுகின்றன.

 இரண்டடிப் பாடலுக்கு மேல் வேறு இரண்டடிகள் வைக்கப்படுவது முதல் வகை. இவ்வாறு மேல் வைக்கப்படும் அடிகள், அப்பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் ஒன்றாகவே அமைவதுண்டு. இவ்வகை ஞானசம்பந்தர் தேவாரத்தில் மட்டுமே அமைய, 4 அடிச் செய்யுளைத் தொடர்ந்து இவ்வாறு 2 அடிகள் வைக்கப்படும், 4 அடி மேல் வைப்புச் செய்யுள் தேவாரத்திலும், திவ்வியப் பிரபந்தத்திலும் காணப்படுகின்றன.

 இரு பகுதிகளால் அமையும் இம் மேல் வைப்புச் செய்யுளின் முதற்பகுதி 2 அடியாலோ 4 அடியாலோ அமைந்து, பிற பாவினங்களை ஒத்து வருகின்றது என்றாலும், மொத்த அமைப்பில் வேறுபாடு அமைவதால், பாவினங்களில் உள்ளடங்காமல் நிற்கின்றன. மேல் வைப்பின் இரண்டாம் பகுதி ஈரடிச் செய்யுளாக அமைந்து, அளவொத்த குறள் வெண் செந்துறையாகவோ, ஈற்றடி குறைந்த குறள் தாழிசையாகவோ வருகிறது. முதற்பகுதி ஓர் எதுகையாகவும், பிற்பகுதி வேறொரு எதுகையும் பெறும் நிலை காணப்படுகிறது (பெ.தி. 6 : 1 : 4).

 
""நிலவொடு வெயில் நில விருசுடரும்
 உலகமும் உயிர்களும் உண்டொருகால்
 கலை தரு குழவியின் உருவினையாய்
 அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
 ஆண்டாய்! உனைக் காண்பதோர் அருள் எனக்கருதியேல்
 வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே''


- முனைவர் இரா.வ. கமலக்கண்ணன்
By dinamani : 31st December 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10272 on: May 12, 2018, 02:47:27 PM »

ஓடிப்போ வாடையே!

வினை பொருட்டு தலைவன் வேற்றூர் சென்றுள்ளான். மனையில் மங்கை மட்டுமே உள்ளாள். வாடைக்காற்று இரக்கமில்லாமல் தலைவியைத் தீண்டித் துன்புறுத்துகிறது. கூப்பிடாமலேயே தேடிவந்து கொல்லும் வாடைக்குத் தாழ்ப்பாள் போட முடியவில்லையே என்று தவித்துக் கொண்டிருந்த தலைவிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது.

அரத்தினால் அறுத்துச் செய்த வளை கழல, தோள் நெகிழ பிரிவுத் துயரிலே பேதுறுகிறாளே என்று பரிவு சிறிதுமின்றிப் பாய்ந்து பாய்ந்து தாக்கும் வாடையை நோக்கி பரவசத்துடன் பகர்கின்றாள் தலைவி.
'வாடையே! அதோ என் தலைவர் அருகே வருகிறாராம்; விரைந்து வருகிறாராம்; என் துயர் துடைக்க வருகிறாராம்; வந்ததும் என்னை அணைப்பார். நீ தலைகுனிந்து ஓட வேண்டியிருக்கும். தலைவன் வந்ததும் நீ தலைதெறிக்கத் தோற்று ஓடத்தான் போகின்றாய். அதற்கு முன்பே நீ ஓடிப் போய்விடு வாடையே!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10273 on: May 12, 2018, 02:49:43 PM »

ஒன்பது மன்னர்கள் ஒன்றுகூடி தங்களின் பதினெட்டுக் கரங்களும் பின்னிப் பிணைந்துள்ளதால் கரிகால் வளவனை தோற்கடித்துவிடலாம் என்று கர்வத்துடன் வாகைப் பறந்தலையில் காத்திருந்தார்கள். அதிர வைக்கும் குதிரைப் படைகளோடு எதிரிகள் அணிவகுத்திருக்கும் வாகைப் பறந்தலை போர்க்களத்திற்கு வாகை சூட வருகின்றான் கரிகால் பெருவளத்தான் என்றதும் உதிர்ந்துவிடும் நம் தலை என்று, விதிர்த்து வெண்கொற்றக் குடைகளை வீசி எறிந்துவிட்டு ஓடிவிட்டார்களே பீடில்லா மன்னர்கள், அதுபோல் ஓடிவிடு வாடைக்காற்றே!' என்று எச்சரித்தாள் தலைவி.

'அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-

முனிய அலைத்தி, முரண்இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த
பீடில் மன்னர் போல,
ஓடுவை மன்னால் - வாடை நீ எமக்கே!'

(அகநா, 125)

காதல் பாட்டில் கரிகால் பெருவளத்தானின் களச்செய்தியைப் பகர்ந்துள்ளார் புலவர் பரணர்.

By -கே.ஜி. இராஜேந்திரபாபு
dinamani : 07th January 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10274 on: May 12, 2018, 02:53:08 PM »

வில்லாப் பூக்கள்

இறை வழிபாடு மற்றும் மாந்தர்கள் அணிந்து கொள்ளுதல் என்னும் நிலைகளில் பலவிதமான பூக்கள் இலக்கியங்களில் பேசப் பெறுகின்றன. பூக்களில் பெரும்பாலானவை 'பண்டமாற்று முறையில்' தேவை கருதி விற்பனை செய்யப்பட்டன. பயன்பாட்டிற்கு ஆகாத பூக்கள் விற்பனை செய்யப்பட மாட்டா. இப்படி, விலைக்கு விற்க இயலாத பூக்களை சங்க இலக்கியங்கள் 'வில்லாப் பூக்கள்' எனக் குறிக்கின்றன. அவ்வாறு, வில்லாப் பூக்களாகப் பேசப்பட்டன பூளைப் பூ, ஆவிரைப் பூ, உழிஞைப் பூ, எருக்கம் பூ எனப் போல்வன ஆகும்.

வில்லாப் பூக்களாகிய இவற்றை, மனம் பித்துப் பிடித்தவர்கள் சூடிக்கொள்வர் எனக் கூறப்படுகிறது. வில்லாப் பூச் சூடிய ஆடவன் ஒருவனின் செயலை, நற்றிணைப் பாடலொன்று காட்சிப் படுத்துகின்றது.
தலைவன் ஒருவன், தன் தலைவி தனக்குக் கிடைக்காததை அறிந்து வருந்தி, வேறு வழியின்றி, பனங் கருக்கினால் செய்யப்பட்ட குதிரையிலேறி, அவளைக் காண வருகிறான். அப்பொழுது அவன், 'முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்குக் கேட்குமாறு தனது நெஞ்சிற்குக் கூறுவான் போலச் சொல்லுகிறான்.

'நல்ல ஓவியனொருவன் தீட்டிய சித்திரம் போன்று அழகுடைய தலைவியின் பொருட்டு வருத்தமடைந்துள்ள நெஞ்சே! விலைக்கு விற்கவியலாத 'பூளை மலரையும், உழிஞைப் பூவையும், எருக்கம் பூவையும் ஆவிரம் பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி, 'நான் பித்துப் பிடித்துள்ளேன்' என்று சொல்லுமளவிற்கு, பல ஊர்களிலும் சென்று திரிகின்ற, நெடியதும் கரியதுமான பனை மடலாலே கட்டிய குதிரையைப் பெற்றுள்ளாய்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10275 on: May 12, 2018, 02:55:01 PM »

நீ என் சொல்லைக் கேட்க விரும்புவாய் என்றால், ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஞாயிற்றின் வெம்மை ஒடுங்கும் வரையிலும், நல்ல அரசனின் வெண் கொற்றக் குடையின் நிழலிலிருந்து மக்கள் இன்புறுவது போல, குளிர்ச்சியான இம்மரத்தின் கீழ் சிறிது நேரம் தங்கியிருந்து, பின் செல்வாயாக' என்கிறான். உதவாப் பூச்சூடித் திரியும் இரங்கத்தக்க பித்தனைக் கண்முன் நிறுத்துகிறது பின்வரும் பாடல்:

''வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முறுவலெனப் பல்லூர் திரிதரும்
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே
கடனறி மன்னர் குடைநிழல் போலப்
பெருந்தண் என்ற மரன் நிழல் சிறி திழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடரென
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னுங் கிளவி வல்லோன்
எழுதி யன்ன காண் டகு வனப் பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே'' (146)


கலித்தொகையிலும் (பா. 139) 'வில்லாப் பூ'ப் பற்றிய குறிப்பு உண்டு!

By -முனைவர் ச. சுப்புரெத்தினம்
dinamani : 07th January 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10276 on: May 12, 2018, 02:59:09 PM »

எடக்கு... மடக்கு... தடுக்கு!

மடக்கு என்பது ஓர் எல்லையோடு நின்று திரும்பி வருவதாகும். பாடலுக்கு அழகு சேர்ப்பது அணி. அவ்வணியில் வந்த சொல் மீண்டும் மீண்டும் மடங்கி வருதலே அணியில் மடக்கு என்பர். இதனை வடநூற் புலவர்கள் 'யமகம்' என்பர்.

சங்கப் புலவர்கள் இலக்கணம் யாப்பதற்கு முன்பே நம் உழவர் பெருமக்கள் உழவு செய்யும்போது, உழுத பகுதியை சால், விளா, மடக்கு என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

பனையோலைப் பெட்டி முடையும் ஒருத்தி, தன் வாழ்க்கையைப் பாடலாகப் பாடிக்கொண்டே பெட்டியை முடைகிறாள். எட்டுப் பெண்மக்கள் அவளுக்கு; திசைக்கு இருவர் வீதம் திருமணமாகிச் சென்றுவிட்டனர்; இப்பொழுது யாரும் தாய் வீட்டுக்கு வருவதில்லை. எட்டுவரி ஓலைக் குட்டான்(பெட்டி) மடக்காகக் கீழ்க்காணும் பாடலைப் பாடுகின்றாள் அப்பெண்.


'சாரைக் குருத்தெடுத்துச் சண்டாளன் பேரைச்சொல்லி
வடக்கெ திருப்பிவச்ச வண்ணோலைப் பொட்டி ரெண்டு
தெக்கெ திருப்பிவச்ச தென்னோலைப் பொட்டி ரெண்டு
கெழக்கெ திருப்பிவச்ச கீழோலைப் பொட்டி ரெண்டு
மேருக்கெ திருப்பிவச்ச மேலோலைப் பொட்டி ரெண்டு
எடக்கு! மடக்கு! தடுக்கு! கெடக்கு!'


இப்பாடலை நம் நாட்டு உழைக்கும் மக்கள் இன்றும் பாடி வருவதைக் காணலாம். இப்பாடலில் வரும் சாரைக் குருத்து என்பது ஒன்றுக்கும் உதவாத நிலையிலுள்ள பனையோலைக் குருத்தாகும். இப்பாடலின் பொருள்: 'எடக்கு - துன்பம்; மடக்கு - ஓலைப் பெட்டியின் மூலை, மடக்குவது; தடுக்கு - ஓலைத் தடுக்கு; கெடக்கு - அது கிடக்கட்டும் கவலையை விடு' என்பதாம்.

பெண் மக்களை ஓலைப் பெட்டிக்கும் சாரைக் குருத்தைக் கணவனுக்கும் வைத்து ஏற்றிப் பாடுகிறாள். இவ்வாறு, தன் வாழ்க்கையின் நிலைப்பாட்டைப் பாடலாகப் பாடிவரும் உழைப்பாளர் பாடல்களை அடிப்படையாகக் கொண்டே புலவர்கள் 'மடக்கு' என்னும் அணியில் பாடல்களைப் புனைந்திருக்க வேண்டும்! இவ்வகையில் குற்றுயிர் மடக்காகச் சேந்தன் பனையவயல் சிவக்கவிராயர் பாடலொன்றை ஈண்டு காணலாம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10277 on: May 12, 2018, 03:02:29 PM »

'அமரரமர மதுர சதுர வரக வரத பரவ
அமரகமல ரயிர நகர
அடரவசுர ரசர
அகோர வீர கவர'

இப்பாடலின் பொருள்:

அமரரமர - தேவர்களுக்கெல்லாம் தலைவனே!
மதுர சதுர - இனிமையான நான்மறைகளும் போற்றக் கூடிய சிவனே!
வரக வரதபரவ - வராக அவதாரமெடுத்த வரதராசப்பெருமாள்(திருமால்) உன்னை வணங்க!
அமரகமலர் - தாமரை மலரில் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியர் (மலைமகள், அலைமகள், கலைமகள்)
அயிர நகர - அயிராணியாகிய இந்திராணி(இந்திரனின் தேவி) பயந்தோட;
அடரவசுரர் - போர் செய்த தக்கன் முதலாய அசுரர்கள்
அசர - தோல்வியுறும் படியாக
அகோர வீர - அகோர வீரபத்திரர்
கவர - தக்கனுடைய தலையைக் கொய்து கொன்றார்.


இதன் பொருள்: சிவபுராணத்தில் சொல்லப்பட்ட, சிவனால் அனுப்பப்பெற்ற வீரபத்திரனாகிய வீரன் தக்கன் வேள்வியை அழித்து, தக்கனைப் போரில் கொன்ற செய்தியாகும். இஃது அகரமாகிய குற்றுயிர் மெய்களுடன் கூடி இப்பாடல் முழுதும் மடங்கி வந்துள்ளதால், குற்றுயிர் மடக்காகும். மேலும், இக்கவிராயர் பாடிய,

'பாடிப் பாடிப் பாடிப்பாடி பாடியவர் ஒருவரே!
தேடித் தேடித் தேடித் தேடித் திரும்பியவர் இருவரே!
ஓடி ஒடி ஓடி ஓடி ஒளிந்தவர்கள் மூவரே!
நாடி நாடி நாடி நாடி நத்தியவர் கோடியே!'


எனும் இப்பாடல், முதல் முற்று, ஈற்று ஏகார மடக்கு அணியில் அமைந்துள்ளது. இதன் பொருள்:
ப் பாடவே தெரியாத நாரதர் ஒவ்வொருவரிடமும் சென்று பாடங்கேட்டு, இறுதியில் கானபந்து முனிவரிடம் (கோட்டான்) இசைபயின்று, இசை ஞானியானார் (நாரத புராணம்)
ப் சிவபெருமானின் திருவடி தேடித் திருமாலும், திருமுடி தேடிப் பிரமனும் சென்று காணாது திகைத்துத் திரும்பினர் (சிவமகா புராணம்)
ப் சிவபெருமான் பொருட்டுத் தக்கனொடு போர் புரிந்த வீரபத்திரனைக் கண்டு முப்பெருந்தேவியரும் ஓடி ஒளிந்தனர்.
ப் சிவபெருமானின் திருவடிகளை நாடி வணங்கி, பக்திப் பெருக்கோடு அருள்பெற்ற அன்பர்கள் கோடிக்கணக்கானவர்களாவர்.
நந்தமிழ் புலவர்கள் சருக்கரையைப் பாவாகக் காய்ச்சி ஊற்றிய 'மடக்கு' என்கிற இனிப்புப் பண்டம் ஈண்டு குறிப்பிடத்தக்கது!


By -முனைவர் கா.காளிதாஸ்
dinamani  07th January 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10278 on: May 24, 2018, 12:44:33 PM »

"ஞாயிறு' எனும் சான்றோன்!

சூரியனின் முதன்மையைக் கருதிய சுந்தரமூர்த்திசுவாமிகள் ""காலமு ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்'' என்று குறிப்பிட்டுள்ளார். பூமியிலிருக்கும் நமக்கு சூரியனே மிக அருகிலுள்ள கோளாகும். இது தாமாக ஒளிரும் தன்மை கொண்டது. மிகுதியான ஒளியைப் பெற்றிருக்கும் இயல்பை உடையது. சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் தருகின்றது. உலக உயிர்களுக்கு மட்டுமின்றி, செவ்வாய் முதலான கோள்களுக்கும் வெப்பம், ஒளி முதலானவற்றைச் சூரியன் வழங்குகிறது.

உலகில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் சூரியன் சான்றாக இருத்தலினால் அக்கோளுக்கு "சான்றோன்'" என்ற தமிழ்ப் பெயரைத் தமிழர்கள் வைத்துள்ளனர். இக்கருத்தைச் சிலப்பதிகாரம் (சிலப். து.மா.50,51) சுட்டும். இக்கருத்திற்கு இயைபாகப் பிங்கல நிகண்டு மிருகசீரிடம், அறிஞன், சூரியன் ஆகிய மூன்றினுக்கும் "சான்றோன்' என்ற பெயரிருத்தலை,

"மிருகசீரிடமு மிக்கோன் பெயரும்
பெருகிய கதிரின் பெயருஞ் சான்றோன்''
(பிங்கலம்,10, நூ.481)

என்று குறித்துள்ளது. சூரியனின் இன்றியமையாமையைக் கருதிய சமய நூல்கள் சூரியனைக் கடவுளாகப் போற்றுகின்றன. இளங்கோவடிகள் தம் நூலுள் "ஞாயிறு போற்றுதும்' எனக் கூறிச் சூரியனுக்குப் பெருமை சேர்க்கின்றார். தமிழர்கள் சூரிய வழிபாடு என்னும் பெயரில் சூரியனை வணங்கி வந்துள்ளனர். இச்செய்தியை நற்றிணையும், அகநானூறும் முறையே,

"முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடர்' (நற். 283: 6-7)

"தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்'
(அகநா.263:1-2)


என்று தெரிவிக்கின்றன. சூரியனை தெய்வமாகக் கொண்டு போற்றினர் என்ற செய்தியைக் கலித்தொகையும் (108:13) குறிப்பிட்டுள்ளது. தற்காலத்தில் கோயில்களில் சூரியன் முதலான ஒன்பது கோள்களை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10279 on: May 24, 2018, 12:46:16 PM »

இன்றைய மருத்துவ அறிஞர்கள், சூரிய ஒளியில் மனித உடல் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்கிறது எனக் கூறுகின்றனர். சூரிய வணக்கத்திற்குரிய மந்திரம் தனியே உண்டு. அதனால் கதிரவனை வழிபட்டால் கண்ஒளி பெருகும் என்பர். "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?' என்ற பழமொழி இதை உணர்த்துகிறது.

மயூரகவி என்ற வடமொழிப் புலவர் "சூரிய சதகம்' பாடிக் கண் பெற்றார் என்பது கர்ணபரம்பரை கதை. (கி.வா.ஜகந்நாதன், நவக்கிரங்கள் பக்.41) விதாலிபூர்ணிகா என்னும் பெயருடைய சோவியத் அறிஞர் ஒருவர், தம்நூலில் இச்செய்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களுடைய கூற்று ஒரு புறமிருக்க, மருத்துவ வல்லுநர்களும் சூரிய ஒளியில் மனித உடல் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்கின்றனர்' என்று குறித்துள்ளார். (பிறப்பு முதல் இறப்புவரை. பக்-41)

மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கின், சூரியன் உலகியல் நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி வானமண்டலத்தில் இயங்கும் செவ்வாய் முதலான கோள்களின் இயக்கங்களுக்கும் உதவி புரிகிறது எனக்கொள்ளலாம்.

சமயவாதிகள் காலத்தை உருவம் இல்லாதது என்பர். காலம் உருவம் இல்லாமலிருந்து கொண்டே உலகத்திற்குப் பயன் தருகிறது. இக்கருத்தினை சிவப்பிரகாசர் ""உருவிலியாயுங் காலமுதலுறு பயன் கண்டாங்கு'' (சதமணி மாலை -14) என்று குறிப்பிட்டுள்ளார்.

காலமானவன் ஞாயிறு என்னும் அளவுக் கருவியைக்கொண்டு மனிதர்களின் வாழ்நாளை அளக்கின்றான் என்ற செய்தியை நாலடியார்,


"தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும்நாள் உண்ணும்' (பா.7)


என்று குறித்துள்ளது. சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் காலத்திற்கு "செராமானம்' என்று பெயர். சூரியனைக் கருவியாக வைத்துக்கொண்டு காலத்தை அளப்பதை சோதிடநூல்கள் குறிப்பிட்டுள்ளன. சித்திரைத் திங்கள் முதல்நாள் தொடங்கிப் பங்குனித் திங்கள் கடைநாள் வரை உள்ள ஒரு காலக்கூறினை செளராமானயாண்டு என்பர். அதாவது, சூரியன் மேடராசியில் இருந்து மீனராசி வரை செல்லும் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் செராமானயாண்டு என்பர்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 ... 512 513 [514] 515   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!