சினிமா செய்திகள் 24.10.2014
My Community
December 11, 2017, 04:10:08 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: சினிமா செய்திகள் 24.10.2014  (Read 3756 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« on: October 24, 2014, 08:04:21 AM »

கத்தி படத்தில் 2ஜி விமர்சனம்: வசன சர்ச்சையில் நடிகர் விஜய்


கத்தி படத்தில் நடிகர் விஜய், 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து, பரபரப்பாக வசனம் பேச,

அதற்கு எதிராக தி.மு.க., தரப்பில் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அரசியல் கடந்தும், இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

கடும் எதிர்ப்பு : தீபாவளிக்கு, நடிகர் விஜய் நடித்து, கத்தி படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அந்த நிறுவனம் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், சுபாஷ் கரண் என்பவருக்கு சொந்தமானது. அவர், இலங்கை அதிபர் ராஜபக் ஷேவின் மகனுக்கு, நெருக்கமான நண்பர் என்பதால், அந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட, இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும், படம் ரிலீஸ் ஆகி விட்டது. படத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான எந்த காட்சி அமைப்புகளும் படத்தில் இல்லை. ஆனால், 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நடிகர் விஜய், க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பாக வசனம் பேசுவது போல, காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை, மக்கள் புறக்கணிப்பர் என, பரபரப்பான வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தி.மு.க., தரப்பை, ரொம்பவும் உஷ்ணப்படுத்தியிருக்கிறது. இந்தத் தகவலை, கட்சியின் முக்கியத் தலைவருக்கு, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கொண்டு சென்றனர். அப்போது, படத்தில் இடம் பெறும், மொத்த காட்சி அமைப்புகள் குறித்து கேட்டறிந்த அந்த தலைவர், இப்போதைக்கு, இந்த விவகாரம் குறித்து எதுவுமே பேச வேண்டாம். நடிகர் விஜய் குறித்து, மொத்த விவரங்களை திரட்டுங்கள். விரைவிலேயே, அவர் எதிலாவது சிக்குவார். அப்போது, பார்த்துக் கொள்ளலாம் என, சொல்லியிருக்கிறார்.

சலசலப்பு : இதற்கிடையில், இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்றதும், படத்தை ரிலீஸ் செய்ய, யாரும் தடை ஏற்படுத்தக் கூடாது என்று, தன் இணைய பக்கத்தில் கருத்து சொல்லி, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு, வேண்டுகோள் விடுத்திருந்தார், தென்சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன். அதுகுறித்தும், தி.மு.க.,வில் சலசலப்பு கிளம்பி இருக்கிறது. கத்தி படத்தில் வரும், இந்த 2ஜி வசன சர்ச்சை குறித்து, காட்சிப் பிழை சினிமா இதழ் ஆசிரியர், சுபகுணராஜன் கூறியதாவது: வர்த்தக ரீதியான சினிமாவில், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை சொல்வது, ஒரு நடைமுறை. இப்படி சொல்லப்படும் கருத்து, பாரபட்சமின்றி இருக்க வேண்டும். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இது போன்ற படங்களை எடுத்து வருபவர். மேலும், பிரபலமான கதாநாயகன் மூலம், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை சொன்னால், மக்களிடம் எடுபடும் என்பதால், இந்த முறையை கையாண்டு வருகிறார். ஆனால், முருகதாசின் இந்த அணுகுமுறை, ஒரு சார்பாக உள்ளது. அவரது கருத்தை சொல்லும் கதாநாயகனும், அவரது அரசியல் லாபத்துக்காக, அதை பயன்படுத்திக் கொள்கிறார். கத்தி படத்தில் வரும், 2ஜி தொடர்பான வசனங்களும் இந்த வகைதான்.

அடாவடித்தனமான அரசியல் : ஜனநாயக முறையில், கருத்தை வெளியிட சுதந்திரம் இருந்தாலும், அதை சரியாக பயன்படுத்துவதில்லை. சினிமாவில் வரும் இப்படிப்பட்ட கருத்துக்கு, அதிகாரமட்டத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பினால், அடி பணிந்தும் விடுகின்றனர். இந்த அடாவடித்தனமான அரசியலுக்கு, கத்தி பட வசனம், ஒரு சான்று.

எழுத்தாளர் பாமரன் கூறியதாவது: சினிமாவில் மட்டும் மக்கள் பிரச்னையை பேசிவிட்டு, நிஜவாழ்க்கையில் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது தான், இன்றைய தமிழ் சினிமாவாக இருக்கிறது. எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்கள், சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அரசுக்கு எதிராக, மக்கள் பிரச்னைகளுக்கு போராட்டங்கள் நடத்தியவர்கள். ரசிகனின் பணப்பையை குறிவைத்து, சினிமா எடுக்காமல், உண்மையான சமூக அக்கறையோடு, இவர்கள் இருந்தனர். ஆனால், இன்றைய கதாநாயகர்களும், இயக்குனர்களும் கோகோ கோலா விளம்பரங்களில் நடித்து, பணம் சம்பாதித்து விட்டு, சினிமாவில், கோகோ கோலாவிற்கு எதிராக, பஞ்ச் டயலாக் பேசுகின்றனர்.

தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒருதலைபட்சமாக... 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து, வசனம் பேசும் நடிகர் விஜய், சொத்து குவிப்பு வழக்கு குறித்தும், தைரியமாக வசனம் பேசியிருந்தால், அவரது நேர்மையை, சமூகத்தின் மீதான அக்கறையாக வரவேற்கலாம். ஒருதலைபட்சமாக, ஏன் வசனம் பேச வேண்டும். அதுமட்டுமல்ல, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளி, தண்ணீருக்கு பிரச்னை ஏற்படுத்தியது குறித்தும், படத்தில் வசனங்களும் காட்சி அமைப்புகளும் இருப்பதாக அறிகிறோம். இதே தாமிரபரணி ஆற்றில் இருந்து தான், தண்ணீரை கோகோ கோலா நிறுவனம் எடுத்தது. அந்த நிறுவனத்துக்கு தான், பிராண்ட் அம்பாசிடராக இருந்து, விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார், விஜய்.

 

நியாயமில்லாத செயல் : இப்போது, அவரே அந்நிறுவனத்துக்கு எதிராக படங்களில் வசனம் பேசுகிறார். இதுதான், நடிகர் விஜயின் சமூக அக்கறை. இப்படிப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அவர் விருப்பப்படி படமெடுப்பது குறித்தோ, வசனங்களை அமைப்பது குறித்தோ, நாங்கள் கேள்வி கேட்க வரவில்லை. ஆனால், அவர் தனக்கு எத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அதில் கருப்பு எவ்வளவு; வெள்ளை எவ்வளவு என, வெளிப்படையாக சொல்வாரா? அவர்கள் மட்டும் அரசாங்கத்துக்கும், சமூகத்துக்கும் எதிராக, சொந்த வாழ்க்கையில் எல்லா காரியங்களையும் செய்வதும், படங்களில் மட்டும் அரசியல்வாதிகளை மட்டும், சமூகத்துக்கு எதிரானவர்களாக சித்தரிப்பதுமாக இருப்பது தான், நியாயமில்லாத செயல். இவ்வாறு, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #1 on: October 24, 2014, 08:05:08 AM »

சூர்யாவின் டெரர் கெட்டப்!


படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற தேடல் உடையவர் தான்

சூர்யா. இருப்பினும் சிங்கம், சிங்கம்-2 , அஞ்சான் மாதிரியான ஆக்சன் மசாலாப் படங்களில் சமீபகாலமாக அவர் சிக்கிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அஞ்சான் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

 

இந்த படம் இதுவரை சூர்யா நடிக்காத வகையில் ஹரர் கதையில் உருவாகிறது. அதேபோல் சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவுக்கும் அந்த ஹரர் படம் புதிய அனுபவம்தான். இவரையும் பிரியாணி கவிழ்த்து விட்டதால் இந்த முறை ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அதனால் முன்பு மாதிரி ஓவர் பில்டப் எதுவும் கொடுக்காமல் சத்தமில்லாமல் இந்த படத்தை இயக்கிக்கொண்டு வருகிறார்.

முக்கியமாக ஐ படத்தில் விக்ரமின் கெட்டப்பைப் பார்த்து அசந்து போன நடிகர்களில் ஒருவரான சூர்யா, இனிமேல் படத்துக்குப்படம் ஏதாவது புதுமையான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். அதனால் அவரது முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் இந்த படத்தில் ஒரு டெரர் போன்ற கெட்டப்பில் அவரை நடிக்க வைத்து வருகிறார் வெங்கட்பிரபு. இந்த கெட்டப்பை தீபாவளி தினத்தன்று வெளியிட்டுள்ளனர்

 

அந்த கெட்டப், சேது, பிதாமகன் படங்களில் பார்த்த விக்ரமை போன்று ஒரு டெரர் கெட்டப்பில் காட்சி கொடுக்கிறார் சூர்யா.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #2 on: October 24, 2014, 08:06:01 AM »

கத்திக்கு பிறகு அடுத்த படத்தை டிசம்பரில் தொடங்கும் முருகதாஸ்


 
முருகதாஸ்-விஜய் கூட்டணியில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் உருவான கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகுமோ ஆகாதோ என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், தீபாவளிக்கு படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

உலகமெங்கும் அதிக திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் இருக்கிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடந்து முருகதாஸ் அடுத்த பட வேலைகளை தொடங்கவுள்ளார்.

புதிதாக தொடங்கவுள்ள படத்தை இந்தியில் எடுக்கவுள்ளார். இதில் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவுள்ளார். இப்படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை விரைவில் வெளியிட உள்ளனர். படவேலைகளை டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் ஏற்கனவே இந்தியில் கஜினி, துப்பாக்கி படத்தின் ரீமேக்கான ஹாலிடே படங்களை எடுத்துள்ளார். இப்படம் அதிக வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #3 on: October 24, 2014, 08:06:21 AM »

இனி தமிழிலும் கலக்குவேன்நித்யா மேனன் நம்பிக்கை


'கடல்' படத்தையடுத்து, மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு, 'ஒகே கண்மணி' என்று

பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் நித்யா மேனனை சுற்றித்தான் கதை நகர்கிறது.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'மணிரத்னம் என் மனம் கவர்ந்த இயக்குனர். அவர் படத்தில் நடிக்க வேண்டுமென்ற நீண்ட கால கனவு, இப்போது தான் நனவாகியுள்ளது. துல்கர் சல்மானுடன், இரண்டு மலையாள படங்களில் நடித்துள்ளேன். அவருக்கும், எனக்குமிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகியிருந்தது. அதனால், காதலை மையமாக கொண்ட இந்த படத்திலும், தமிழகமே

 

கொண்டாடும் வகையில், எங்களது கெமிஸ்ட்ரி வெளிப்படும். இந்த படம் வெளியானதும், தமிழில் எனக்கென நிலையான இடம் கிடைக்கும்' என,

 

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #4 on: October 24, 2014, 08:07:05 AM »

யட்சன் படத்தில் அஜீத் ரசிகராக நடிக்கும் ஆர்யா


 
‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய ஆர்யா-விஷ்ணுவர்தன் தற்போது ‘யட்சன்’ படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தில் விஷ்ணுவர்தனின் தம்பியும், நடிகருமான கிருஷ்ணாவும் நடிக்கிறார். இப்படத்தை யுடிவி நிறுவனத்துடன், விஷ்ணுவர்தன் தனது சொந்த நிறுவனமான விஷ்ணுவர்தன் பிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஆர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுதவிர்த்து, அஜீத் ரசிகராகவும் ஆர்யா நடிக்கிறாராம். மேலும், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறாராம். ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.

காதல், மோதல் நிறைந்த ஜாலியான படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் தேவையான அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #5 on: October 24, 2014, 08:08:20 AM »

ரிலீசுக்கு காத்திருக்கும் கமல் படங்கள்



 
கமல் ஹாசன் தற்போது ‘பாபநாசம்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காகும். இதில் கமலுக்கு ஜோடியாக நீண்ட காலத்திற்குப் பிறகு கவுதமி இணைந்து நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 26-ம் தேதி முடிவடைகிறது.

ஏற்கனவே கமல் நடிப்பில் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’ படங்கள் உருவாகி வருகிறது. இந்த மூன்று படங்களில் முதலில் ‘உத்தம வில்லன்’ படம் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’, பாபநாசம் படங்கள் வெளியாகவுள்ளன. இப்படங்கள் அனைத்தும் இந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ‘உத்தமவில்லன்’ படம் மட்டும் இந்த வருடம் வெளியாகவுள்ளது.

வருகிற நவம்பர் 7-ம் தேதி கமல் ஹாசனின் 60-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப கமலின் படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #6 on: October 24, 2014, 08:08:50 AM »

ரசிகர்களை நடுங்க வைக்கராய் லட்சுமி திட்டம்


'காஞ்சனா' மற்றும் 'அரண்மனை' போன்ற திகில் படங்களில், ராய் லட்சுமி நடித்திருந்தார்.

ஆனால் பேயாக நடிக்கவில்லை. பேய்க்கு பயப்படும் வேடத்தில் தான்

 

நடித்திருந்தார்.தற்போது ஒரு படத்தில், பேய் வேடத்திலேயே நடிக்க கமிட்டாகி உள்ளார் ராய் லட்சுமி. இதுபற்றி அவர் கூறும் போது, 'திகில்

 

படங்களை பொறுத்தவரை, பேய் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு தான் முதலிடம் தருவர். அவர்களை சுற்றியே கதை செல்லும். அதனால், அப்படியொரு வேடத்தில் நாமும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் இருந்த போது தான், ஒரு இயக்குனர் மிரட்டலான ஒரு பேய் கதையை சொல்லி என்னை ஒப்பந்தம் செய்துள்ளார். அதனால், முதன்முறையாக பேயாக தோன்றி, மற்றவர்களை கதிகலங்க வைக்கப் போகிறேன்' என்கிறார்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #7 on: October 24, 2014, 08:09:25 AM »

ஜோதிகாவுக்கு ஜோடியாகும் ரகுமான்?


 
சூர்யாவும், ஜோதிகாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006-ம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பின், ஜோதிகா நடிக்கவில்லை. சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு 7 வயதில் தியா என்ற மகளும், 4 வயதில் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கேரளாவில் வெற்றி பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பில் ஜோதிகா  நடிக்க ஒப்பந்தமானார். பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு கொண்ட இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூசே இயக்குகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்ற சொந்தபட நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

இப்படத்தில் ஜோதிகாவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் என்பதால், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் தயங்கினார்கள். கடைசியாக, இப்படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்க ரகுமான் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #8 on: October 24, 2014, 08:09:47 AM »

அழுது வடிக்கும் வேடங்களை வெறுத்து ஒதுக்கும் ஸ்ரீதிவ்யா


'வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பென்சில்' படங்களில் பள்ளி மாணவியாக சீருடை

அணிந்து நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, விஷ்ணுவுடன் நடித்த, 'ஜீவா' படத்தில், கல்லுாரி மாணவியாக நடித்தார். ஆனால் இதையடுத்து, அவரை குடும்ப பொறுப்பை சுமக்கும் முக்கியமான வேடங்களில் நடிக்க, சிலர் தொடர்பு கொண்ட போது, தடாலடியாக மறுத்து விட்டார். காரணம் கேட்டால், 'இப்போது, நான் டீன்ஏஜ் பெண். என் வயதுக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும். இப்போதைய ரசிகர்கள், என் போன்ற இளம் நடிகைகளை கலர்புல்லாக பார்க்கத்தான் ஆசைப்படுகின்றனர். அழுது வடியும் வேடங்களை வெறுக்கின்றனர். அதனால் தான், என் வயதுக்கேற்ற இளமையான கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறேன்' என்கிறார்
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #9 on: October 24, 2014, 08:10:16 AM »

தல 55 படத்தில் அஜீத்-அருண்விஜய் இணைந்து நடனம்


 
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், அருண் விஜய், தன்ஷிகா, விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். டான் மெகர்தூர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் அஜீத்தும், அருண் விஜய்யும் சேர்ந்து ஆடிப்பாடும் குத்துப் பாடல் ஒன்றை விரைவில் படமாக்கவிருக்கிறார்களாம். இந்த பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அழகாக மெட்டமைத்துள்ளாராம்.

தற்போது தீபாவளிக்காக படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி கொடுத்திருக்கும் படக்குழு, இந்த வார இறுதி நாட்களில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், இப்படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யும் பணியையும் படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். கூடிய விரைவில் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #10 on: October 24, 2014, 08:11:12 AM »

ரஜினி, அஜீத்துடன் மோத தயாரான விஷால்


 
விஷால் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘பூஜை’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால், சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்திலும் நடித்து வந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் பொங்கல் வெளியீடாக இப்படம் வெளிவரப் போவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, பொங்கலுக்கு, அஜீத்-கௌதம் மேனன் இணையும் படமும், ரஜினியின் லிங்கா படமும் வெளிவர தயாராக இருக்கும் நிலையில், தற்போது அவர்களுடன் விஷாலும் கைகோர்த்துள்ளார்.

ஆம்பள படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #11 on: October 24, 2014, 08:11:35 AM »

சார்மியின் அடுத்த பாய்ச்சல் மீண்டும் கோதாவில் குதிக்கிறார்


'காதல் அழிவதில்லை' படத்தில், சிம்புவுடன் நடித்த நடிகை சார்மிக்கு, அதன் பின் ஆந்திர

சினிமாவில் வரவேற்பு கிடைத்ததால், முழுநேர தெலுங்கு நடிகையாகிவிட்டார்.கூடவே, போட்டி நடிகைகளின் குலை நடுங்கும் வகையில், கவர்ச்சி கோதாவிலும் இறங்கிய சார்மியின் மார்க்கெட், 10 ஆண்டுகளுக்கு பின், இப்போது இறங்கியுள்ளது.அதனால், விக்ரம் - சமந்தா நடிக்கும் புதிய படத்தில் மூலம், மீண்டும் கோலிவுட்டிற்கு வந்துள்ளார். இந்த படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாட முடிவு செய்துள்ளார்.'இந்த ஒரு பாடல் மூலம், தமிழ் சினிமாவில் மீண்டும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும்' என்றும் திட்டமிட்டுள்ளாராம், சார்மி
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!