விநாயகர் சதுர்த்தி - 25.08.2017
My Community
February 24, 2018, 08:50:15 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 [2]   Go Down
  Print  
Author Topic: விநாயகர் சதுர்த்தி - 25.08.2017  (Read 711 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #20 on: August 24, 2017, 12:22:10 PM »

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

விநாயகர் பெயர் காரணம்

'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். 'நாயகர்" என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

கணபதி - 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது.  'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.


விநாயகர் வடிவ விளக்கம்

யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிற்றைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்தத் தத்துவம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #21 on: August 24, 2017, 12:22:54 PM »

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும்.

அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருக்க வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 பூக்கள் வகைளையும், 21 வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை செய்வது சிறப்பு.

விநாயகரைப் பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்குக் கொழுக்கட்டை மட்டுமில்லாமல் எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #22 on: August 24, 2017, 12:23:39 PM »

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

- dinamani
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #23 on: August 24, 2017, 12:42:36 PM »

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்...
 
சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -  1 கிண்ணம்
பாசிப் பருப்பு  - 50கிராம்
முந்திரிப் பருப்பு - 20கிராம்
காய்ந்த திராட்சை  - 20 கிராம்
சுக்கு பொடி -  1தேக்கரண்டி
ஏலக்காய் -  8
தேங்காய் சிறியது -  1
நெய் -  150 கிராம்
மண்டை வெல்லம்  - 600 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப


செய்முறை:  

வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி (1 பங்கு), பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #24 on: August 24, 2017, 12:44:12 PM »

கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள்:
கொண்டைக் கடலை  -  2 கிண்ணம்
தேங்காய்த் துருவல்   -   2 மேசைக்கரண்டி
வறுத்து பொடிக்க:
கடலைப் பருப்பு  -  2 மேசைக்கரண்டி
மல்லித் தூள்  -  1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய்   -  3
உப்பு  -  தேவையான அளவு


தாளிக்க:
எண்ணெய்   -   1 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு   -   1 தேக்கரண்டி
கறி வேப்பிலை  -  சிறிது
பெருங்காயம்   -  2 சிட்டிகை அளவு


செய்முறை:

கொண்டைக்கடலையைத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.  பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.  பின்பு அவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயம், வேகவைத்த கொண்டைக்கடலையைச்  சேர்த்து கலந்து கொள்ளவும்.  அதனுடன் பொடித்த மசாலா மற்றும்  தேங்காய் துருவல் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி இறக்கிவிடவும்.  சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #25 on: August 24, 2017, 12:45:52 PM »

பூர்ணம் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2  கிண்ணம்
 (வறுத்தது) எள் - 2 கிண்ணம்
வேர்க்கடலை - 2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 கிண்ணம்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1  தேக்கரண்டி
 வெல்லம் - 100 கிராம்
 உப்பு - சிறிது


செய்முறை: 

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.   வெல்லத்தைப் பொடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும்  வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பூர்ணம் தயார்.

கொழுக்கட்டை செய்ய:

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அதில்  சிறிது  உப்பு சேர்த்த சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.  பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும். இப்போது பூர்ணம் கொழுக்கட்டை ரெடி.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 [2]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!