சிறுவர் பாடல்கள்...
My Community
May 27, 2018, 09:52:12 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 ... 18 19 [20]   Go Down
  Print  
Author Topic: சிறுவர் பாடல்கள்...  (Read 26737 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #380 on: August 26, 2014, 08:43:49 PM »

ஒன்றும் ஒன்றும். . .(சிறுவர் பாடல்)

ஒன்றும் ஒன்றும் இரண்டு

உழைப்போம் நாமும் திரண்டு

இரண்டும் ஒன்றும் மூன்று

இன்பத் தமிழோ மூன்று!-

மூன்றும் ஒன்றும் நான்கு

மூச்சை இழுத்து வாங்கு!

நான்கும் ஒன்றும் ஐந்து!

நம் விரல் ஐந்தும் பஞ்சு!-

ஐந்தும் ஒன்றும் ஆறு

அன்பால் கிடைக்கும் பேறு!

ஆறும் ஒன்றும் ஏழு

ஆடல் பாடல் சேரு!-

ஏழும் ஒன்றும் எட்டு

வானில் வெள்ளித் தட்டு!

எட்டும் ஒன்றும் ஒன்பது

உணவை மென்றே தின்பது!-

ஒன்பது ஒன்றும் பத்து

உண்மை பெரிய சொத்து!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #381 on: August 27, 2014, 01:35:12 PM »

அறுசுவை – சிறுவர் பாடல்

அறுசுவை என்பது என்னம்மா?
அதை நீ எனக்குச் சொல்லம்மா?
இந்தா நீயும் ஆ காட்டு!
கரையும் சர்க்கரை தருகின்றேன்!
எப்படி இருக்குது சொல்லிடுவாய்?
இதன் பேர் இனிப்புச் சுவையாகும்!

பாகற்காய் நீ சாப்பிடுவாய்!
பகலுணவில் இதைச் சேர்த்திடுவாய்!
ஏன்தான் முகத்தைச் சுளிக்கின்றாய்!
இதுதான் கசப்புச் சுவையாகும்!-

உப்பைக் கடல் நீர் தருகிறது
உப்புச் சுவைதான் உவர்ப்பாகும்!
உப்பு இல்லாவிட்டாலே
உணவு உள்ளே போகாது!

புளியம் பழமதை உண்டிடுவாய்!
புளிப்புச் சுவையது கண்டிடுவாய்!
புளியம் பழச்சுவை புளிப்பாகும்
புளியும் கரைந்து குழம்பாகும்!

இந்தா மிளகாய் தின்று பார்!
ஏன் நீ ஆ! ஊ! என்கின்றாய்!
உறைப்பாய் மிளகாய் இருக்கிறதா?
உறைப்புச் சுவேயே இதன் பேராம்!

வாழைக் காயதைத் தின்னாதே
வாழைக் காய் சுவை துவர்ப்பாகும்!
அறுசுவையான சுவைகளையும்
அளவுடன் உண்பதே நலமாகும்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #382 on: August 27, 2014, 01:35:50 PM »

பூனை – சிறுவர் பாடல்

மீசையுள்ள பூனை – சுவரின்
மீது குதிக்கும் பூனை!

ஓசையெழுப்பும் பூனை – வீட்டில்
ஓடியாடும் பூனை!

எலியைப்பிடிக்கும் பூனை – மின்னும்
எழிற்கண்ணுள்ள பூனை!

மெலிந்த நல்ல பூனை – குணத்தில்
மிருதுவான பூனை!

சண்டை போடும் பூனை – மீகச்
சாகசம் செய்யும் பூனை!

கண்டதைத் தின்னும் பூனை- சிறுவர்
கனிவாய் விரும்பும் பூனை!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #383 on: August 27, 2014, 01:37:53 PM »

வண்டிலாப் பூக்கள் உண்டோ? – சிறுவர் பாடல்

திரியிலாத் தீபம் உண்டோ?
திரையிலாக் காட்சி உண்டோ?
வரியிலாப் பாடல் உண்டோ?
வண்டிலாப் பூக்கள் உண்டோ?

கொடியிலாக் கம்பம் உண்டோ?
கோயிலிலா ஊர்தான் உண்டோ?
படியிலா மாடி உண்டோ?
பகலிலா இரவு உண்டோ?

நெசவிலா ஆடை உண்டோ?
நகமிலா விரல்கள் உண்டோ?
அசைவிலா வண்டி உண்டோ?
அரவிலாப் புற்று உண்டோ?

நகையிலா வதனம் உண்டோ?
நகையிலா மனிதன் உண்டோ?
சுகமிலா வாழ்வு உண்டோ?
சுவையிலா உணவு உண்டோ?
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #384 on: August 27, 2014, 01:38:49 PM »

அணில்

முதுகு வளைந்த அணில் – உடலில்
மூவரி கொண்ட அணில்!
பதுங்கியோடும் அணில் – கண்கள்
பளிச்செனக் காட்டும் அணில்

தழைகளைத் தின்னும் அணில் – வேலி
தாண்டிக் குதிக்கும் அணில்!
மழ மழ முடியுள அணில் – விரும்பி
மரங்களிலேறும் அணில்!

கரத்தில் அகப்படா அணில் – சத்தம்
கீர்ச்சென யெழுப்பும் அணில்!
நிறத்தில் அழகு அணில் – சிறுவன்
நேசங் கவர்ந்த அணில்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #385 on: August 27, 2014, 01:40:25 PM »

நிம்மதி -சிறுவர் பாடல்

நிலாவைக் காட்டி சோறு ஊட்டி
நீண்ட நாடகள் ஆகிறது!
உலவ அங்கே ஊர்தி செல்லும்
ஒரு நாள் வரத்தான் போகிறது!

நாட்டுப் பறமென்றில்லை
நகரம் எங்கும் விரிகிறது!
வீட்டு வேலை செய்ய யந்திர
விந்தை உருவமே இருக்கிறது!

வாழ்க்கை வசதிகள் பெருகிய போதும்
மனித நேயம் குறைகிறது?
ஏழ்மை மனமோ இத்தனை இருந்தும்
இல்லை என்றே அழுகிறது!

அத்தனை யும் நம் கையிலிருக்கும்
அந்தச் சக்தியே இயக்குவதால்
நித்தமும் அதனை தொழுவதிலேதான்
‘நிம்மதி’ என்பது தெரிகிறது!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #386 on: August 27, 2014, 01:41:20 PM »

கிளியக்கா!

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை!
விதையைக் கொரிக்கும் கிளிப்பிள்ளை
கூண்டிலிருக்கும் கிளிப்பிள்ளை!
குட்டைக் கழுத்துக் கிளிப்பிள்ளை!

அக்கா அக்கா எனக் கத்தும்!
அழகாய் சிறகை தானடிக்கும்!
பச்சை நிறத்தில் பளபளப்பாய்!
பார்க்க அழகு கிளிப்பிள்ளை!

பச்சை மிளகாய் கொடுத்தாலே
அலகில் கொத்தித் தின்னுமாம்!
மாம்பழத்தைக் கொடுத்து விட்டால்
வேண்டி விரும்மித் தின்னூமாம்!

கூண்டிலிருந்து கொண்டுதான்
வேண்டிய மட்டும் பேசுது!
பாவமென்று அதை நானும்
திறந்துவிட்டேன் தோட்டத்தில்!
மாமரத்தில் கூடு கட்டி
மனம் போல் வாழுது கிளியக்கா!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #387 on: August 27, 2014, 01:42:15 PM »

பருவங்கள்

கோடைக் காலம் வெய்யில் காலம்
குடை பிடிச்சி நடக்கணும்!

மாறி காலம் மழைத்தண்ணீரில்
மனம் போல ஆடக் கூடாது!

வசந்த காலம் பூக்கள் மலரும்
செடியைப் பிடுங்கக் கூடாது!

வாடைக் காலம் பனியும் பொழியும்
உள்ளன் சொக்கா போடணும்!

நாலு பருவங்கள் மாறி வரும்
நல்ல பூமி இதுதானே!

நல்ல மனதுடன் நாமும் வாழலாம்
இயற்கையோடு இணைந்தேதான்!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 ... 18 19 [20]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!