சிறுவர் பாடல்கள்...
My Community
March 23, 2018, 11:17:50 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 ... 16 17 [18] 19 20   Go Down
  Print  
Author Topic: சிறுவர் பாடல்கள்...  (Read 25014 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #340 on: August 19, 2014, 01:46:04 PM »

வெண்ணிலாவே..! – சிறுவர் பாடல்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்

வெண்ணிலாவே – நீ

இறங்கி வந்து ஆடிடுவாய்

வெண்ணிலாவே !

தங்கத் தட்டில் பாலும் தேனும்

வெண்ணிலாவே – நீ

தவழ்ந்து வந்து சாப்பிடுவாய்

வெண்ணிலாவே!

சங்கத் தமிழை நூனும் சொல்வேன்

வெண்ணிலாவே – நீ

சாத்திரங்கள் உரைத்திடுவாய்

வெண்ணிலாவே!

வங்கக் கடலின் ஓரம் செல்வேன்

வெண்ணிலாவே – நீ

அங்கும் வந்து ஒளி தருவாய்

வெண்ணிலாவே!

எங்கே நான் சென்ற போதும்

வெண்ணிலாவே – நீ

அங்கும் வந்து ஆடிடுவாய்

வெண்ணிலாவே!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #341 on: August 19, 2014, 01:46:40 PM »

இரட்டைக் கிளவி – சிறுவர் பாடல்

கட கட வண்டி ஓடுது,

காட்டாங்குளத்தூர் போகுது

சட சட மழை பொழியுது

சாலை நிரம்பி வழியுது!

தடதட வென்று ஓடினால்

தரையில் விழக்கூடுமே!

நடநட தூரம் போகணும்

நமது ஊரை அடையணும்!

படபட சத்தம் கேட்குது

பட்டாசு சிதறி வெடிக்குது!

மட மடவென்று சாயந்திடும்

மரத்தின் கிளையை வெட்டினால்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #342 on: August 19, 2014, 01:47:17 PM »

சூரியன் – சிறுவர் பாடல்


உலகுக்கெல்லாம் ஒரு விளக்கு – இறைவன்

உணர்ந்து ஏற்றிய திருவிளக்கு!

கலக்கும் புயலில் அணையாது! –  ஒரு

கடுமழை நீரிலும் நனையாது!
 

என்றோ ஒரு நாள் இறைவன் – இதை

எட்டாத தொலைவில் ஏற்றி வைத்தான்!

எண்ணெயும் திரியும் இல்லாமல் – இது

எத்தனை யுகங்களாய் எரியுதம்மா!
 

வையம் வாழ எரியுதம்மா – ஒளி

வைரக் கடுமழை பொழியுதம்மா!

மாயச் சூரிய விளக்கிதனை – புகழ்

மாலை சூட்டி வணங்கிடுவோம்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #343 on: August 19, 2014, 01:47:56 PM »

ஒற்றுமை – சிறுவர் பாடல்

என்றும் உண்மை பேசு

எங்கும் முதன்மை கொள்

என்றும் நன்மை செய்

எப்பொழுதும் சோம்பலை நீக்கு.


எல்லோரும் எல்லாமும் பெறவே

எல்லோரும் ஒன்றாய் உழைப்போம்

எல்லோரும் ஒன்றாய் இருந்தால்

எந்நாளும் பலமாய் இருக்குமே.


எல்லா வேற்றுமையும்

என்றும் ஒழித்து வாழ்வோம்

எல்லா வளமும் பெற்று

என்றும் நன்றாய் வாழ்வோம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #344 on: August 19, 2014, 01:48:33 PM »

ஏன் என்று கேட்டால்…(சிறுவர் பாடல்)

ஏணி நல்ல ஏணி

ஏற உதவும் ஏணி

ஏறியவர்கள் இறங்க

என்றும் உதவும் ஏணி

-

ஏன் என்ற கேள்வி

ஏன் தோன்றியது..?

ஏன் என்று கேட்டால்

ஏதோ விடை கிடைக்கும்

-

ஏன் என்று கேட்டால்

ஏராளமாய் அறிவு

நன்றாய் வளரும் அறிவாய்

நலமாய் வாழ்வு அமையும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #345 on: August 19, 2014, 01:49:23 PM »

ஐந்து என்றால். . .(சிறுவர் பாடல்)

ஐந்து என்றால் எண்ணாகும்

ஐந்து ஒரு கை விரலாகும்

ஐவர் என்றால் பாண்டவரே

ஐயம் என்றால் சந்தேகமே.


ஐயம் என்றால் பிச்சையாகும்

ஐயா என்றால் தாத்தாவாகும்

ஐந்து பெருங்காப்பியங்கள்

ஐந்து சிறு காப்பியங்கள்.


ஐய மின்றித் தமிழில் உண்டு

ஐயம் நீக்கப படிப்பாயே

ஐயமின்றி உழைப்பாயே

அமுத வாழ்வு பெறுவாயே.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #346 on: August 19, 2014, 01:49:56 PM »

ஒன்பது எல்லாம் ஒன்பது..! – சிறுவர் பாடல்

ஒன்பது என்றால் எண்ணாகும்

ஒன்பது என்றால் நவதானியம்

ஒன்பது என்றால் நவக்கிரகம்

ஒன்பது என்றால் நவரசங்கள்

-

ஒன்பது என்றால் நவரத்தினங்கள்

ஒன்பது என்றால் நவச்சுவைகள்

ஒன்பது பேரு நல்ல

ஒட்டகம் மேலே ஏறி

-

ஒவ்வோர் ஊராய் போனார்கள்

ஒட்டகம் சுமை தாங்காமல்

உடனே கீழே விழ

ஒன்பது பேரும் விழுந்தனரே.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #347 on: August 19, 2014, 01:50:32 PM »

தீபாவளி

புத்தம் புது சட்டைகள்

போட்டு மகிழத் தீபாவளி

சத்தம் போடும் வெடிகள்

எங்கம் கேட்கும் தீபாவளி.

-

ஒளி ஒளியாய் விளக்குகள்

ஒவ்வொரு வீட்டிலும்

களிக் கொள்ள ஏற்ற

களிப்பை நல்கும் தீபாவளி

-

பூப் போன்ற வெடிகளும்

பொறி பறக்கும் வெடிகளும்

எப் போதும் கேட்க

இன்பம் நல்கும் தீபாவளி.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #348 on: August 20, 2014, 01:48:38 PM »

நிறங்கள் – சிறுவர் பாடல்

கடலின் நிறமோ நீலம்

கானக் குயிலோ கறுப்பு

உடலின் இரத்தம் சிவப்பு

உண்டால் வருவது உவப்பு

-

மல்லிகை நிறந்தான் வெள்ளை

மணக்கும் தாழை மஞ்சள்

புல்லின் வண்ணம் பச்சை

புரிந்தால் அறிவு நிச்சயம்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #349 on: August 20, 2014, 01:49:18 PM »

ஏன்…? – சிறுவர் பாடல்

கொழுக்கட்டை கொழுக்கட்டை

ஏன் வேகல?

அடுப்பு எரியல நான் வேகல!

அடுப்பே அடுப்பே

ஏன் எரியல?

மழையாப் பேஞ்சது நான் எரியல!

-

மழையே மழையே

ஏன் பேஞ்சே?

புல்லு வளர நான் பேஞ்சே(ன்)

-

புல்லே புல்லே

ஏன் வளர்ந்தே?

மாடு தின்ன நான் வளர்ந்தேன்!

மாடே மாடே

ஏன் தின்ன?

மாட்டுக்காரப் பையன்

அவுத்து விட்டான் நான் மேஞ்சேன்!

-

 

மாட்டுக்காரப் பையா

ஏன் அவுத்து விட்டே?

குழந்தை அழுதது நான் அவுத்து விட்டேன்!

 

குழந்தை குழந்தை

ஏன் அழுத?

எறும்பு கடிச்சது நான் அழுதேன்!

எறும்பே எறும்பே

ஏன் கடிச்சே?

புத்துல கைய விட்டாச் சும்மா இருப்பேனா?
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #350 on: August 20, 2014, 01:49:54 PM »

என்ன…? – (சிறுவர் பாடல்)

எங்கே போனாய்

ஊருக்குப் போனேன்!

என்ன ஊர்?

மயிலாப்பூர்!

என்ன மயில்?

காட்டு மயில்

என்ன காடு?

ஆர்க்காடு

என்ன ஆறு?

பாலாறு!

என்ன பால்

கள்ளிபால்!

என்ன கள்ளி?

இலைக்கள்ளி!

என்ன இலை?

வாழை இலை!

என்ன வாழை?

கற்பூர வாழை!

என்ன கற்பூரம்?

ரசக் கற்பூரம்!

என்ன ரசம்?

மிளகு ரசம்!

என்ன மிளகு?

வால் மிளகு!

என்ன வால்?

நாய்வால்!

என்ன நாய்?

மர நாய்!

என்ன மரம்?

பலா மரம்!

என்ன பலா?

வேர்ப் பலா!

என்ன வேர்?

வெட்டி வேர்!

என்ன வெட்டி?

தாளி வெட்டி!

என்ன தாளி?

விருந்தாளி!

என்ன விருந்து?

மண் விருந்து!

என்ன மணம்?

பூ மணம்!

என்ன பூ?

மாம் பூ

என்னமா?

அம்மா!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #351 on: August 20, 2014, 01:50:41 PM »

வண்ணம் அறிவோம் – குழந்தைப் பாடல்

நண்பா நண்பா நண்பா

நன்றாய் வண்ணம் அறிவோம்
 
குருதியின்வண்ணம் குறிப்பாய்

குருதியின் வண்ணம் சிவப்பே!

பல்லின் வண்ணம் பகர்வாய்

பல்லின் வண்ணம் வெள்ளையே!

கூந்தலின் வண்ணம் கூறுவாய்

குந்தலின் வண்ணம் கருப்பே!


கத்தரி வண்ணம் கழறுவாய்

கத்தரி வண்ணம் ஊதா

இலையின் வண்ணம் இயம்புவாய்

இலையின் வண்ணம் பச்சையே

மஞ்சளின் வண்ணம் மலர்வாய்

மஞ்சளின் வண்ணம் மஞ்சளே


வானின் வண்ணம் விளம்புவாய்

வானின் வண்ணம் நீலமே!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #352 on: August 20, 2014, 01:51:25 PM »

வெள்ளாடே…! – சிறுவர் பாடல்

- ஆடே ஆடே வெள்ளாடே

அக்கரைப் பச்சை வெள்ளாடே

காடே காடே வெள்ளாடே

காட்டுப் பச்சிலை தின்பாயே
-

சீராய்ப் புலாலைத் தின்னாச்

சிறப்பே உண்டே உனக்கே

காராய் விளங்கும் உனக்கே

கசப்பிலா வெள்ளை தந்ததார்?
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #353 on: August 20, 2014, 01:52:36 PM »

சின்னச் சின்னச் சிட்டுக் குருவி

சிறகை விரிக்கும் சிட்டுக் குருவி

என்ன என்ன எடுப்பாய் குருவி

இரையைத் தேடும் சிட்டுக் குருவி

-

சொன்ன சொன்ன சொகுசுக் குருவி

சோறு வேணூமா சொல்லு குருவி

தின்னத் தின்னத் திகட்டும் குருவி

தேடுவாய் நெல்லைத் தின்பாய் குருவி
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #354 on: August 20, 2014, 01:53:07 PM »

தேனீ போல வாழ்ந்திடப் பார்!

உயர்ந்த மரக் கிளையிலே
தம்பி நீயும் உற்றுப் பார்
தேனீக்கள் கட்டி வைத்த
தேன்கூடு தொங்குது பார்!

ஆயிரமாயிரம் அறைகளிலே
அடக்கமாக அமர்வது பார்
அண்ணன் தம்பி போலவே
அன்பாய் கூடி வாழ்வது பார்!

ஒரு பொழுதேனும் வீணாக்காமல்
பறந்தேதான் போவது பார்
ஓய்வின்றியே ஓடியாடி
சுறுசுறுப்பாக உழைப்பது பார்!

அழுக்கைத் தேடிப் போகாமல்
தூய்மையாக இருக்குது பார்
மலர்களை மட்டும் நாடியே
தேனை மட்டும் சேர்க்குது பார்!

நல்லவை நாடி ஒற்றுமையாக
தேனீ போல வாழ்ந்திடப் பார்
தேனைப் போல உன் வாழ்வும்
நாளெல்லாம் இனிக்கும் பார்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #355 on: August 22, 2014, 02:27:35 PM »

தேனீயே தேனீயே – குழந்தைப் பாடல்

தேனீயே தேனீயே

தேனுறிஞ்சும் தேனீயே

தேனீயே தேனீயே

தேன் குடிக்கும் தேனீயே

-

மலர்தோறும் தேனீயே

மயங்கிசை பாடுவாயே

மலர்தோறும் தேனெடுத்தே

மக்களுக்கும் வழங்குவாயே
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #356 on: August 22, 2014, 02:28:10 PM »

குயிலே குயிலே – குழந்தைப் பாடல்

குயிலே குயில கூவு

கூகூ குயிலே கூவு

ஒயிலே ஒயிலே ஆடுவோம்

ஓங்கிய குரலில் பாடுவோம்

-

கையிலே கையில களாப்பழம்

கருமை தந்தது நீயோ

கோயிலில் நாத ஓசை

குரலும் கொடுத்தது நீயோ
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #357 on: August 22, 2014, 02:28:38 PM »

இலக்கணப் பாடம்…!

க ச ட த ப ற – வல்லினம்

கடமையாற்ற நம்மினம்

-

ங ஞ ண ந ம ன – மெல்லினம்

ஞாலம் முழுதும் புள்ளினம்

-

ய ர ல வ ழ ள – இடையினம்

நாட்டில் பாரீர் ஆவினம்

-

மனிதராக – வாழ்ந்திட

மக்கள் எல்லாம் ஓரினம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #358 on: August 22, 2014, 02:29:23 PM »

முயல் – சிறுவர் பாடல்

நல்ல நல்ல முயற் குட்டி

நான வளர்க்கும் முயற்குட்டி

வெள்ளை வண்ணம் முயல் குட்டி

வீட்டில் வளரும் முயல் குட்டி!

கோசு முள்ளங்கி இலைகள்

கொரித்து நாளும் திண்ணுமாம்

மேசைக் கீழும் தூங்குமாம்

மெத்தை மேலும் தூங்குமாம்!

ஆசை கொண்டே எவருமே

அன்பால் இதனைத் தூக்குவர்

மீசை தன்னை அசைத்துமே

அன்பாய் நன்றி சொல்லுமாம்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #359 on: August 22, 2014, 02:29:50 PM »

எத்தனை கால்கள் – சிறுவர்பாடல்

நமக்கு இரண்டு கால்கள்

நாய்க்கு நான்கு கால்கள்

ஈக்கு ஆறு கால்கள்

சிலந்திக்கு எட்டு கால்கள்

நண்டுக்கு பத்து கால்கள்

நமக்குத் தெரிந்த கால்கள்

எண்ணமுடியாக் கால்கள்

எதற்கு உண்டு சொல் சொல்!

மரவட்டை கால்கள் பார்! பார்!

எத்தனை எண்ணிச் சொல்! சொல்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 ... 16 17 [18] 19 20   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!