சகல செல்வங்களும் கிடைக்கும் லட்சுமி குபே
My Community
February 24, 2018, 08:37:24 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: சகல செல்வங்களும் கிடைக்கும் லட்சுமி குபே  (Read 218 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: October 17, 2017, 04:16:54 PM »

சகல செல்வங்களும் கிடைக்கும் லட்சுமி குபேர பூஜை

தீபாவளி நாளில் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெறமுடியும். தனது தாயிடம் இருந்து நவநிதியங்களைப் பெற்றவர் குபேரர். அவரை தீபாவளி நாளில் வழிபடுவோருக்கு அவர் நவநிதியங்களையும் அள்ளித்தருவார்.

ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் அதாவது பொருள் செல்வம் மட்டுமின்றி, வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும்.

திருவேங்கடவனுக்கே செல்வம் அளித்து கை கொடுத்து உதவிய குபேரன் விஷ்வரஸ் என்பவருடைய மகன். குபேரன் லட்சுமி தேவியின் பரமபக்தனாக பூஜித்து வந்ததால் தேவியின் பூரண கடாட்சம் கிடைக்கப்பெற்று பெரும் செல்வந்தனாக மாறியவன் என்பது மட்டுமின்றி குபேரனை பூஜித்தால் செல்வம் தழைத்தோங்கி வறுமை ஓழியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: October 17, 2017, 04:17:48 PM »

செல்வம் தரும்

லட்சுமி தீபாவளி தினத்தன்று செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையினால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும்.

பிணி, மூப்பு, துன்பம் தொலையும். சுக்லாம் பரதரம் சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: October 17, 2017, 04:18:25 PM »

குபேர பூஜை

செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியையும் அவளால் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தையும் உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வின் துன்பங்கள் விலகி ஓடும்.

லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள் என்பதால்"ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'என 108 முறை சொல்லலாம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: October 17, 2017, 04:19:04 PM »

செல்வம் செழிக்கும்

தரித்திரம் நீங்கி செல்வம் செழிக்க ஒவ்வொரு இல்லத்திலும் மகாலட்சுமி- குபேரனுடைய பூஜையை பூஜை விதிப்படி செய்து வந்தால் மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் திருமகளின் அருள் கடாட்சம் மட்டுமின்றி அவளால் நிரந்தர செல்வந்தனாக மாற்றப்பட்ட ஸ்ரீ குபேரனுடைய அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வு தழைத் தோங்கும் என்பதே உண்மை.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: October 17, 2017, 04:19:51 PM »

இனிமையான நைவேத்தியம்

 தீப ஒளித் திருநாளில் லஷ்மி குபேர பூஜை செய்து சகல செல்வங்களை பெறுவோம். நாட்டில் மழை வளத்தை பெருக்கச் செய்யவும் லஷ்மி குபேர பூஜை நல்லது. லட்சுமி-குபேர பூஜைக்கு வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். நைவேத்தியம் செய்யும் போது கடினமான பதார்த்தங்களை நைவேத்யம் செய்யாமல் மாவுப்பொருட்களைத் தயாரித்து நைவேத்தியம் செய்வது சிறந்தது.

- tamil.oneindia
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #5 on: October 17, 2017, 04:33:03 PM »

தீபாவளி நாளில் குபேரனை வழிபடுங்க!

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரர் சென்னை வண்டலூர் ரத்தினமங்கலத்தில் வீற்றிருக்கிறார். தீபாவளி நாளில் இவரை வழிபட்டால் வளமான வாழ்வு அமையும்.
தல வரலாறு: பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும், திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாயின் பிள்ளையாக பிறந்தவன் ராவணன். முதலில் இலங்கையின் அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றினான்.

குபேரனின் விமானம் எங்கு சென்றாலும் தங்கம், நவரத்தினங்களை சிந்தியபடி செல்லும். குபேரன் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதால், ராவணனும் வாழ்வில் சோதனைகளைச் சந்தித்தான். குபேரன் சிவபக்தனாக இருந்தான். கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார்.

அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதியுடன் காட்சி தந்தார். அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், 'ஆகா.... இப்படி ஒரு தேவியை இதுநாள் வரை பார்த்ததில்லையே' என்று எண்ணினான். இதையறிந்த பார்வதி கோபம் கொண்டாள்.
குபேரனின் பார்வையை மறையச் செய்தாள். குபேரன் மன்னிப்பு கேட்க, பார்வதியும் மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும், அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை தோன்றும்படி செய்தார் சிவன்.

அத்துடன் சிவன் குபேரனின் பக்தியை வியந்து எட்டு திசைக் காவலர்களில் ஒருவராக நியமித்தார். லட்சுமி தேவியும் குபேரனை தன தானியத்தின் அதிபதியாக்கினாள். பணம், தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை வழங்கினாள்.

லட்சுமி குபேர பூஜை: சிரித்த முகம், இடது கையில் சங்க நிதி, வலது கையில் பதும நிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் காட்சியளிக்கிறார். மகாலட்சுமி, குபேரரை ஒருசேர தரிசித்தால் செல்வ வளம் உண்டாகும். இழந்த பணம், சொத்து விரைவில் கிடைக்கும்.

திருப்பதி செல்லும் முன் இத்தலத்தில் தரிசிப்பது சிறப்பு. வளமான வாழ்வு பெற பவுர்ணமி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை நடத்துகின்றனர்.

விருப்பம் நிறைவேற குபேரருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், பைரவர், அரைக்காசு அம்மன், செல்வ முத்துக் குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. கோசாலையும் உள்ளது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: October 17, 2017, 04:33:49 PM »

குபேர மந்திரம்

ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே தன தான்ய
ஸம்ருத்திம்மே தேஹி தபாய ஸ்வாஹா!

என்ற குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். வியாழனும், பூச நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் இதை ஜெபிப்பது நல்லது.

எப்படி செல்வது: சென்னை வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் சாலையில் 9 கி.மீ.,

விசேஷ நாட்கள்: தீபாவளி, அட்சய திரிதியை, வைகுண்ட ஏகாதசி

நேரம்: அதிகாலை 5:30 - மதியம் 12:00 மணி; மாலை 4:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 94440 20084

அருகிலுள்ள தலம்: 34 கி.மீ.,ல் சதுரங்கப்பட்டினம் மலைமண்டலப்பெருமாள் கோயில்

- தினமலர்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!