முகத்துக்கு வனப்பு கூட்டும் தேங்காய்
My Community
December 11, 2017, 04:08:20 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: முகத்துக்கு வனப்பு கூட்டும் தேங்காய்  (Read 2388 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« on: October 19, 2014, 09:31:19 AM »

தலை முதல் பாதம் வரை மென்மையும் பளபளப்பும் தந்து, தன்னம்பிக்கையோடு நடைபோட வைக்கிறது தேங்காய். தேங்காயில் சில அழகு குறிப்புகள்... எப்போதும் முகம் டல்லடிக்கிறதா?

வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல்புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள். தினமும் இப்படி செய்து வந்தால், மாசு மருவின்றி, பளிங்குபோல் முகம் மிளிரும்.

கோடை வெயில் கொளுத்துகிறதே! முகத்தை என்னதான் பொத்திப் பாதுகாத்தாலும், வெளியே சுற்ற வேண்டியவர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துத்தான் போகும். வெயிலால் வரும் கருமையை விரட்டி அடிக்க ஒரு அசத்தல் பேஸ்ட்...

தேங்காய் பால்-2 டீஸ்பூன்,
கடலை மாவு-1 டீஸ்பூன்...

இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த `பேக்' போட்டு வர, முகம் பிரகாசமாகும்.

இந்த `பேக்'கில் கடலை மாவுக்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து, புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு `பளிச்' சிகிச்சை.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!