பயர்பாக்ஸ் மேக் அப்
My Community
May 27, 2018, 09:48:37 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: பயர்பாக்ஸ் மேக் அப்  (Read 1132 times)
இலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: I am a geek!!


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« on: September 22, 2014, 05:03:37 PM »

வெகு வேகமாக இணைய விரும்பிகள் மாறிக் கொண்டு பயன்படுத்தும் புரோகிராமாக பயர்பாக்ஸ் உள்ளது. பலர் அண்மையில் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3க்கு மாறிய பின்னர், அதன் ஆட் ஆன் தொகுப்பு மற்றும் இந்த பிரவுசரிலேயே தரப்படும் வசதிகளில் எதனை விடுத்து எதனை மேற்கொள்வது என்று குழப்பமடைகின்றனர். ஏனென்றால் ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் தொகுப்புகளும், பிரவுசர் உள்ளாகப் பல வகையான வசதிகளும் உள்ளன. இவற்றில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்களையும், இணைக்க வேண்டிய ஆட் ஆன் தொகுப்புகளையும், தயார் செய்து வைக்க வேண்டிய வசதிகளையும் இங்கு காணலாம்.
பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐப் பதிந்து இயக்கத் தொடங்கிவிட்டீர்கள். இதனைச் சற்று ட்யூன் செய்வது குறித்து இங்கு காணலாம். கீழே தரப்பட்டுள்ளவை உங்களுடைய சிந்தனைக்கே. இவற்றை மேற்கொள்ள வேண்டும் என எண்ணினால், அவை தேவைப்படும் என முடிவு செய்தால், இவற்றை மேற்கொள்ளலாம்.
பிரவுசரை இன்ஸ்டால் செய்தவுடன், முதலில் Edit – Preferences –– Privacy tab–– history எனச் செல்லவும். இதில் Saved history page என்று இருப்பதன் எதிரே இருப்பதனைச் சிறிய எண்ணாக மாற்றவும். ஒரு சிலர் இதனை 7 நாட்கள் எனவும், மற்றும் சிலர் இதனை 10 நாட்கள் எனவும் மாற்றி வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் பயர்பாக்ஸ் பயன்படுத்தும் டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தலாம்.
இதே முறையில் “Remember what I’ve downloaded” என்று இருப்பதனை Disable செய்து வைக்கவும். இதனாலும் டிஸ்க் ஸ்பேஸ் மிச்சப்படும்.
அடுத்து என்ன ப்ளக் இன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம். சிலருக்கு ப்ளக் இன் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். இதெல்லாம் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு எக்ஸ்ட்ரா வசதிகள் தருபவை. இவை சாதாரண புக்மார்க் ப்ளக் இன் முதல், வெப் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் சற்று கடினமான ப்ளக் இன் வரை உள்ளன. இவற்றில் ஒரு சில முக்கியமானவற்றைக் காணலாம்.

முதலாவதாக Foxmarks. இந்த ப்ளக் இன் புரோகிராம் உங்கள் புக்மார்க் அடையாளங்களைப் பல கம்ப்யூட்டருக்கிடையே, சேதமின்றி இணைக்க உதவுகிறது. மற்ற கம்ப்யூட்டர்களிலும் இந்த Foxmarks ஐப் பதிய வேண்டும். எந்த கம்ப்யூட்டரில், நீங்கள் விருப்பப்படும் இணைய தளத்திற்கான புக் மார்க் பதிந்தாலும், Foxmarks மூலம் செல்கையில், அவை மற்ற கம்ப்யூட்டர்களிலும் அப்டேட் செய்யப்படும். இப்போது இது துட்ச்ணூடுண் என அழைக்கப்படுகிறது. இந்த ஆட் ஆன் பெற http://www.foxmarks.com/ என்ற தளம் செல்லவும்
அடுத்த ப்ளக் Down Them All.  இதனை https://addons.mozilla.org/enUS/firefox/ addon/201 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். ஓர் இணையப் பக்கத்தில் குவியலாக சில ஆப்ஜெக்ட் மற்றும் டெக்ஸ்ட்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்திட முயற்சிக்கையில், இந்த ப்ளக் இன் உதவும். எடுத்துக் காட்டாக, உங்களுக்குப் பிடித்தமான இசைக் கலைஞர் ஒருவர் குறித்த இணைய தளம் ஒன்றுக்குச் செல்கிறீர்கள். அந்த தளத்தில் தரப்பட்டுள்ள அவரின் 25 படங்களை டவுண்லோட் செய்திட எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு படமாகச் சென்று, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம் ஒவ்வொன்றாக காப்பி செய்திடத் தேவையில்லை. இந்த ப்ளக் இன் பதிந்தவுடன், நீங்கள் ஏதேனும் ஒரு படத்தினை ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Down Them All என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் நீங்கள் பைல் எக்ஸ்டன்ஷன் பெயர் மூலம் அவற்றை பில்டர் செய்து டவுண்லோட் செய்திடலாம்.

அடுத்ததாக Download Status Bar என்ற ப்ளக் இன். பயர்பாக்ஸ் பிரவுசரில் ஒரு டவுண்லோட் மேனேஜர் ஒன்று தரப்பட்டுள்ளது. நீங்கள் டவுண்லோட் செய்திடுகையில் விண்டோ ஒன்றைத் திறக்கிறது. எவ்வளவு டவுண்லோட் ஆகிறது என்று தெளிவாகக் காட்டும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்கையில், ஒவ்வொரு பைலும் எத்தனை சதவிகிதம் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று காட்டாது. ஆனால் இதனை செய்கிறது. இது ஸ்டேட்டஸ் பாரில் அமர்ந்து கொண்டு, உங்களுடைய டவுண்லோட் எவ்வளவு ஆகி உள்ளது என்று கிராபிக் மூலம் காட்டும். இதனால் நமக்கு பாப் அப் டவுண்லோட் விண்டோ தேவைப்படாது. இதற்கும் மேலாக, நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில், உங்களுடைய டவுண்லோட் பைல்களைத் தானாக, பாப் அப் விண்டோவுக்கு மாற்றிவிடும். இதனால் புரோகிராம்களை டவுண்லோட் செய்வது ரத்தாகாது.
இதனைப் பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/26 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
அடுத்து இங்கு குறிப்பிட விரும்பும் ப்ளக் இன் பெயர் ஆர்பிட் டவுண்லோடர் (Orbit Downloader) இது முழுக்க உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டியதாகும். சொல்லப்போனால், இது பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம் அல்ல. ஆனால் அதனுடன் இணைந்து செயலாற்றும். இதனை யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து,  flv மூவிப் படங்களை டவுண்லோட் செய்திடப் பயன்படுத்தலாம். மேலும் பிளாஷ் அடிப்படையிலான கேம்ஸ் டவுண்லோட் செய்திடவும் பயன்படுத்தலாம்.
மேலே சொல்லப்பட்டி ருப்பவற்றை, நீங்கள் விருப்பப்பட்டால், பயர்பாக்ஸ் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் மேற்கொள்ளலாம். இத்துடன் சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளையும் தருகிறேன். இவை, பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் வேகமாகச் செயல்பட உதவும்.
Loggedஇலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: I am a geek!!


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« Reply #1 on: September 22, 2014, 05:04:03 PM »

Ctrl – T: புதிய டேப் ஒன்றைத் திறக்கும். பல தளங்களைத் திறந்து வைத்து, இணையத்தில் உலா வருகையில் இது உதவும். அதற்காக கணக்கற்ற எண்ணிக்கையில் டேப்களைத் திறக்க வேண்டும். உங்களால் அவற்றை நிர்வகிக்க முடியாது.
Ctrl – W: தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும். அல்லது எந்த டேப்பில் உள்ள தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்களோ, அதனை மூடும்.
Ctrl – Shift – T: இறுதியாக மூடிய டேப்பில் இருந்த, இணைய தளத்தினைத் திறக்கும். எனவே மறதியாகவோ அல்லது தவறாகவோ, ஒரு டேப்பில் கிளிக் செய்து, அதில் இருந்த இணைய தளத்தினை மூடிவிட்டால், இந்த ஷார்ட் கட் கீயினைப் பயன்படுத்தலாம்.
Ctrl – F: “Search on this page” என்ற படிவத்தினைத் திறக்கும். இதனைப் பயன்படுத்தி ஓர் இணைய தளப் பக்கத்தில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொல் கொடுத்து, அது இடம் பெறும் இடத்திற்கு நேரடியாகச் செல்லலம்.
Ctrl – Tab: திறக்கப்பட்டுள்ள டேப்களில் உள்ள தளங்களுக்கிடையே செல்ல.
Ctrl – Left Click on a link: இதனை ஒரு லிங்க் மேலாகக் கொடுத்தால்,பயர்பாக்ஸ், அந்த புதிய டேப்பில் உள்ள தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.
மேலே சொன்ன ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துவது.
மேலே சொன்னவை, பயர்பாக்ஸ் பிரவுசரைப் புதியதாகப் பயன்படுத்தப் போகிறவர்களுக்கு மட்டுமல்ல. வெகு நாட்களாக இந்த பிரவுசரைப் பயன்படுத்துபவர்களும், மேலே தந்துள்ளவற்றைப் பயன்படுத்தலாம்.
என்னிடம் பயர்பாக்ஸ் பதிப்பு 3 இல்லை. பழைய பிரவுசரே எனக்குப் போதும் என்று சொல்பவர்கள், சற்றுப் பொறுமையாக, இந்த புதிய பதிப்பினை, அதற்கான இணைய தளம் சென்று, டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கவும். பயர்பாக்ஸ் பதிப்பு 3, பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன், தொடர்ந்து அதனையே உங்கள் மாறா பிரவுசராக வைத்துக் கொள்வீர்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத்துபவர்கள், பயர்பாக்ஸ் எப்போதும் மற்ற விண்டோக்களால் மறைக்கப் படாமல் டெஸ்க்டாப்பில் தெரிய வேண்டும் என எண்ணுவார்கள். அப்போதுதான் அதனை விரைவாகப் பயன்படுத்த முடியும் என விரும்பு வார்கள். இதற்கான ஒரு ஆட் ஆன் தொகுப்பு பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தரப்பட்டுள்ளது. இதனுடைய பெயர் Always On Top. இந்த ஆட் ஆன் தொகுப்பைப் பதிந்தவுடன், பயர்பாக்ஸ் பிரவுசரின் நேவிகேஷன் டூல்பாரில் பட்டன் ஒன்று காணப்படும். இந்த பட்டனை அழுத்தினால், பயர்பாக்ஸ் பிரவுசர் விண்டோ எப்போதும் டெஸ்க்டாப் திரையின் மேலாக இருக்கும். இந்த பட்டனை அழுத்தினால், இந்நிலை மாறும். இந்த பட்டன் மூலம், பயர்பாக்ஸ் பிரவுசர் எப்போதும் மேலாக உள்ளதா என்று நாம் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டனை வேறு ஒரு இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். எந்த டூல்பாரிலும் காலியாக உள்ள இடத்தில் கிளிக் செய்து, பின் மெனுவில் என்பதைத் தேர்ந்தெடுத்து இடம் மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பினை https://addons.mozilla.org /enUS/firefox/addon/142877/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளவும்.
LoggedPages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!