வறுவல் வகைகள்
My Community
May 27, 2018, 09:35:07 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 2 3 [4]   Go Down
  Print  
Author Topic: வறுவல் வகைகள்  (Read 9628 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #60 on: October 24, 2014, 11:44:02 PM »

கேரட் வறுவல்

கேரட் - 4,
பூண்டு - 4 பல்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


கேரட்டை மெல்லிய வட்டமாக நறுக்கவும்.
சோம்பு, பூண்டை நசுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நசுக்கிய சோம்பு, பூண்டு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
கேரட், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
ஒரு கை தண்ணீர் தெளித்து, மூடி, கேரட் வெந்தபின், தேங்காய் துருவலை தூவி, சிறிது எண்ணெய் விட்டு, முறுகலாக வந்த பின் இறக்கவும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #61 on: October 24, 2014, 11:44:58 PM »

பாகற்காய் வறுவல்

வட்டமாக நறுகிய பாகற்காய் - 1/4கிலோ
தயிர் - 1/4 கப்
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
புளிகரைச்சல் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சோளமாவு - 2ஸ்பூன்


பாகற்காயை தயிர், உப்பு, புளிகரைசலில் 5நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு மிதி பொருட்களை பாகற்காயுடன் கலந்துவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து பொரித்து எடுக்கவும்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #62 on: October 24, 2014, 11:45:43 PM »

ஃப்ரெஞ்ச் உருளை வறுவல்

சின்ன உருளைக்கிழங்கு - ஒரு கிலோ
ஆலிவ் ஆயில் - 2 கரண்டி
கடுகு - 2 கரண்டி
ஹெர்பல் இலைகள் - ஒரு கரண்டி
சிறிய பூண்டு - ஒன்று (நசுக்கவும்)
கல் உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
தூள் உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்


உருளைக்கிழங்கை தோல் சீவி கட்டம்கட்டமாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கல் உப்பை போட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும்.
வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு வாயகன்ற கோப்பையில் போட்டு அதில் ஆயில், பூண்டு, கடுகு, ஹெர்பல் இலை போட்டு கிளறி பத்து நிமிடம் வைக்கவும்.
பின் அவனில் வைக்கும் தட்டில் அலுமினிய பேப்பர் போட்டு அதில் பரப்பி வைத்து அவனில் வைத்து இருபது நிமிடம் வேகவிடவும் இடையிடையில் திருப்பிவிடவும்.
வெந்ததும் (சிவந்ததும்) எடுத்து ஒரு கோப்பையில் போட்டு மிளகுத்தூள் தூள் உப்பை போட்டு கிளறி விருப்பமான சாலட்டுடன் பரிமாறவும்.
அலுமினிய பேப்பர் இல்லையென்றால் தட்டில் லேசாக எண்ணெய் தடவியும் வைக்கலாம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #63 on: October 24, 2014, 11:47:59 PM »

சேப்பங்கிழங்கு வறுவல்

சேப்பங்கிழங்கு-8
இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம்-1
மிளகாய்த்தூள்-11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 3 மேசைக்கரண்டி
தனியா-1 ஸ்பூன்
தேவையான உப்பும் எண்ணெயும்


வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
தேங்காயை தனியா, மிளகாய்த்தூளுடன் கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காது அரைத்துக்கொள்ளவும்.
சேப்பங்கிழங்குளை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
வெங்காயத்தைச் சேர்த்து முறுகும்வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
வெந்த கிழங்குகளை துண்டங்கள் செய்து எண்ணெயில் பொன் முறுவலாக வறுத்து எடுக்கவும்.
கிழங்கு ஆறியதும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,உப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து சிறிது எண்ணெயில் 5 நிமிடம் கிளறி எடுக்கவும்


arusuvai
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 2 3 [4]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!