வழிபாடு - பொங்கல்
My Community
May 27, 2018, 09:35:52 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 [2]   Go Down
  Print  
Author Topic: வழிபாடு - பொங்கல்  (Read 406 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #20 on: January 13, 2018, 06:28:07 PM »

சூரியன் 108 போற்றி

உடல்நலம், மனநலம் கிடைக்க சூரியனின் ௧௦௮ போற்றியை பொங்கல் நன்னாளில் பக்தியுடன் படியுங்கள்.

ஓம் அதிதி புத்திரனே போற்றி
ஓம் அளப்பதற்கு அரியனே போற்றி
ஓம் அரசாளச் செய்பவனே போற்றி
ஓம் அர்க்க வனத்தானே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி பிழம்பே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆதி தெய்வமே போற்றி
ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் ஆன்ம தத்துவமே போற்றி
ஓம் ஆதித்ய ஹ்ருதயமே போற்றி
ஓம் ஆதித்ய பகவானே போற்றி
ஓம் ஆரோக்கியம் தருவாய் போற்றி
ஓம் இருள் நீக்குபவனே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிர மூர்த்தியே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரி தேரோனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் உள்ளம் அமர்வாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிவடிவானவனே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஓராழித் தேரோனே போற்றி
ஓம் ஓய்வில்லாதவனே போற்றி
ஓம் ஓங்காரம் துதிப்பவனே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கண் கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கம் இல்லாதவனே போற்றி
ஓம் கமல மலர் ஏற்பவனே போற்றி
ஓம் கர்ணனின் தந்தையே போற்றி
ஓம் கனலாகக் காய்பவனே போற்றி
ஓம் கண்ணின் மணியே போற்றி
ஓம் கற்பரசி சேவகனே போற்றி
ஓம் கண்டியூர் வாழ்பவனே போற்றி
ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்சின வேந்தனே போற்றி
ஓம் காலை உதிப்பவனே போற்றி
ஓம் கார்த்திகை அதிபதியே போற்றி
ஓம் கீழ்த்திசையோனே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கு அருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமை பிரியனே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் செஞ்சுடர் ஞாயிறே போற்றி
ஓம் சனீஸ்வரர் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சி தெய்வமே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சித்திரை நாயகனே போற்றி
ஓம் சிம்ம ராசிநாதனே போற்றி
ஓம் சிரஞ்சீவியானவனே போற்றி
ஓம் சுட்டெரிப்பவனே போற்றி
ஓம் சுயம் பிரகாசனே போற்றி
ஓம் நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சவுரமத நாயகனே போற்றி
ஓம் சூரியனார்கோவில் அமர்ந்தாய் போற்றி
ஓம் செம்மேனிப் பெம்மானே போற்றி
ஓம் செம்மலர் பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையோனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதம் தாங்கியவனே போற்றி
ஓம் சோழர் குல தெய்வமே போற்றி
ஓம் தந்தையாக திகழ்பவனே போற்றி
ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தேகநலம் தருபவனே போற்றி
ஓம் நடுநாயகம் ஆனவனே போற்றி
ஓம் நன்னிலம் அருள்பவனே போற்றி
ஓம் நலம் தருபவனே போற்றி
ஓம் நளாயினிக்கு அருள்பவனேபோற்றி
ஓம் நிகரில்லாத தலைவா போற்றி
ஓம் நீதியைக் காப்பாய் போற்றி
ஓம் நெருப்பின் வடிவே போற்றி
ஓம் நோய் தீர்ப்பாய் போற்றி
ஓம் பகல் காரணனே போற்றி
ஓம் பரஞ்சோதியானாய் போற்றி
ஓம் பாவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் பாலைநில தேவா போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
ஓம் புகழ் மிக்கவனே போற்றி
ஓம் புத்தி அளிப்பவனே போற்றி
ஓம் புத்தொளி சுடரே போற்றி
ஓம் மதிஒளி ஆனாய் போற்றி
ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் மார்த்தாண்டனே போற்றி
ஓம் முழுமுதல் பொருளே போற்றி
ஓம் முக்கோண கோலனே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவி குலத் தலைவனே போற்றி
ஓம் விடியலின் காரணமே போற்றி
ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
ஓம் வானவர் தலைவா போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி


- dinamalar
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #21 on: January 13, 2018, 06:32:59 PM »

கோதுமை தானம்

பொங்கலன்று ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது சிறந்தது. ஏனெனில், சூரிய பகவானுக்கு கோதுமை மிகவும் பிடிக்கும். கோதுமை பண்டங்களை நைவேத்யம் செய்யலாம்.

- dinamalar

Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #22 on: January 13, 2018, 06:36:48 PM »

பொங்கல் வைக்கும் முறை

நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளை பெறலாம்.

வீட்டு வாசலில் திருவிளக்கை, ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணை பிடித்து அம்பாளாக கருதி வையுங்கள்.

 இலையில் பச்சரிசி, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #23 on: January 13, 2018, 06:37:18 PM »

பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்து கொள்ளுங்கள். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி, அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள்.சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள்.

பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள்.

தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். குலவையிட தெரியாதவர்'பொங்கலோ பொங்கல்' என்று உரக்க சொல்லலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள்.

பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஸ்லோகம், பாடல் பாடுங்கள்.

முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து, காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் ஒற்றுமையுடன் சாப்பிட வேண்டும்.

இப்படி பொங்கலிட்டு வழிபட்டால் சூரியபகவானின் அருளால் நலமுடன் வாழ்வீர்கள்.


- dinamalar
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #24 on: January 13, 2018, 07:14:07 PM »

செங்கதிரோன் வழிபாடு

பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்.

பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும், கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும். ஆற்றல் பெருகும். திறமைகள் பளிச்சிடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும். நவக்கிரகங்களில் ராஜகிரகம் என்று கருதப்படும் சூரியன், பயிர்கள் தளைக்கவும், உயிர்கள் வாழவும் வழிவகுக்கும். செங்கதிரவனை உத்ராயண காலத் தில் தை முதல் நாள் வழிபடுவது சிறப்பாகும்.

சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!


என்று துதிப்பாடல்களைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்; வசதிகள் பெருகும்.

- dailythanthi
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #25 on: January 13, 2018, 07:15:28 PM »

மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம்

மாட்டுப்பொங்கல் அன்று கோ பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும்.

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். 15.1.2018 அன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அல்லது அதிகாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். கோ பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி வழிபடுவது நல்லது.

நைவேத்தியத்தில் கொஞ்சம் நம் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான், சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும். நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.

பரங்கி இலை அல்லது வாழை இலையில் பொங்கலை வைத்து மாட்டிற்கு பிரசாதமாக வழங்குவது உத்தமம். அன்றைய தினம் அதிகாலையில் சகல சிவாலயங்களிலும் நந்திக்கு உணவு மாலை அணிவிப்பார்கள். அந்த அலங்காத்தைக் கண்டு ரசித்து வழிபட்டால் நலங்களும், வளங்களும் வந்து சேரும்.


- dailythanthi
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #26 on: January 13, 2018, 07:16:55 PM »

தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைக்க உகந்த நேரம்...

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது. வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும்.

பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப் பொங்கல்’ என்றும் சொல்லிப் பலவிதமான காய் கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு.

கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும். சோறு படைக்கும் பொழுது, சூரியன் இருந்து சாப்பிடும் விதத்தில் இலையின் நுனிப்பகுதியும், அடிப்பகுதியும் அமைவது சிறப்பாகும். கதிரவன் வழிபாடு கனிவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.


- dailythanthi
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 [2]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!