அட்சய திருதியை... ஏப்ரல் 18
My Community
April 25, 2018, 10:30:25 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1] 2   Go Down
  Print  
Author Topic: அட்சய திருதியை... ஏப்ரல் 18  (Read 61 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: April 14, 2018, 02:28:57 PM »

ஏப்ரல் 18 ... அட்சய திருதியைபொன் கிடைத்தாலும் புதன் கிடைப்பதில்லையாம் அந்தப் புதனில் பிறக்கிறது இந்த அட்சய திருதியை.

“அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூசை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள். இந்த வருடம் சித்திரை மாதம் 5 ஆம் நாள் (18-04-2018) அன்று அட்சய திருதியை வருகிறது.

அட்சய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.


-shakthionline
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: April 14, 2018, 02:32:19 PM »

அள்ள அள்ளப் பெருகும் அட்சய திருதியை

தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ‘‘அட்சய திருதியை’’ என போற்றப்படுகிறது. ‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.

ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள்.

சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திருதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.

பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்!

தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: April 14, 2018, 02:33:21 PM »

இந்த அட்சய திருதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திருதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும்.

ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.

அட்சய திருதியை நாளில் பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும்.

அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.


-shakthionline
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: April 14, 2018, 02:35:42 PM »

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்

அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.


- shakthionline
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: April 14, 2018, 02:39:26 PM »

அட்சய திருதியை சிறப்பு என்ன?

அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள்.

முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர்.
அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாள் திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் 3ம் நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. எப்படி அட்சயப்பாத்திரத்திற்கு பெருமை உள்ளதோ அதுபோல் தான் அட்சய திருதியைக்கும் உண்டு. இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் நற்பலனை தரும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #5 on: April 14, 2018, 02:40:22 PM »

* இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் குறையாமல் நிறைந்து இருக்கும். அட்சய திருதியையன்று மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்நாளில் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு பொருளை தானம் செய்து நாம் வாங்கும் எந்த பொருளும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

* அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேர பூஜை நடத்துவது அதிக பலன்களை தரும்.

* அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றையும் தாண்டி 4 ஏழைகளுக்கு தானம் வழங்குவது அதிக சிறப்பு.

* அட்சய திருதியை புனித ஸ்தலங்களில் நீராடி இறைவனை வணங்கினால் பாவங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவு வழங்கலாம். அதுவும் பசு மாட்டுக்கு வாழைப்பழம் வழங்கி வணங்கினால் நல்லது. பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக நம்புவதால், வாழைப்பழம் வழங்குவது அனைத்து இறைவனுக்கு படைப்பதற்கு சமம்.

* அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி. ஒருபடி உப்பு வாங்கி வீட்டில் வைத்தாலும் பலன் கிடைக்கும்.

* ஜைன மதத்திலும் அட்சய திருதியைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஜைனர்கள் அட்சய திஜ் என்று அழைக்கின்றனர். இதை மிக புனிதமான நாளாகவே கருதுகின்றனர். தானம் செய்வதற்கு ஜைனர்கள் இந்த நாளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

* அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி வீடு கட்டுதல், வியாபார நிறுவனங்களை தொடங்குதல், புனித சுற்றுலா செல்வது போன்றவற்றையும் செய்யலாம்.

* பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் வசிக்கும் யாதவர்கள், இந்நாளை விளைபொருட்கள் விதைப்புக்கு உகந்த நாளாக கருதுகின்றனர்.


- shakthionline
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: April 14, 2018, 02:46:03 PM »

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். அப்படியாக அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும்பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.

அட்சய திரிதியையின் மற்ற சிறப்புகள்:

தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான். பகவான் பரசுராமர் அவதரித்த நாள், புனித நதி கங்கை பூமியை தொட்ட நாள், குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள், ஆதி சங்கரர் செல்வத்தை கொட்டிக் கொடுக்கும் ஸ்லோகமாகிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றிய நாள், குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள், திரேதா யுகம் ஆரம்பமான நாள், வியாசர் மஹா பாரதம் எழுத ஆரம்பித்த நாள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #7 on: April 14, 2018, 02:47:57 PM »

அட்சய திருதியை தினத்தில் செய்ய வேண்டியவை:

இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் புதிய தொழில் தொடங்கலாம். பூமி பூஜை செய்வதற்கு உகந்த நாள். ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பிதுர்க்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் அவர்களது ஆசீர்வாதம் பெற்று சிறப்பாக வாழலாம்.

அட்சய திருதியை நாளில் விரதம் இருக்கும் முறை:

அட்சய திருதியை நாளன்று விடியும் முன் எழுந்து சுத்தமாக நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி கோலம் போட்டு அதன் மீது ஒரு பலகையை வைக்கவும். பின் பலகையின் மீது கோலம் போட்டு ஒரு சொம்பில் சந்தன கும்குமம் இட்டு அதில் நீரை நிரப்பி அதன் மீது பெரிய தேங்காயை வைத்து மாவிலைகளை அதனைச் சுற்றி அதுக்கி கலசம் போல் தயார் செய்ய வேண்டும்.

பின் அந்த கலசத்தின் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் அருகில் புதிதாக வாங்கிய பொன், பொருள்களை வைத்து, பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். பிறகு அதற்கு கற்பூர தீபாராதனைக் காட்டி வணங்கினால் வளமான செல்வம் பெருகும்.

நண்பர்களே! நலமும், வளமும் தரும் இந்த அட்சய திருதியை நாளில் நாமும் இத்தகைய விரதம் மற்றும் பூஜைகள் செய்து அளவில்லாத செல்வம் பெற்று வாழலாமே!

அட்சய திருதியை வரும் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். உணவு, வஸ்திரம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். பசுவுக்கு கீரை வகைகளை வழங்கலாம். இந்நாளில் அன்னதானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.

இந்த அட்சய திருதியை தினத்தன்று வெண்மை நிறப் பொருட்கள் விசேஷமானது ஆகும். வெண்ணிற மல்லி பூ, வெண்பட்டு ஆடை, வெண்ணிற பால் பாயசம் இவைகளைப் பயன் படுத்துதல் சிறப்பாகும். அட்சய திருதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். வசதி உள்ளவர்கள் வாங்கலாம். வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி லட்சுமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம். அனைவருக்கும் செல்வம் பெருக வாழ்த்துக்கள்...


செல்வராஜ்  திருமங்கலம்
-thinaboomi
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #8 on: April 14, 2018, 02:51:52 PM »

இந்நாள் ஒரு பொன்னாள்
அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?

* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் பெருகியது.

* லட்சுமி குபேரர் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றார்.

* திருமாலின் மார்பில் திருமகள் இடம்பிடித்தாள்.

* பரசுராமர், பலராமர் அவதரித்த நன்னாள்.

* முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகை படைத்தார்.

* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட, தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.

* திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.

* திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #9 on: April 14, 2018, 02:55:35 PM »

அட்சய திரிதியை கனகதாரா யாகம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்குள்ள திருக்காலடியப்பன் (கிருஷ்ணன்) கோயிலில் அட்சய திரிதியை முன்னிட்டு கனகதாரா யாகம் நடக்கிறது.

ஏப்.16ல் யாகம் துவங்குகிறது. ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் விதமாக, 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்துவர். லட்சுமி யந்திரம் வைத்து 10,008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்படும். ஏப்.18 அட்சய திரிதியை அன்று காலை 9:00 மணிக்கு தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளால் லட்சுமி, விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படும்.


பிரசாத நெல்லிக்கனிகளுக்கு அலைபேசி: 93888 62321, 93495 53051

- dinamalar
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10 on: April 14, 2018, 03:01:58 PM »

அட்சய திரிதியை

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.    எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.  அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்: முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #11 on: April 14, 2018, 03:03:54 PM »

துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:  இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்: இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #12 on: April 14, 2018, 03:04:41 PM »

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான-தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.  அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #13 on: April 14, 2018, 03:06:19 PM »

அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!

*அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடந்து வருகிறது.  உலக நன்மைக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகவும் அட்சய திரிதியையை ஒட்டி யாகம் நடப்பது மற்றொரு சிறப்பம்சம்.

* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.

* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #14 on: April 14, 2018, 03:07:13 PM »

* காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.

* அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்றால் திருமணம் தான் என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.

அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.


- dinamalar
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #15 on: April 18, 2018, 01:05:10 PM »

அள்ள, அள்ள குறையாத அட்சய திருதியை
    
தங்கம் வாங்க உகந்த நாள் அட்சய திருதியை என்று அனைவராலும் நம்பப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

தங்கம் வாங்க உகந்த நாள் அட்சய திருதியை என்று அனைவராலும் நம்பப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ‘அட்சய’ என்றால் குறைவில்லாதது என்று பொருள். அட்சய திருதியை மகாலட்சுமிக்கு உகந்த நாள்.

அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு மூன்றாம் பிறை அன்று வருவதே அட்சய திருதியை நாள். அள்ள, அள்ள குறையாத பாத்திரம் அட்சய பாத்திரம். கானகத்தில் பாண்டவர்களுக்கும், அவர்களை தேடிவந்தவர்களுக்கும், கிருஷ்ணருக்கும் கூட வயிறார உணவு அளித்த பாத்திரம் அது. இதே நாளில் தான் பரசுராம அவதாரமும் நிகழ்ந்தது. அட்சய பாத்திரத்தில் எப்படி அள்ள, அள்ள குறையாதோ, அதே போல இன்றைய தினமும் தங்கம் வாங்கினால் வளம் செழிக்கும்.

பரசுராமரின் பிறந்தநாள்

இந்த நல்ல நாளில் நமது முன்னோர்களையும், பெரியவர்களையும் வணங்குவது நல்லது. அதே போல பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்குதல், ஏழை, எளிய மக்களுக்கு உடை அளித்தல் போன்ற உதவிகளை செய்தால் நிறைந்த செல்வத்துடன் வாழ வழிவகுக்கும். அட்சய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமரின் பிறந்தநாளாக கொண்டாடப்படு கிறது. மணிமேகலைக்கு இந்த நாளில் தான் அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனால் அன்று முதல் மக்களின் பசியை போக்குவதையே தனது கடமையாக கொண்டிருந்தாள்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #16 on: April 18, 2018, 01:10:09 PM »

தானம்

சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன், சாப விமோசனம் பெற்று, அட்சய திருதியை அன்று மீண்டும் வளரத்தொடங்கினார். இதன் காரணமாகவே அட்சய திருதியை அன்று செய்யும் காரியங்கள் எல்லாம் வளர்பிறை போல வளரும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது தற்போது பழக்கமாக மாறி விட்டது. அதே நேரத்தில் தங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. உணவு பொருட்களை வாங்கினாலும் நன்மை தான். உப்பு, அரிசி என எது வாங்கினாலும் சிறப்பு தான். அதே போல உடை, குடிநீர், உணவு போன்றவற்றை தானமாக வழங்கினால் சிறந்த பலனை தரும்.

ஜோதிட ரீதியாக பார்க்கும்போது நவக்கிரகங்களில் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் அழைக்கின்றோம்.


வாழ்த்து

இந்த 2 கிரகங்களும் ஒரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலம் தான் அட்சயதிருதியை. அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள் ஆகும். பெரியோர் அனைவரையும் வாழ்த்தும் போது சூரிய, சந்திரன் போல் நிலைத்து வாழ்க என்று வாழ்த்துவர். அதாவது நீண்ட காலம் நிலைத்து வாழ சூரிய, சந்திரனும் வலுப்பெற்றிருப்பது மிக முக்கியம். எனவே தான் அப்படி வாழ்த்துகிறார்கள்.

மேலும் சூரியன் என்பவர் பிதுர்காரகர், சந்திரன் மாத்ருகாரகர். இவர்கள் இருவரும் பலம் பெற்றும் இருக்கும் நன்னாள் அட்சயதிருதியை என்பதால் அதில் நாம் மேற்கொள்ளும், பூஜைகளும், தானதர்மங்களும், தர்ப்பணங்களும், தொழில் மற்றும் திருமண நிகழ்வுகளும், பொருட்களை வாங்குதல் என அனைத்தும் பன்மடங்காகும், தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் பன்மடங்கு பெருகி நம்மை வாழ்விக்கும்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #17 on: April 18, 2018, 01:11:23 PM »

ஆக்கப்பூர்வமான பணிகள்

அதே போல அள்ள, அள்ள குறையாத அட்சய திருதியை அன்று தொடங்கும் எந்த தொழிலும் தடையின்றி முன்னேற்றத்தை காணும் என்பதும் நம்பிக்கை. இன்றைய தினம் தொடங்கும் எந்த ஆக்கப்பூர்வமான பணிகளும் வளர்ச்சியை கொடுக்கும்.

தானதர்மம் செய்ய பெரிய செல்வந்தராக தான் இருத்தல் வேண்டும் என்பது இல்லை. நம்மால் இயன்ற சிறு பொருளையாவது வழங்குவது மிக நன்மை பயக்கும். அட்சயதிருதியை நன்னாளில் நீர்மோர், தயிர்சாதம், பானகம் போன்றவைகளை கூட மக்களுக்கு தானமாக வழங்குதல் அனைத்து பலன்களை தரும்.


- maalaimalar
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #18 on: April 18, 2018, 01:15:04 PM »

அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை
   
அட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.

சித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.

‘அட்சயம்’ என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். திருதியை திதியில் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெரும் வளர்ச்சி அடையும் என்றும், காரிய விருத்தி உண்டாகும் என்றும் பழமொழிகள் கூறுகின்றன. உத்திரகாலாமிருதம் என்ற நூல் வளர் பிறை திருதியை நாளில் மேற்கொள்ளும் எந்த காரியமும் மிகுந்த வளர்ச்சியடையும் எனக்கூறுகிறது. அதுபோல் மூன்றாம் பிரையை பார்த்து விட்டு அம்பாளை தொழுதால் எல்லா வளமும் நலமும் பெறலாம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.

அட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.


- அட்சய திருதியை சிறப்புகள்

- அட்சய திருதியை அன்றுதான் திரேதா யுகம் ஆரம்பமாகியது என்பர். பரசுராமன் அவதரித்த திருநாள் அட்சய திருதியை. அட்சய திருதியை நாளை வட நாட்டவர் அகதீஜ் என்று கொண்டாடுகின்றனர். அந்நாளில் சிவபெருமானை வணங்கி பெரும் பாக்கியம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அட்சய திருதியை நன்னாளில் மேற்கொள்ளப்படும் தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்பணம் போன்றவற்றுக்கு பன்மடங்கு பலன் கிடைக்கும் என்று ரிஷிகள் கூறுகின்றனர். அதுபோல தீர்த்த ஸ்நானம் செய்வது தேவர்களுக்காக தானம் வழங்குவது போன்றவையும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #19 on: April 18, 2018, 01:16:40 PM »

பசி பிணி தீர்க்கும் நன்னாள்

அட்சய திருதியை அன்றுதான் மணிமேகலைக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனை கொண்டு மணிமேகலை அனைவரின் பசிப்பிணியை தீர்த்தாள்.

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரெளபதி கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரே ஒரு பருக்கை உணவை வழங்க அது கிருஷ்ணர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளின் பசிப் பிணியை போக்கியதாம்.

குசேலன் கிருஷ்ணருக்கு கொடுத்த அவல் பசிப் பிணியை போக்கிய அதேவேளையில் குசேலன் இல்லம் குபேரன் இல்லமாக மாறியது. இது நடைபெற்றதும் அட்சய திருதியை நாளில் தான்.

அதனாலேயே நாம் செய்யும் தானங் கள் பன்மடங்கு நற்பலனை அளிக்கக் கூடிய நாளாக அட்சய திருதியை நன்னாள்.

அட்சய திருதியை நன்னாளில் உப்பை தானமாக அளிப்பது மிகவும் சிறந்தது. ஆனால் எவரும் வீட்டின் உப்பை எடுத்து தானம் தர தயங்குவர். அதனால் தான் தன் வீட்டு உப்பு போட்டு சமைத்த உணவை தானமாக வழங்கிட வேண்டும் என்று கூறினர். உணவை தானமாக வழங்கிய பின்னரே மகாலட்சுமியை பூஜித்து அருள் பெற வேண்டும் என பெரியோர் கூறுகின்றனர்.


அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை

அட்சய திருதியை நன்னாளில் யாகம், ஜபம், தியானம், ஹோமம், பித்ரு பூஜை செய்யலாம். வீட்டில் மகாலட்சுமி பூஜை மேற்கொள்ளலாம். ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் யாகங்களில் கலந்து கொள்ளலாம். தான தருமங்கள் செய்யலாம். புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்கள் போடுதல் போன்றவை செய்யலாம். குழந்தைகளை புதிய கலைகள் பயில சேர்த்து விடலாம். தானங்கள் எனும்போது பழங்கள், ஆடைகள், அன்னதானம், நீர்மோர், பானகம், தானியங்கள், பருப்புகள் போன்றவற்றையும் தானம் செய்திடலாம். நம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.

- maalaimalar
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1] 2   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!