வறுவல் வகைகள்
My Community
May 27, 2018, 09:47:31 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1] 2 3 4   Go Down
  Print  
Author Topic: வறுவல் வகைகள்  (Read 9629 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: October 24, 2014, 01:47:52 PM »

வறுவல் வகைகள்
சேனைக்கிழங்கு வறுவல்பலருக்கு சேனைக்கிழங்கை குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதே சேனைக்கிழங்கை வறுவல் போன்று செய்தால் அதன் சுவையே தனி என்பது தெரியுமா? உங்களுக்கு சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியாக செய்யக்கூடியவாறான சேனைக்கிழங்கு வறுவலின் செய்முறையைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மதிய வேளையில் சமைத்து சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் அட்டகாசமாக இருக்கும். சரி, இப்போது சேனைக்கிழங்கு வறுவலின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: October 24, 2014, 01:49:11 PM »

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 2 மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் பூண்டு - 4

செய்முறை:

முதலில் நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்துள்ளதை சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!


tamilboldsky
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: October 24, 2014, 01:51:25 PM »

உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. உருளைக்கிழங்கை சிறு சிறு (சதுர) துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.

3. பின்னர் அதனுடன் சோளமாவு, மிளகாய்தூள், உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

குறிப்பு

1. பிசறும் போது சிறிது சோம்பு சேர்த்துக் கொண்டால் வாசனையாக இருக்கும்.

ச. சுதாதேவி சென்னை - 600 050.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: October 24, 2014, 01:53:25 PM »

சேப்பங்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
சோளமாவு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. சேப்பங்கிழங்கை குழைந்துவிடாமல் வேகவைத்து, ஆறிய பிறகு தோல் நீக்கி ஒரே அளவாக நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய கிழங்கில் சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்தூள், கேசரி பவுடர், உப்பு சேர்த்து பிசறவும்.

3. பின்னர் எண்ணெயைக் காயவைத்து, பிசறி வைத்த சேப்பங்கிழங்கை எண்ணெயில் போட்டு பொன் நிறமாக வறுத்தெடுக்கவும்.


ச. சுதாதேவிசென்னை - 600 050.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: October 24, 2014, 01:54:36 PM »

சேனைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


மசாலா அரைக்க

சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 6
மிளகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
தேங்காய் - ஒரு துண்டு


செய்முறை

1. சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக விடவும்.

3. மசாலா பொருட்களை தனியே அரைத்துக் கொள்ளவும்.

4. வேகவைத்த கிழங்குடன் அரைத்த மசாலா, சோள மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசறுங்கள்.

5. எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்

ச. சுதாதேவிசென்னை - 600 050.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #5 on: October 24, 2014, 01:55:45 PM »

வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 10
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.

3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.


ச. சுதாதேவிசென்னை - 600 050.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: October 24, 2014, 01:58:59 PM »

உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 (நடுத்தர அளவு)
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு (கொரகொரப்பாக பொடித்தது) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலைச் சேர்த்து, சீரகம் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும். அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும் கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #7 on: October 24, 2014, 02:00:27 PM »

தாமரைதண்டு வறுவல்

தேவையான பொருட்கள்

தாமரைதண்டு - 1 கணு
மிளகாய்த்தூள் - 2 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

முதலில் தாமரைத்தண்டை தோலுரித்து சிறு சிறு வட்டங்களாக மெல்லியதாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கார்ன் ஃப்ளார் மாவு, தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும்.
அதில் கடைசியில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைத்துவைக்கவும்.
வெட்டி வைத்துள்ள தாமரைத்தண்டை கலவையில் போட்டு பிரட்டி சிறிது நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஊறவைத்துள்ள தாமரைத் தண்டை போட்டு பொரித்து எடுக்கவும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #8 on: October 24, 2014, 02:01:21 PM »

உருளை வறுவல்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைவட்ட துண்டுகளாக மிகவும் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக வெட்டி கொள்ளவும்,
உருளை, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் நைசாக அரைக்கவும்.
அரைத்த கலவையில் உருளையை பிரட்டி 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்
ஒரு தவாவில் சிறிது எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கை பரவினால் போல் போட்டு வேகவிடவும்.
அடிக்கடி திருப்பி போட்டு மொறுகவிட்டு இறக்கவும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #9 on: October 24, 2014, 02:02:30 PM »

வெண்டைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 200 கிராம் (குருனிவட்டமாக நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி


செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் தாளித்து
பின்பு குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும்.
பின்பு மிளகாய்தூள் போட்டு வதக்கிய பின் முட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்
தேசிக்காய் சாறு (லெமன் ஜுஸ்) சேர்க்கவும். 2 நிமிடங்களின் பின்பு சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10 on: October 24, 2014, 02:07:32 PM »

வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய்                         _        இரண்டு
மிளகாய்த்தூள்                      _        ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                        _           கால் தேக்கரண்டி
சோம்புத்தூள்                         _          அரைத்தேக்கரண்டி
உப்பு                                          _           தேவையான அளவு
எண்ணெய்                               _          நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை                       _         ஒரு கொத்து


*** செய்முறை ***

வாழைக்காயை தோல் நீக்கி விட்டு கழுவி கொஞ்சம் தடிமனாக வட்ட வடிவில் அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு அகல வானலியில் அதை வேக வைக்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து உப்பு சிறிதும் சேர்த்து வேக விடவும்.
முக்கால் பாகம் வெந்ததும்,வடித்து விட்டு ஒரு தட்டில் தூள் வகைகள்,உப்பும் (வேக வைக்கும் போதும் உப்பு சேர்த்திருப்பதால் பார்த்து சிறிதளவு சேர்க்கவும்)சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி இந்த வாழைக்காயை அதில் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் வைக்கவும்.
பிறகு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இந்த பிரட்டிய வாழைக்காயை பரவலாக வைத்து இரண்டு பக்கமும் நன்கு வறுபடும்படி செய்து எடுத்து விடவும்.
தயிர்,ரசம்,சாம்பார் சாதத்திற்க்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.இதை வறுக்கும் போது கறுப்பு உளுந்து குருணையை தூவி வாழைக்காயின் எல்லா இடமும் படும்படி பிரட்டி வறுத்து எடுத்தால் மிகவும் வித்தியாசமான டேஸ்ட்டாக இருக்கும்.ஊரில் கருப்பு உளுந்து குருணை என்றே வைத்திருப்பார்கள்.இங்கு நான் வைத்திருக்கவில்லை.எனவே இந்த செய்முறையில் அது இல்லை.
இது நமது ஊர்களில் கிடைக்கும் மொந்தன் வாழைக்காயில் செய்தால் தான் மிகவும் நன்றாக இருக்கும்.வெளிநாடுகளில் கிடைக்கும் நேந்திர காய் போன்றவைகளில் செய்தால் நன்றாக வராது.சவுக் சவுக்கென்று இருக்கும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #11 on: October 24, 2014, 09:23:09 PM »

பாகற்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 150கிராம்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கடுகு - 1 டீஸ்பூன்


செய்முறை :

பாகற்காயை வட்ட வட்டமாக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு தாளித்து பாகற்காய், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து மொறு மொறு என்று ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #12 on: October 24, 2014, 09:25:47 PM »

உறுளைக்கிழங்கு வறுவல்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - கால் கிலோ, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை, சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்துவிடுங்கள். அதில் கார்ன்ஃப்ளார், மிளகாய்தூள், உப்பு, அரிசிமாவு ஆகியவற்றைப் போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசறிக்கொள்ளுங்கள். வாசனை பிடிக்கும் என்றால், சிறிது சோம்புத்தூள் சேர்த்துப் பிசறலாம். பிறகு, எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த கிழங்கைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். பொரித்து வைத்த நிமிடத்தில் ‘பொசுக்’கெனக் காலியாகிவிடும் பாருங்கள். -
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #13 on: October 24, 2014, 09:26:58 PM »

பனீர் வறுவல்

தேவையானவை:

பனீர் - 200 கிராம், குழம்பு மசாலா தூள் (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், அரிசிமாவு - அரை டீஸ்பூன், உப்பு (குழம்பு மசாலா தூளில் உப்பு இருக்கும் என்பதால்) - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பனீரை விரல் நீளத்துக்கு நறுக்கி தனியே வையுங்கள். மசாலாதூள், இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், அரிசிமாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். பனீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டி, எண்ணெயைக் காயவைத்து, நான்கு நான்காகப் போட்டு நன்கு சிவக்கப் பொரித்தெடுங்கள். கவனிக்கவும்: எண்ணெய் நன்கு காயவேண்டும். இல்லையென்றால் மசாலா தனியாக, பனீர் தனியாகப் பிரிந்துவந்துவிடும். (குறிப்பு: அசைவச் சுவை பிடித்தவர்கள், குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா தூளைப் போடலாம்).
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #14 on: October 24, 2014, 09:27:52 PM »

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

தேவையானவை:

உருளைக்-கிழங்கு - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, வரமிளகாய் - 10, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

உருளைக்-கிழங்கை குண்டு, குண்டாக நறுக்கிக்-கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு வெடித்ததும் வரமிளகாய் போட்டு கருகாமல் வறுக்கவும். பிறகு, வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டு நன்றாகக் கிளறி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்புப் போட்டு நன்றாகக் கொதிக்கும்போது மூடி, தீயைக் குறைத்துவிடுங்கள். கிழங்கு நன்றாக வெந்தபிறகு, தீயை அதிகரித்து, தண்ணீர் வற்றியதும், சுருளக் கிளறி தீயைக் குறையுங்கள். மேலும் சிவக்க சிவக்க கிளறி இறக்குங்கள். வரமிளகாயுடன் சேர்ந்து வெந்தால்தான் கிழங்கில் உப்பு, காரம் நன்றாக ஊறி இறங்கும். தயிர்சாதத்துக்கு வெகு பொருத்தம் இந்த வறுவல்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #15 on: October 24, 2014, 09:28:54 PM »

சேனைக்கிழங்கு வறுவல்

தேவையானவை:

சேனைக்கிழங்கு - கால் கிலோ, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கார்ன்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 6 பல், சின்ன வெங்காயம் - 5, மிளகு - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 2, தேங்காய் - ஒரு துண்டு.

செய்முறை:

சேனைக்கிழங்கை ஒரு இன்ச் அளவு கனமுள்ள துண்டுகளாக நறுக்குங்கள். மஞ்சள்தூள், உப்புப் போட்டு முக்கால் வேக்காடாக வேகவையுங்கள். அரைக்கக் கொடுத்தவற்றை நன்கு அரைத்தெடுங்கள். அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை கிழங்குடன் சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கிழங்குகளைப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #16 on: October 24, 2014, 09:29:49 PM »

வாழைக்காய் வறுவல்

தேவையானவை:

வாழைக்காய் - 2, வரமிளகாய் - 10, பூண்டு - 6 பல், உப்பு - அரை டீஸ்பூன், கான்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

 வாழைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வரமிளகாய், உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாழைக்காயில் அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார் போட்டுப் பிசறி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #17 on: October 24, 2014, 09:30:40 PM »

பூண்டு-உருளைக்கிழங்கு வறுவல்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - கால் கிலோ, பூண்டு - 100 கிராம், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

தோல் சீவிய உருளைக்கிழங்கையும் பூண்டையும் பொடிப்பொடியாக நறுக்குங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, கிழங்கு, பூண்டு போட்டு வதக்கி, மிளகாய்தூள், உப்புப் போட்டுக் கிளறுங்கள். தீயை ‘ஸிம்’மில் வைத்து, மூடி விடுங்கள். சில நிமிடங்கள் கழித்துத் திறந்து கிளறி, மூடுங்கள். இப்படியே மூடிவைத்து, மூடிவைத்துக் கிளறும்போது கிழங்கு மொறுமொறுவென வெந்துவிடும். இதை சுடுசாதத்தில் அப்படியே போட்டு சாப்பிட்டால், சுவை தேவாமிர்தம்! உருளைக்கிழங்கு வாய்வுத் தொல்லைக்கு ஆகாது என நினைப்பவர்கள், இந்த முறையில் வறுவல் செய்து சாப்பிடலாம். பூண்டு இருப்பதால் வாய்வுக்கு நல்லது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #18 on: October 24, 2014, 09:31:25 PM »

காராமணி வறுவல்

தேவையானவை:

சதைப்பிடிப்பான காராமணிக்காய் - கால் கிலோ, தனிமிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை:

காராமணிக்காயை ஒரு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, மிளகாய்தூள், உப்பு போட்டுப் பிசறி 2 மணி நேரத்துக்கு ஊறவிடுங்கள். பிறகு, எண்ணெயைக் காயவைத்து, காராமணியைப் போட்டு நன்கு வதக்கி, ‘ஸிம்’மில் வைத்து, மூடிவிடுங்கள். சில நிமிடம் வெந்தபின்னர் மீண்டும் திறந்து கிளறி, மூடுங்கள். அவரைக்காய் வறுவல் (அடுத்தப் பக்கம்) போலவே வேகவிட்டு, எடுத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #19 on: October 24, 2014, 09:32:24 PM »

அவரைக்காய்-வரமிளகாய் வறுவல்

தேவையானவை:

பிஞ்சு அவரைக்காய் - கால் கிலோ, வரமிளகாய் - 7, சின்ன வெங்காயம் - 7, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அவரைக்-காயை மிகவும் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் மீடியமாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். வரமிளகாயைக் கிள்ளிவையுங்கள். கடாயில் எல்லா எண்ணெயையும் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் போட்டு கருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். அதோடு வெங்காயம் போட்டு வதக்கி, அவரைக்காயையும் போட்டு வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி, ‘ஸிம்’மில் வைத்து, கடாயை மூடுங்கள். அந்த எண்ணெயிலேயே அவரைக்காய் வேகவேண்டும். அவ்வப்போது திறந்து, கிளறிவிட்டு, திரும்ப மூடிவைத்து வேகவிடுங்கள். வேர்த்து வேர்த்து காய் வெந்துவிடும். அப்படியே, அந்த எண்ணெயோடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1] 2 3 4   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!